நகைப்பிரியர்களுக்கு ஷாக் செய்தி.! அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை- இன்று ஒரு கிராம் என்ன விலை தெரியுமா.?
தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகிறது. இந்தியாவில் தங்கம் முதலீடாகவும், உணர்வுப்பூர்வமான மதிப்பாகவும் பார்க்கப்படுகிறது. கடந்த சில நாட்களாக விலையில் மாற்றமில்லாமல் இருந்தாலும், நீண்டகால அடிப்படையில் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Gold rate
தங்கமும் இந்திய மக்களும்
தங்கம் என்பது ஆடம்பர ஆபரணங்களாக இருந்தாலும் இந்திய மக்கள் அதிகளவு விரும்பி அணியும் ஆபரணமாக உள்ளது. அந்த வகையில் மற்ற நாடுகளை விட இந்திய மக்களே தங்கத்தை போட்டி போட்டு வாங்குகிறார்கள். இன்றைய கால கட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு சிறந்த வழியாக தங்கம் உள்ளது. இதன் காரணமாகவை தங்கத்தின் விலை அதிகரித்தாலும் நகைக்கடைகளில் கூட்டம் அதிகமாகவே உள்ளது.
gold investment
அவசர தேவைக்கு உதவும் தங்கம்
இந்தியாவில், தங்கத்தை நகைகளாக வாங்குவது என்பது முதலீடு சார்ந்த விஷயமாக இல்லாமல், அது உணர்வுப்பூர்வமான மதிப்பாகவும் இருக்கிறது,. குறிப்பாக விஷேச நாட்கள், திருமண நிகழ்விற்கு அணிந்து செல்ல அதிகளவு மக்கள் விரும்புவார்கள். இதன் காரணமாகவும் தங்க நகைகளை கையிருப்பில் இருந்தாலும் அவரச தேவைக்கு பெரும் உதவியாக இருந்து வருகிறது. இதனால் நடுத்தர வர்க்க மக்கள் கூட தங்கத்தை வாங்கி வைக்க விருப்பப்படுகிறார்கள். மேலும் தங்கள் பெண் குழந்தைகளின் திருமண சேமிப்பாகவும் தங்கத்தை வாங்குகிறார்கள்.
gold interest rate
ஏறி இறங்கும் தங்கம் விலை
தங்கத்தின் விலையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 40ஆயிரம் ரூபாய் அளவிற்கு உயர்ந்துள்ளது. இந்த நிலையில் வரும் நாட்களில் தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. அந்த வகையில் அமெரிக்க அதிபர் தேர்தலைத் தொடர்ந்து அமெரிக்க டாலரில் ஏற்பட்ட மாற்றம் தங்கம் விலையின் போக்கு மொத்தமாக மாறியுள்ளது.
Gold rate
விலையில் மாற்றம் இல்லை
இந்த நிலையில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து தங்கத்தின் விலையானது ஏற்றமாகவே இருந்து வருகிறது. அதே நேரத்தில் தங்கத்தின் விலையானது கடந்த 3 தினங்களாக மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. அந்த வகையில் நேற்று ஒரு கிராம் ரூ. 7,215-க்கும் ஒரூ சவரன் ரூ.57,720-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
gold rate today
தங்கத்தின் விலை இன்று
இன்று தங்கத்தின் விலையானது அதிகரித்துள்ளது. அதன் படி ஒரு கிராமுக்கு 10 ரூபாய் அதிகரித்து 7ஆயிரத்து 225 ரூபாய்க்கும், சவரனுக்கு 80 ரூபாய் அதிகரித்து 57ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.