நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சி கொடுத்ததா தங்கம்.! இன்று ஒரு சவரன் விலை என்ன தெரியுமா.?
தங்கத்தின் விலை சமீபத்தில் அதிகரித்து பின்னர் குறைந்தது. மார்ச் மாதம் வரை தங்கம் விலை குறையும் எனவும், அடுத்த 2 ஆண்டுகளில் கிராம் 9000 ரூபாய் வரை உயரும் எனவும் பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
GOLD
தங்கம்- அதிகரிக்கும் முதலீடு
தங்கத்தின் விலையானது நாளுக்கு நாள் ஏறி இறங்கி வருகிறது. அந்த வகையில் கடந்த அக்டோபர் 31ம் தேதி 59,640 ரூபாய் என்ற வரலாற்றில் புதிய உச்சத்தை தொட்டது. இதனால் வரும் நாட்களில் தங்கத்தின் விலையானது மேலும் அதிகரித்து ஒரு லட்சம் ரூபாயை தொடும் என கணிக்கப்பட்டது. இதனால் நடுத்தர வர்க்க மக்கள் தங்கத்தை வாங்க முடியாத நிலை ஏற்பட்டது. ஆனால் அடுத்த சில நாட்களிலேயே கணிப்புகளை பொய்யாக்கி தங்கத்தின் விலை சரசரவென குறைந்தது.
GOLD RATE
ஏறி இறங்கும் தங்கம் விலை
அந்த வகையில் அடுத்த 10 நாட்களில் 4120 ரூபாய் வரை குறைந்தது. 60ஆயிரத்தில் இருந்து 56ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது. அமெரிக்க தேர்தல் முடிவுகள் காரணமாக தங்கத்தின் விலையானது அதிரடியாக குறைய முக்கிய காரணமாக அமைந்தது.
இதனையடுத்து நகைக்கடைகளில் மக்களின் கூட்டம் அலைமோதியது. தங்கத்தின் விலை எந்த நேரமும் மீண்டும் அதிகரிக்கும் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்தனர். தற்போது கிடைத்த சான்ஸை மிஸ் செய்யக்கூடாது என நகைகளை வாங்கி குவித்தனர்.
GOLD PRICE
நகைகளை போட்டி போட்டு வாங்கிய மக்கள்
பெரும் பணக்காரர்கள் பல லட்சங்களில் தங்கத்தில் முதலீடு செய்தனர். நடுத்தர வர்க்க மக்களோ பழைய நகைகளை அடகு வைத்தோ, கடன் வாங்கியோ புதிய நகைகளை வாங்கினர். தங்களது குழ்ந்தைகளின் திருமண சேமிப்பாக தங்கத்தின் மீது முதலீடு செய்தனர். இந்த நிலையில் தங்கம் விலை வரும் நாட்களில் எப்படி இருக்கும் என பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் கூறுகையில், தங்கம் கிராம் ஒன்று 6800 ரூபாய் வரை குறைந்து விற்பனையாகும் எனவும் இப்படி குறையும் நிலை மார்ச் மாதம் வரை தொடரும் என கூறினார்.
GOLD
உச்சத்தை தொட காத்திருக்கும தங்கம்
மேலும் அதற்கு கீழாக தங்கத்தின் விலை குறையாது என கூறினார். அடுத்த 2 ஆண்டுகளில் ஒரு கிராம் தங்கம் 9ஆயிரம் ரூபாய் என்ற உச்சத்தை தொடும் எனவும் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். இதனிடையே நேற்று தங்கத்தின் விலையானது கிராமுக்கு 40 ரூபாய் அதிகரித்து 7ஆயிரத்து 130 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
ஒரு சவரனுக்கு 320 ரூபாய் அதிகரித்து 57ஆயிரத்து 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் தங்கத்தின் விலையில் இன்று எந்த வித மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது.