தங்கத்தின் விலை இன்றும் குறைந்ததா.? ஒரு சவரன் இன்றைய விலை என்ன.? மக்களுக்கு ஷாக் கொடுத்ததா.?
தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்திற்கு அமெரிக்க தேர்தல் முடிவுகள், கிரிப்டோகரன்சி மதிப்ப போன்ற பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. கடந்த 13 நாட்களில் சவரனுக்கு 4160 ரூபாய் குறைந்த நிலையில், இன்று தங்கத்தின் விலை என்ன தெரியுமா.?
GOLD INVESTMENT
தங்கத்தில் முதலீடு
தங்கத்திலும் நிலத்திலும் முதலீடு செய்தால் எந்த வித நஷ்டமும் ஏற்படாது என்பதால் இந்த இரண்டிலும் மக்கள் அதிகளவில் முதலீடு செய்து வருகிறார்கள். அதிலும் தங்கத்தில் முதலீடு செய்வதை மக்கள் அதிகளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள், உலகில் உள்ள அனைத்து மக்களையும் விட இந்திய மக்களே தங்கத்தை வாங்கி குவிக்கிறார்கள். இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. உதாரணமாக நகையாக வாங்கி அணிவது, வீட்டு விசேஷங்களுக்காக நகைகளை சேர்ப்பது மற்றும் உறவினர் அல்லது நண்பர்கள்விசேஷங்களுக்குப் பரிசாக தருவதற்காக வாங்ப்படுகிறது
Gold price today
நகைகளை வாங்க காரணம் என்ன.?
டுத்ததாக தங்கத்தில் முதலீடு செய்து அதன் விலை பலமடங்கு உயர்ந்த பிறகு விற்பனை செய்வதற்கு முக்கிய லாபம் தரும் பொருளாக உள்ளது. மேலும் வீடு, நிலம், கார் உள்ளிட்ட பொருட்களை கடைகளில் அடமானம் வைப்பதை விட நகைகளை வங்கி உள்ளிட்ட இடங்களில் எளிதாக அடகு வைத்து அவசர தேவைக்கு பணத்தை பெற முடியும். மேலும் நகைகளை அணிவது சமூகத்தில் அந்தஸ்தை உயர்த்து காட்டுவதாக மக்கள் எண்ணுவதால் அதிகளவில் நகை வாங்கும் நிலையும் உள்ளது. இந்த காரணங்கள் காரணமாகவே தங்க நகைக்கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. தங்கம் நகை விலை உயர்ந்தாலும் எதிர்கால சேமிப்பாகவே தங்கத்தில் முதலீடு தொடர்கிறது.
Gold price chennai
புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை
ந்த வகையில் கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் ஒரு சவரன் தங்க நகைக்கு 40ஆயிரம் ரூபாய் அளவிற்கு விலை உயர்ந்துள்ளது. இது வரும் நாட்களில் ஒரு சவரன் ஒரு லட்சம் முதல் 2 லட்சமாக அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. இந்த நிலையில் தான் தங்கம் விலை வரலாற்றில் இல்லாத வகையில் புதிய உச்சத்தை கடந்த தீபாவளி தினத்தன்று எட்டியது. அன்று ஒரு சவரன் தங்கம் விலை 59ஆயிரத்து 640 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த விலையானது வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் என கணிக்கப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் தங்கம் விலை சரசரவென குறைந்தது. கடந்த 13 நாட்களில் மட்டும் ஒரு சவரனுக்கு 4160 ரூபாய் குறைந்தது.
GOLD INVESTMENT
இன்றைய தங்கம் விலை என்ன.?
இந்த நிலையில் தங்கம் விலை குறைவிற்கு பல காரணங்கள் கூறப்படுகிறது. குறிப்பாக அமெரிக்கா தேர்தல் முடிவுகள், கிரிப்டோகரன்சி மதிப்பு அதிகரிப்பு, அமெரிக்க டாலர் குறியீடு, அமெரிக்க பங்குச் சந்தைகளின் ஏற்றம், அதிகரிக்கும் பணவீக்கம் போன்ற காரணங்களால் தங்கம் விலை தற்போது குறைந்து வருவதற்கான காரணங்களாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்தநிலையில் தங்கத்தின் விலையானது இன்று சற்று அதிகரித்துள்ளது. அந்த வகையில் ஒரு கிராம் இருக்கு பத்து ரூபாய் அதிகரித்துள்ளது அதன்படி இன்று ஒரு கிராம் தங்கம் 6,945 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரன் ஒன்றுக்கு 80 ரூபாய் அதிகரித்து 55,560 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது