சந்தோஷத்தில் நகைப்பிரியர்கள்.! இன்றும் குறைந்தது தங்கம் விலை.! ஒரு கிராம் இவ்வளவு தானா.?
தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. சமீபத்தில் விலை குறைந்தாலும், பண்டிகை காலங்களில் மீண்டும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. டாலர் மதிப்பு உயர்வு மற்றும் தேவை குறைவு போன்ற காரணங்களால் விலை சரிவை சந்தித்தது.
Gold rate
தங்கத்தில் முதலீடு- இந்திய மக்கள் ஆர்வம்
தங்கத்தின் மீதான ஆர்வம் இந்திய மக்களிடம் அதிகமாக உள்ளது. திருமண விழாக்கள், விஷேச நாட்களில் தங்கத்தை அணிவதற்கு விருப்பப்படுவார்கள். இதன் காரணமாக நகைக்கடைகளில் நகைப்பிரியர்களின் கூட்டம் எப்போதும் அலைமோதும்.
அந்த வகையில் தங்கத்தின் விலையானது நாளுக்கு நாள் ஏறி இறங்கி வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சவரன் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. தற்போது ஒரு சவரன் 60ஆயிரம் என்ற உச்சத்தை தொடும் நிலையில் உள்ளது.
GOLD PRICE
ஒரு சவரன் 2 லட்சமாக உயரும்
எனவே வரும் நாட்களில் தங்கத்தின் விலையானது இன்னும் பல மடங்கு அதிகரிக்கும் என கூறப்படுகிறது. குறிப்பாக ஒரு சவரன் ஒரு லட்சம் முதல் 2 லட்சம் என்ற இமாலாய விலையை தொடும் என பொருளாதார வல்லுநர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். இதனால் நடுத்தர வர்க்க மக்கள் தங்கத்தை வாங்க முடியாதோ என்ற கவலை அடைந்துள்ளனர். இந்த நிலையில் தான் யாரும் எதிர்பார்க்காத வகையில் தங்கத்தின் விலையானது திடீரென சரிவை சந்தித்தது. அடுத்தடுத்த நாட்களில் விலை குறைந்து 56ஆயிரம் ரூபாய் முதல் 57 ஆயிரம் வரை ஒரு சவரன் தங்கம் விற்பனை செய்யப்பட்டது.
GOLD JEWELLERY
திடீரென குறைந்த தங்கம் விலை
தங்கத்தின் விலையானது டாலர் அடிப்படையில் கணக்கிடப்படும் போது டாலரின் மதிப்பு உயர்வாக இருப்பதால் மற்ற நாடுகள் தங்கத்தில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டாத நிலை உள்ளது. மேலும் தங்கத்தின் தேவை குறைந்ததாலும் விலையானது குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. இருந்த போதும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் போன்ற விஷேச நாட்கள் அடுத்தடுத்து வர இருப்பதால் தங்கத்தை வாங்க மக்கள் அதிகளவு விருப்பப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே வரும் நாட்களில் தங்கத்தின் விலை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.
GOLD INVESTMENT
நேற்றைய தங்கம் விலை
தங்கத்தில் முதலீடு செய்தால் எப்போதும் நஷ்டம் ஏற்படாது. அந்த அளவிற்கு லாபத்தை மட்டுமே கொடுக்கும் தங்கத்தை வாங்க மக்கள் போட்டி போடுகிறார்கள். தங்கத்தின் விலையானது நேற்று மாற்றமில்லாமல் ஒரு கிராம் 7100 ரூபாய்க்கும், ஒரு சவரன் 56ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
gold rate today
இன்றைய தங்கம் விலை என்ன.?
இன்று தங்கத்தின் விலையானது குறைந்துள்ளது. கிராம் ஒன்றுக்கு 10 ரூபாய் குறைந்து 7,090 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து 56ஆயிரத்து 720 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலையானது குறைந்திருப்பது நகைப்பிரியர்களை மகிழ்ச்சி அடையவைத்துள்ளது.