MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • Gold Price Today: மேலும் மேலும் விலை ஏறும் தங்கம்.! உச்சத்தை தொட இதுதான் காரணமா?!

Gold Price Today: மேலும் மேலும் விலை ஏறும் தங்கம்.! உச்சத்தை தொட இதுதான் காரணமா?!

சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை மீண்டும் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. சர்வதேச பொருளாதார மாற்றங்கள், அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு மற்றும் வரவிருக்கும் இந்திய பண்டிகை கால தேவை அதிகரிப்பு ஆகியவை இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன.

2 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Sep 22 2025, 10:02 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
12
விண்ணை தொட்ட தங்கம் விலை.!
Image Credit : Pixabay

விண்ணை தொட்ட தங்கம் விலை.!

தங்கம் விலை மீண்டும் உச்சத்தை தொட்டுள்ளது. அதேபோல் வெள்ளி விலையும் தங்கத்திற்கு ஈடுகொடுத்து மேலே சென்றுகொண்டு இருக்கிறது. இதற்கு சர்வதேச காரணங்களை விடை இந்தியாவில் தேவை அதிகரித்துள்ளதே காரணம் என விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை இன்று சாதகமில்லாத வகையில் உயர்வை சந்தித்துள்ளது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 70 ரூபாய் உயர்ந்து 10,360 ரூபாயாகவும், சவரன் விலை 560 ரூபாய் அதிகரித்து 82,880 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது. இதேபோல் வெள்ளி விலை கிராமுக்கு 3 ரூபாய் உயர்ந்து 148 ரூபாயாக, கிலோ பார்வெள்ளி விலை 1,48,000 ரூபாயை எட்டியுள்ளது. இந்த விலை உயர்வு திடீரென ஏற்பட்டது அல்ல; பல்வேறு காரணிகள் அதற்கு வழிவகுத்துள்ளன.

முதலில், உலக சந்தையில் தங்கத்தின் விலை உயர்வு நேரடியாக இந்திய சந்தையிலும் பிரதிபலிக்கிறது. குறிப்பாக அமெரிக்காவில் வட்டி விகிதம் குறையும் எனும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளதால் முதலீட்டாளர்கள் தங்கத்தில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அமெரிக்க டாலரின் மதிப்பு குறைவதும் தங்கத்தை அதிகம் வாங்க வைக்கும் முக்கிய காரணமாக அமைந்துள்ளது. உலக பொருளாதாரத்தில் நிலவும் அச்சங்கள், பங்குச்சந்தை ஏற்றத் தாழ்வுகள், எண்ணெய் விலை உயர்வு ஆகியவை முதலீட்டாளர்களை “பாதுகாப்பான முதலீடு” எனப்படும் தங்கத்தை வாங்கும் பக்கம் திருப்பியுள்ளன.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
22
தங்கம் விலை மேலும் அதிகரிக்குமாம்.!
Image Credit : Pixabay

தங்கம் விலை மேலும் அதிகரிக்குமாம்.!

இந்தியாவில் பண்டிகை மற்றும் திருமண சீசன் தொடங்கவுள்ள நிலையில் தங்கத் தேவையும் இயல்பாக அதிகரித்துள்ளது. நவராத்திரி, தீபாவளி, கார்த்திகை தீபம், திருமண காலங்கள் போன்ற நிகழ்வுகள் நெருங்கி வரும் சூழலில் நகைக்கடைகளில் அதிகளவு தேவை உருவாகியுள்ளது. இந்த கூடுதல் தேவை விலையை மேலும் தூக்கி நிறுத்தியுள்ளது.

வெள்ளி விலையும் விலக்கு இல்லை. வெள்ளி தொழில்துறைகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக சோலார் பேனல், எலெக்ட்ரானிக்ஸ், மருத்துவ உபகரணங்கள் போன்ற துறைகளில் அதன் தேவை தினசரி அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தங்கத்தின் விலை அதிகரிக்கும்போது, மாற்று முதலீடாக பொதுமக்கள் வெள்ளியை நாடுவதும் விலையை உயர்த்தும் காரணமாக இருக்கிறது. மேலும், சர்வதேச கமாடிட்டி சந்தையிலும் வெள்ளி விலை உயர்வதை இந்திய சந்தை நேரடியாக உணர்கிறது.

மொத்தத்தில், தங்கமும் வெள்ளியும் விலை உயர்வுக்குக் காரணமாக உலகளாவிய பொருளாதார மாற்றங்கள், அமெரிக்க டாலர் மதிப்பு குறைவு, முதலீட்டு சாய்வு, பண்டிகை-திருமண கால தேவை, தொழில்துறை பயன்பாடு ஆகியவை குறிப்பிடத்தக்கவை. வரவிருக்கும் தீபாவளி மற்றும் திருமண காலங்களில் விலை மேலும் உயரும் வாய்ப்பும் உள்ளது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
இன்றைய தங்கம் விலை
இன்றைய தங்கம் விலை
வணிகம்
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
8th Pay Commission: ரூ.30,000 வாங்குபவர்களுக்கு ரூ.90,000 ஆகுமா? 8வது ஊதியக் குழுவின் சம்பளக் கணக்கீடு இதோ!
Recommended image2
DMart Offers: வெளியில் ரூ.300.. டிமார்ட்டில் ரூ.50-க்கே கிடைக்குமா? தீபாவளி பொருட்களுக்கு அதிரடி சலுகை
Recommended image3
ட்ரோன் முதல் விண்வெளி ஜி.பி.எஸ் வரை: 21 வயதில் சிலிக்கான் வேலியையே அதிர வைக்கும் இந்திய ஜென்-இசட் இளைஞர்கள்!
Related Stories
Recommended image1
அரசு வேலைக்காக தவம் இருக்கீங்களா? 12ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்! அரசுப் பள்ளியில் 7000+ உதவியாளர் வேலை!
Recommended image2
தீபாவளியில் நடக்கப்போகும் சர்ப்ரைஸ்.. தங்கத்தின் மீது முதலீடு எப்போது செய்ய வேண்டும்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved