MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • நகைப்பிரியர்களுக்கு ஷாக்.! தங்கத்தின் விலை அதிரடியாக உயர்வு- ஒரு கிராம் எவ்வளவு தெரியுமா.?

நகைப்பிரியர்களுக்கு ஷாக்.! தங்கத்தின் விலை அதிரடியாக உயர்வு- ஒரு கிராம் எவ்வளவு தெரியுமா.?

தங்கத்தின் விலை கடந்த 10 ஆண்டுகளில் ஒரு சவரனுக்கு 40-45 ஆயிரம் ரூபாய் வரை அதிகரித்துள்ளது. 2024ல் 27% அதிகரித்துள்ள தங்கம் விலை, 2025ல் மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சனிக்கிழமை ஒரு சவரன் தங்கம் ரூ.57,080க்கு விற்பனையானது. இன்று தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது

2 Min read
Author : Ajmal Khan
| Updated : Dec 30 2024, 09:49 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Gold rate

Gold rate

தங்கமும் முதலீடும்

பொன்னிலும் நிலத்திலும் முதலீடு செய்தால் எப்போதும் நஷ்டம் ஏற்படாது என கூறுவார்கள். ஆனால் நிலத்தில் முதலீடு செய்வதில் ஆபத்து இருப்பதால் நகையில் முதலீடு செய்யவே அதிகமானோர் ஆர்வம் காட்டுகின்றனர். அந்த வகையில் தங்கத்தில் முதலீடு செய்பவர்களுக்கு எப்போதும் இழப்பு ஏற்படாது. அதற்கு ஏற்றார் போல தங்கத்தின் விலையானது கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் ஒரு சவரனுக்கு மட்டும் 40ஆயிரம் ரூபாய் முதல் 45 ஆயிரம் வரை அதிகரித்துள்ளது. இதனால் தங்கத்தை அதிகளவு வாங்கி வைத்தவர்களுக்கு ஜாக்பாட்டாகவே உள்ளது. 
 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25
gold investment

gold investment

ஏறி இறங்கிய தங்கம் விலை

தங்கத்தின் விலையானது கடந்த சில மாதங்களாக ஏறி இறங்கி வருகிறது. அதன் படி கடந்த அக்டோபர் 31ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் 60ஆயிரம் ரூபாய் என்ற உச்சத்தை தொடும் நிலைக்கு சென்றது. இதனால் அதிர்ச்சி அடைந்த நடுத்தர வர்க்க மக்கள் தங்கத்தை வாங்க முடியோதா என பரிதவித்தனர். ஆனால் அடுத்த சில நாட்களில் வந்த அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளால் தங்கத்தின் விலையானது குறைந்தது. ஒரு வாரத்திலையே ஒரு சவரனுக்கு 4ஆயிரம் ரூபாய் குறைந்தது.

35
gold rate in tamilnadu

gold rate in tamilnadu

தங்கம் விலை உயர்வுக்கு காரணம் என்ன.?

எனவே தங்கத்தின் விலை வரும் நாட்களில் உயரும் என்பதால் இது தான் நல்ல சான்ஸ் என தங்கத்தை மக்கள் வாங்கி குவிக்க தொடங்கினர். இருந்த போதும் அடுத்த ஓரிரு வாரங்களில் தங்கத்தின் விலை மீண்டும் உயர தொடங்கியது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. தங்கத்தின் விலையானது இந்த 2024ஆம் ஆண்டில் மட்டும்  27% அதிகரித்துள்ளது. அமெரிக்க மத்திய வங்கி வட்டியை அதிகரிக்கும் போது கூட தங்கம் விலையும் உயர்ந்தது.

45
gold rate

gold rate

தங்கம் விலை - அதிகரிக்கும் முதலீடு

2025ஆம் ஆண்டில்  தங்கத்தின் விலையானது மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதற்கு ஏற்றார் போல் தங்கத்தின் விலையும் தற்போது சற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது. நகை ஆடம்பரப் பொருளாக இருந்தாலும் அதன் மதிப்பு ஒவ்வொரு நாளும் உயர்ந்து வருவதால் அதன் மீதான முதலீடும் அதிகரிக்கிறது. கடந்த சனிக்கிழமை  ஒரு கிராமுக்கு 15 ரூபாயும், ஒரு சவரனுக்கு 120 ரூபாயும் குறைந்தது. அதன் படி  ஒரு கிராம் தங்கம் ரூ.7,135க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.57,080க்கும் விற்பனை செய்யப்பட்டது.
 

55
gold rate today

gold rate today

இன்றைய தங்கம் விலை என்ன.?

நேற்று ஞாயிற்றுக்கிழமை தங்க வர்த்தக சந்தை விடுமுறை காரணமாக தங்கத்தின் விலையில் மாற்றிமில்லை. இன்று வாரத்தின் முதல் நாள் தங்கத்தின் விலையானது உயர்ந்துள்ளது. ஒரு கிராமுக்கு 15 ரூபாய் உயர்ந்து 7150 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு 120 ரூபாய் அதிகரித்து 57ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
இன்றைய தங்கம் விலை

Latest Videos
Recommended Stories
Recommended image1
அரசு ஊழியர்களின் மாத சம்பளம் எப்போது அதிகரிக்கும்? 8வது ஊதியக் குழுவில் சம்பள அதிரடி வருமா? புது தகவல்
Recommended image2
Petrol Saving:பெட்ரோல் விலை ஏறினாலும் கவலை வேண்டாம்? இந்த 10 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க
Recommended image3
RBI : ஆர்பிஐ புதிய ரூல்ஸ்.. இனி ரூ.15,000க்கு மேல் ஓடிபி இல்லாமல் பேமெண்ட் ஆகாதா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved