MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • தங்க நகைப்பிரியர்களுக்கு குஷியான நியூஸ்.! இன்று ஒரு சவரன் விலை என்ன.?

தங்க நகைப்பிரியர்களுக்கு குஷியான நியூஸ்.! இன்று ஒரு சவரன் விலை என்ன.?

தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், எதிர்காலத்தில் அதன் விலை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இன்று தங்கம் விலை என்ன என்பதை தற்போது பார்க்கலாம்

2 Min read
Author : Ajmal Khan
Published : Jan 07 2025, 09:53 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Gold rate

Gold rate

தங்கத்தின் மீதான ஈர்ப்பு

தங்கத்தின் மீதான ஆர்வம் இந்திய மக்களிடம் அதிகமாக உள்ளது. இதன் காரணமாகவே மற்ற நாடுகளை விட இந்தியா மக்கள் அதிகளவு தங்கத்தை வாங்குகிறார்கள். விஷேசங்கள், திருமணங்கள், பண்டிகை காலங்களில் மக்கள் தங்க நகைகளை வாங்க விருப்பப்படுவார்கள். இதன் காரணமாகவே தங்க நகைக்கடைகளில் எப்போதும் கூட்டம் காணப்படுகிறது. மேலும் தங்கத்தில் முதலீடு செய்தால் எப்போதும் நஷ்டம் ஏற்படாது என்ற காரணத்தால் தங்கத்தில் அதிகளவு மக்கள் முதலீடு செய்து வருகிறார்கள்,

25
Gold rate

Gold rate

அவசர தேவைக்கு உதவும் தங்க நகைகள்

திடீரென ஏற்படும் மருத்துவ செலவு, கல்வி செலவு போன்றவற்றிற்கும் தங்க நகைகளானது பெரும் உதவியாக உள்ளது. குறிப்பாக நிலம், வீடு, கார் போன்றவற்றை அடமானம், விற்பனை செய்வதை விட தங்க நகைகளை ஒரே நிமிடத்தில் விற்பனை செய்ய முடியும்.

இதன் காரணமாகவே தங்கத்தை அதிகளவு மக்கள் வாங்கி வைக்கிறார்கள். மேலும் நடுத்தர வர்க்க மக்களும் தங்களின் குழந்தைகளின் திருமண நிகழ்விற்காக சிறிது சிறிதாக தங்க நகைகளை வாங்குகிறார்கள்.
 

35
gold rate

gold rate

உச்சத்தை தொட்ட தங்கம் விலை

தங்கத்தின் விலையானது வரலாறு காணாத வகையில் தொடர்ந்து உச்சத்தை தொட்டு வருகிறது. கடந்த 2024ஆம் ஆண்டில் ஒரு சவரன் 44ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது தற்போது 60ஆயிரம் என்ற உச்சத்தை தொட்டுள்ளது. எனவே தங்கத்தின் விலையானது வரும் நாட்களில் மேலும் அதிகரிக்க கூடும் என பொருளாதார வல்லுநர்கள் தொடர்ந்து கூறி வருகிறார்கள். 

45
Gold rate in tamilnadu

Gold rate in tamilnadu

நேற்றைய தங்கம் விலை

2025ஆம் ஆண்டு தொடக்கம் முதல் தங்கத்தின் விலையானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனிடையே கடந்த சனிக்கிழமை சற்று குறைந்த தங்கத்தின் விலையானது  நேற்று எந்தவித மாற்றம் இல்லாமல் விற்பனையானது. அதன் படி ஒரு கிராம் ரூ. 7,215-க்கும் ஒரூ சவரன் ரூ.57,720-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

55
gold rate today

gold rate today

தங்கம் விலை என்ன.?

இன்றும் தங்கத்தின் விலையானது  எந்த வித மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ. 7,215-க்கும் ஒரூ சவரன் ரூ.57,720விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 3 நாட்களாக தங்கத்தின் விலை உயராத காரணத்தால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். 

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
தங்க விலை
தங்க நகை
இன்றைய தங்கம் விலை

Latest Videos
Recommended Stories
Recommended image1
ரூ.20 கட்டினால் ரூ.2 லட்சம் காப்பீடு.. ஏழை, நடுத்தர குடும்பங்களுக்கு பாதுகாப்பு திட்டம்
Recommended image2
ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. இனி டிக்கெட் புக் செய்தால் கேஷ்பேக்.. சூப்பர் ஆஃபர்!
Recommended image3
இந்த 5 விஷயங்கள் நடந்தால்.. உங்கள் வங்கி கணக்கை பயன்படுத்த முடியாது.. உடனே செக் பண்ணுங்க
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved