ட்ரம்பின் அதிரடி முடிவு.. இனி தங்கம் விலை குறைய வாய்ப்பே இல்ல! உடனே வாங்குங்க!
அமெரிக்க அதிபர் ட்ரம்பின் வர்த்தகப் போர் உலகப் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. டாலரின் மதிப்பு வீழ்ச்சியடைந்து வருவதும் தங்கத்தின் விலை உயர்வுக்குக் காரணமாக அமைந்துள்ளது.

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.7940க்கு விற்பனை செய்யப்படுகிறது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எடுத்த முடிவுகள் காரணமாக தங்கம் விலை மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆம். ட்ரம்ப் உலகம் முழுவதும் வர்த்தக போரை தொடங்கி உள்ளார். எதிரி நாடுகளை விட நட்பு நாடுகள் மீது தான் ட்ரம்ப் அதிக கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார். மெக்சிகோ, கனடா மீது 25% வரியையும், சீனா மீது 10% வரிகளையும் விதித்தார்.
சீனா, மெக்சிகோ, கனடா ஆகியவை அமெரிக்காவின் வர்த்தக பற்றாக்குறையில் முதல் 3 இடங்களை வகிக்கின்றன. அதிகபட்சமாக சீனா 30.2 சதவீதம், மெக்சிகோ 19 சதவீதம், கனடா 14 சதவீதம் வரி பற்றாக்குறையில் முக்கிய பங்கு வகிக்கிறது. அமெரிக்காவில் அதிக அளவு எஃகு உற்பத்திக்கும் 25% வரி விதிப்பதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்காவில் அதிகளவில் இந்திய எஃகு பயன்படுத்தப்படும் நிலையில், ட்ரம்ப்பின் இந்த முடிவு அமெரிக்காவின் ஏற்றுமதியை பாதிக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த வர்த்தக போர் காரணமாக இந்தியாவில் தங்கத்தின் விலை தொடர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
வர்த்தக போர் காரணமாக உலகம் முழுவதும் பணத்தின் மதிப்பு ஏற்ற இறக்கமாக இருக்கும். இதனால் பலரும் தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புவார்கள். தனிநபர்கள், அமைப்புகள், நாடுகள் கூட தங்கத்தில் அதிக முதலீடு செய்யலாம். பொதுவாக வர்த்தக போர் சமயத்தில் உலகம் முழுவதுமே பங்குச்சந்தையில் கடும் வீழ்ச்சி இருக்கும். இந்தியாவிலும் அதே நிலை தான் தொடர்கிறது.
ஆனால் தங்கத்தின் மதிப்பு தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்கும். இதனால் சில ஆண்டுகளுக்கு தங்கம் உயர்ந்து கொண்டே இருக்கும். அமெரிகக் வங்கிகள் வட்டி மதிப்பை 50 அடிப்படை புள்ளிகள் குறைத்துள்ளது. இந்த முடிவு டாலரை பலவீனப்படுத்தி உள்ளது. இதனால் தங்கம் இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்து வருகிறது. வரும் நாட்களிலும் தங்கம் விலை உயரும்.
இந்தியாவிலும் பணத்தின் மதிப்பு குறைவதால், பலரும் பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்வார்கள். இதனால் தங்கத்தின் மதிப்பு உயருவதுடன், தங்கத்தின் தேவையும் அதிகரிக்கும். இதனால் தங்கம் விலை நாளுக்கு நாள் உயரும்.