மிஸ் பண்ணாதீங்க.! சரசரவென குறைந்த தங்கம் விலை- ஒரு கிராம் எவ்வளவு தெரியுமா.?
தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது. இதனால் நகைப்பிரியர்களுக்கு சற்று ஆறுதல் அளித்துள்ளது.

மிஸ் பண்ணாதீங்க.! சரசரவென குறைந்த தங்கம் விலை- ஒரு கிராம் எவ்வளவு தெரியுமா.?
தங்கத்தின் விலையானது நாளுக்கு நாள் ஏறி வருகிறது. எப்போதும் இல்லாத ஆண்டாக தங்கத்தின் விலையானது 2025ஆம் ஆண்டில் புதுப்புது உச்சத்தை தொட்டு வருகிறது. அதற்கு முக்கிய காரணமாக அமெரிக்க அதிபராக டிரம்ப் உள்ளார். பல்வேறு நாடுகளின் மீது வரி விதிப்பின் காரணமாக வர்த்தக போர் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
மேலும் இந்திய பங்குச்சந்தை கடந்த சில மாதங்களாக வீழ்ச்சியை சந்தித்து வரும் நிலையில், அதன் பாதிப்பு தங்கம் விலையிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதன் காரணமாக பங்கு சந்தையில் முதலீடு செய்வதற்கு பதிலாக தற்போது தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பும் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. தங்கத்தின் விலையானது கடந்த ஆண்டு இறுதியில் 60ஆயிரத்தை கடந்த நிலையில் இரண்டு மாத காலத்தில் ஒரு சவரனுக்கு 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரை அதிகரித்துள்ளது.
பிப்.11-ஆம் தேதி வரலாற்றில் முதல்முறையாக தங்கம் விலை, சவரனுக்கு ரூ.64,000 என்ற விலையைத் தாண்டியது. இந்த விலையானது நேற்றும் எப்போதும் போல் அதிகரித்தது. அந்த வகையில் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.8,075க்கும், சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.64,600க்கும், விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் தங்கத்தின் விலையானது நீண்ட நாட்களுக்கு பிறகு யாரும் எதிர்பார்க்காத் வகையில் விலை குறைந்துள்ளது. அதன் படி கிராமுக்கு 25 ரூபாய் குறைந்து 8.050 ரூபாய்க்கும் சவரனுக்கு 200 ரூபாய் குறைந்து 64ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை சற்று குறைந்திருப்பது நகைப்பிரியர்களுக்கு ஒரளவு மன நிம்மதியை கொடுத்துள்ளது.