இன்று மீண்டும் அதிகரித்த தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவு உயர்ந்ததா.?
தங்கத்தின் விலை சமீப நாட்களில் ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. கடந்த சில மாதங்களில் உச்சத்தைத் தொட்ட தங்கத்தின் விலை பின்னர் சரிவை கண்டது, தற்போது மீண்டும் உயர்ந்து வருகிறது. இந்த விலை மாற்றங்கள் முதலீட்டாளர்களுக்கு முக்கியமானவை.
gold rate
தங்கத்தின் விலை- முதலீடு அதிகரிப்பு
தங்கம் மற்றும் நிலத்தில் முதலீடு செய்ய அதிகளவில் மக்கள் விரும்பார்கள் அந்த வகையில் நா் தோறும் தங்க நகைக்கடைகளில் மக்களின் கூட்டமானது அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் கடந்த சில மாதங்களாக உயர்ந்திருந்த தங்கத்தின் விலையானது யாரும் எதிர்பார்க்காத வகையில் 10 நாட்களில் 4 ஆயிரம் ரூபாய் அளவிற்கு குறைந்ததே முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
எனவே தங்கத்தின் விலையானது எந்த நேரமும் மீண்டும் உயரும் அதற்கு முன்பாக வாங்க வேண்டும் என கடன் வாங்கியோ, பழைய நகைகளை அடகு வைத்தோ புதிய நகைகளை வாங்கி வருகின்றனர்.
தங்கத்தை விரும்பும் மக்கள்
உலகத்திலையே இந்தியாவில் தான் அதிகளவு மக்கள் தங்கத்தை விரும்பி வாங்குகிறார்கள். இதற்கு பல முக்கிய காரணங்கள் கூறப்படுகிறது. குறிப்பாக எதிர்கால முதலீடாகவும், தங்கள் குழந்தைகளின் கல்வி மற்றும் அவசர தேவைகளுக்கும் தங்கத்தை வாங்கி வருகிறார்கள்.
மேலும் திருமணம் போன்ற விஷேச நிகழ்வுகள் அணிவதற்காகவும் தங்கத்தை விரும்பி வாங்குகின்றனர். அந்த வகையில் தங்கம் விலையானது கடந்த 14 ஆண்டுகளில் சவரனுக்கு
50ஆயிரம் ரூபாய் அளவிற்கு உயர்ந்துள்ளது. இந்த தங்கத்தின் விலையானது வரும் நாட்களில் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
gold rate
மீண்டும் அதிகரித்த தங்கம் விலை
இந்தநிலையில் தான் கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி தங்கத்தின் விலையானது இந்தியாவில் உச்சபட்சத்தை தொட்டது. அந்த வகையில் ஒரு சவரன் 60ஆயிரத்தை எட்டிப்பார்த்தது. ஆனால் அடுத்த சில நாட்களிலையே சரிய தொடங்கியது. குறிப்பாக 15 நாட்களில் 4200 ரூபாய் அளவிற்கு குறைந்தது.
எனவே இந்த விலைய குறைவானது சில நாட்கள் தான் நீடிக்கும் மீண்டும் தங்கம் விலை அதிகரிக்கும் என கூறப்பட்டது. அதற்கு ஏற்றார் போல் தங்கத்தின் விலையானது கடந்த 3 நாட்களாக உயர்ந்து வருகிறது.
gold rate
நேற்றைய தங்கம் விலை
தங்கத்தின் விலை குறைவிற்கு அமெரிக்க தேர்தல் முடிவுகள் முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது. தற்போது தங்கத்தின் விலை குறைவால் மக்கள் அதிகளவு நகைகைள வாங்கியதால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது.
இதனால் மீண்டும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. அந்த வகையில் நேற்று முன் தினம் கிராமுக்கு 70 ரூபாய் உயர்ந்து 7,065 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்து 56ஆயிரத்து 520 ரூபாய்க்கு விற்பனையானது.
இன்றைய தங்கம் விலை
நேற்று தங்கம் கிராம் ஒன்றுக்கு 50 ரூபாய் உயர்ந்தது. ஒரு கிராம் 7,115 ரூபாய்க்கு விற்பனையானது. இதே போல ஒரு சவரனுக்கு 400 ரூபாய் அதிகரித்து 56,920 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று மீண்டும் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.
அந்த வகையில் கிராம் ஒன்றுக்கு 30 ரூபாய் உயர்ந்துள்ளது. அதன் படி ஒரு கிராம் 7,145 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்துள்ளது. 57ஆயிரத்து 160 ரூபாய்க்கு விற்பனையாகிறது.