MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்டா.? இன்று ஒரு கிராம் தங்கம் விலை என்ன தெரியுமா.?

நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்டா.? இன்று ஒரு கிராம் தங்கம் விலை என்ன தெரியுமா.?

தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாக இருப்பதால் முதலீட்டாளர்கள் கவனமாக இருக்க வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில் தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ஆயிரம் ரூபாய் வரை அதிகரித்துள்ளது. தங்கம் விலை ஏற்றம் காரணமாக மக்கள் கவலையடைந்துள்ளனர்.

2 Min read
Author : Ajmal Khan
Published : Dec 22 2024, 10:04 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
gold rate today

gold rate today

தங்கத்தின் மீதான முதலீடு

தங்கத்தின் மீதான ஈர்ப்பு இந்திய மக்களிடம் அதிகமாகவே உள்ளது. இதன் காரணமாக தங்கத்தின் விலை அதிகரித்தாலும் குறைந்தாலும் நகைக்கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. குறிப்பாக தங்கத் ஒரு சிறந்த முதலீடாக மக்கள் பார்க்கிறார்கள். கார் உள்ளிட்ட ஆடம்பர பொருட்கள்  வாங்கும்போது பல லட்சம் செலவு செய்ய வேண்டிய நிலை இருக்கும். அதன் மதிப்பு நாளுக்கு நாள் குறையுமே தவிர உயராது. அதே நேரத்தில் தங்கத்தில் முதலீடு செய்வதால் எப்போதும் நஷ்டம் ஏற்படாமல் லாபத்தை மட்டுமே கொடுத்து வருகிறது.

25
today gold rate

today gold rate

உயர்ந்து வரும் தங்கம் விலை

அந்த வகையில் கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ஆயிரம் ரூபாய் வரை அதிகரித்துள்ளது. எனவே தங்கத்தை வாங்க மக்கள் அதிகம் ஆர்வம் காட்டுகிறார்கள். மேலும் திருமண, விஷேச நாட்களில் நகைகளை மக்கள் அதிகளவு வாங்கி வருகிறார்கள்.  தங்கமானது அத்தியாவசிய தேவைக்கு பெரிய அளவில் உதவியாக உள்ளது. குறிப்பாக அவசர கால மருத்துவ சிகிச்சை போன்ற நேரத்தில் தங்கத்தை உடனடியாக விற்கவோ, அடமானம் வைக்கவோ முடிகிறது.

35
Gold price chennai

Gold price chennai

இமாலய உச்சத்தை தொட்ட விலை

எனவே கைவசம் தங்க நகைகள் இருந்தால் நடுத்தரவர்க்க மக்களுக்கு ஆபத்து கால நண்பனாக தங்கம் உள்ளது. இந்த நிலையில் தான் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் ஏறி இறங்கி வருகிறது. கடந்த அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி தினத்தில் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டது. அதன் படி ஒரு சவரன் 59,640 ரூபாய் என்ற இமாலய இலக்கை எட்டியது. இதனால் தங்கத்தை இனி வாங்க முடியாதோ என மக்கள் அச்சப்பட்ட நிலையில் திடீரென தங்கம் விலை சரிய தொடங்கியது.

45
today gold rate in chennai

today gold rate in chennai

ஏறி இறங்கும் தங்கம் விலை

இதனால் 60ஆயிரம் ரூபாய் என்ற உச்சத்தில் இருந்து 55ஆயிரம் முதல் 56ஆயிரம் வரை விற்பனையானது. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு தங்கத்தின் விலை 1200 ரூபாய் வரை குறைந்திருந்தது. இந்தநிலையில் நேற்று நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் தங்கத்தின் விலை உயர்ந்தது. இதன் படி கிராம் ஒன்றுக்கு 60 ரூபாய் அதிகரித்து 7100 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 480 ரூபாய் அதிகரித்து 56ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
 

55
gold price today

gold price today

இன்றைய தங்கம் விலை

இன்று தங்க வர்த்தக சந்தை விடுமுறை காரணமாக தங்கத்தின் விலையில் எந்தவித மாற்றமின்றி நேற்றைய விலையான ஒரு சவரன் 56,800 ரூபாய்க்கு விற்பனையாகிறது. நாளை வாரத்தின் முதல் நாள் தங்கத்தின் விலை ஏறுமா.? இறங்குமா என மக்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள்  

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
இன்றைய தங்கம் விலை
தங்க நகை
இன்றைய தங்கம் விலை

Latest Videos
Recommended Stories
Recommended image1
விமான பயணிகளுக்கு ஜாக்பாட்.. இனி டிக்கெட் கேன்சல் பண்ணா ஒரு ரூபாய் கூட நஷ்டம் இல்ல.. 100% ரீபண்ட்!
Recommended image2
கர்ப்பிணிகளுக்கு ரூ.5,000 பணம்.. இந்த அரசு உதவி தெரியுமா? முழு விளக்கம் உள்ளே
Recommended image3
தனிநபர் கடன் vs கிரெடிட் கார்டு EMI.! எது மலிவானது, எது அதிக செலவு வைக்கும்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved