- Home
- Business
- அதிகரித்த தங்கம் விலை.! இன்று ஒரு கிராமுக்கே இவ்வளவு உயர்வா.? ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா.?
அதிகரித்த தங்கம் விலை.! இன்று ஒரு கிராமுக்கே இவ்வளவு உயர்வா.? ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா.?
Gold Price Today : தங்கத்தின் விலை கடந்த 10 ஆண்டுகளில் அதிகரித்துள்ளது, மேலும் வரும் காலங்களில் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் நடுத்தர மக்கள் தங்கம் வாங்க முடியாத நிலையும், தங்கத்தை அதிகம் வைத்திருப்போர் கோடீஸ்வரர்களாக மாறும் சூழலும் உருவாகலாம்.

Gold rate
முதலீட்டில் ஆர்வம் காட்டும் மக்கள்
நிலத்திலும், தங்கத்திலும் முதலீடு செய்தால் எப்போதும் நஷ்டம் ஏற்படாது என கூறுவார்கள், அதற்கு ஏற்றார் போல அதிகளவு மக்கள் வீடு, நிலம் மற்றும் தங்கத்தில் முதலீடு செய்து வருகிறார்கள். இதில் குறைந்த பணத்தில் முதலீடு என்று பார்க்கும் போது தங்கத்தின் மீதான முதலீடு கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்துள்ளது. அந்த வகையில் வீட்டில் யாருக்காவது உடல்நிலை பாதிப்பு அவரச தேவைக்கு பணம் வேண்டும் ஏன்றால் ஆபத்துக்கு உதவும் நண்பனாக தங்கம் உள்ளது.
Gold rate in chennai
திருமணத்தில் ஜொலிக்கும் தங்கம்
எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் அடகு மற்றும் விற்க முடியும். இதனால் தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்து அவரச தேவைக்காக மக்கள் வைத்துக்கொள்கிறார்கள். அடுத்ததாக கல்வி செலவிற்கும், திருமணத்திற்கும் தங்கம் முக்கிய பங்கு வகிக்கிறது.
திருமணத்தில் திருமண பெண் மட்டுமில்லாமல் உறவினர்களின் தங்க நகை அணிந்து ஜொலிப்பார். மற்றவர்கள் முன் தோரணையாக காட்சி அளிக்க தங்கம் முக்கிய ஆபரண பொருளாக உள்ளது. அந்த வகையில் இந்திய மக்கள் அதிகளவு தங்கத்தை வாங்கி வருகிறார்கள்.
Gold rate in Tamilnadu
உச்சத்தை தொடும் தங்கம் விலை
அதே நேரம் தங்கத்தின் விலையானது கடந்த 10 ஆண்டுகளில் கிடு கிடுவென அதிகரித்துள்ளது. அதன் படி ஒரு சவரன் 15ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட தங்கம் தற்போது 60ஆயிரம் என்ற உச்சத்தை கடந்த மாதம் எட்டியது. தங்கத்தின் விலையானது வரும் நாட்களில் இன்னும் அதிகரிக்க கூடும் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். அந்த வகையில் இன்னும் ஓரிரு வருடங்களில் ஒரு சவரன் ஒரு லட்சம் ரூபாயை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது.
Gold rate
ஏறி இறங்கும் தங்கம் விலை
இதனால் நடுத்தர வர்க்க மக்கள் தங்கத்தை வாங்க முடியாத நிலை உருவாகும் எனவும், தங்கத்தை அதிகளவு வைத்திருப்பவர்களே வரும் காலத்தில் கோடீஸ்வரர்களாக இருப்பார்கள் என கூறுகின்றனர். இந்த நிலையில் தங்கத்தின் விலையானது கடந்த சில நாட்களாக ஏறி இறங்கி வருகிறது. அதன் படி கடந்த இரண்டு நாட்களாக தங்கத்தின் விலையில் எந்த வித மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
Gold rate today
இன்றைய தங்கம் விலை என்ன.?
கடந்த சனிக்கிழமை ஒரு கிராம் தங்கம் 7ஆயிரத்து 115 ரூபாய்க்கும், ஒரு சவரன் 56, 920 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்தநிலையில் வாரத்தின் முதல் நாளான இன்று திங்கட்கிழமை தங்கத்தின் விலையானது சற்று அதிகரித்துள்ளது. அதன் படி தங்கம் கிராம் ன்றுக்கு 15 ரூபாய் அதிகரித்து 7130 ரூபாய்க்கும் சவரனுக்கு 120 ரூபாய் அதிகரித்து 57 ஆயிரத்து 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது