- Home
- Business
- 3 நாளாக தொடர்ந்து சரிந்து வரும் தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவு குறைந்ததா.? நகைப்பிரியர்கள் கொண்டாட்டம்
3 நாளாக தொடர்ந்து சரிந்து வரும் தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவு குறைந்ததா.? நகைப்பிரியர்கள் கொண்டாட்டம்
இந்தியாவில் தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்ட நிலையில், தற்போது தொடர்ந்து மூன்று நாட்களாக குறைந்து வருகிறது. சவரனுக்கு 920 ரூபாய் வரை குறைந்ததால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

3 நாளாக தொடர்ந்து சரிந்து வரும் தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவு குறைந்ததா.?
தங்கத்தின் மீதான ஆர்வம் மற்றும் ஈர்ப்பு இந்திய மக்களிடம் அதிகமாக உள்ளது. இதன் காரணமாகவே நகைகளை அதிகளவு வாங்கு குவிக்கும் நாடாக இந்தியா உள்ளது. மற்ற நாடுகளை விட இந்திய மக்கள் தான் தங்கத்தின் அதிகளவு முதலீடு செய்து வருகிறார்கள். இந்த நிலையில் தான் இந்திய மக்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் தங்கத்தின் விலையானது புதிய, புதிய உச்சத்தை தொட்டது. வரலாறு காணாத விலை உயர்வை எட்டியது.
உச்சத்தை தொட்ட தங்கம் விலை
இதனால் நகைப்பிரியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்திருந்தனர். 2025ஆம் ஆண்டு தொடக்கமே நகைப்பிரியர்களை எதிர்பாராத அதிர்ச்சியை கொடுத்தது. 60ஆயிரத்தை தொட்ட தங்கம் விலை அடுத்த 50 நாட்களில் 64ஆயிரத்தை கடந்தது. இதனால் திருமணம் உள்ளிட்ட விஷேசங்களுக்காக தங்க நகைகளை வாங்க திட்டமிட்டவர்களுக்கு கூடுதல் நிதி சுமை ஏற்பட்டது. மேலும் நடுத்தர வர்க்க மக்கள் தங்கத்தை வாங்க முடியாத நிலை நீடித்து வந்தது.
இந்த நிலையில் தான் தங்கத்தின் விலையானது திடீரென குறைந்து வருகிறது. அதன்படி நேற்று முன் தினம் அதிரடியாக கிராமுக்கு 25 ரூபாய் குறைந்து 8.050 ரூபாய்க்கும் சவரனுக்கு 200 ரூபாய் குறைந்து 64ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்றும் தங்கத்தின் விலையானது சரிந்தது. அதன் படி கிராமுக்கு 40 ரூபாய் குறைந்து 8,010 ரூபாய்க்கும், சவரனுக்கு 320 ரூபாய் குறைந்து 64ஆயிரத்து 80 ரூபாய்க்கு விற்பனையானது.
இன்றும் தங்கத்தின் விலையானது சரசரவென குறைந்துள்ளது. அதன் படி கிராம் ஒன்று 50 ரூபாய் குறைந்து 7,960 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 400 ரூபாய் குறைந்து 63ஆயிரத்து 63,680 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அடுத்தடுத்து 3 நாட்கள் தங்கம் விலை 920 ரூபாய் குறைந்துள்ளதால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.