தங்கத்தின் விலை இன்று மீண்டும் உயர்ந்தது; ஒரு சவரனுக்கு எவ்வளவு அதிகரித்தது தெரியுமா.?
Gold Rates in Chennai: தங்கத்தின் விலை வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கக்கூடும் என பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர். அடுத்த 2 ஆண்டுகளில் ஒரு சவரன் 80 ஆயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாயை தொட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தங்கத்தின் விலை உயர்வால் நடுத்தர மக்கள் தங்கம் வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Gold rate
தங்கத்தில் முதலீடு
தங்கத்தின் மீது முதலீடு செய்ய மக்கள் அதிகளவு ஆர்வம் காட்டி வருகிறார்கள். குழந்தைகளில் கல்வி செலவு, திருமண செலவு மற்றும் மருத்துவ செலவுகளுக்கு தங்கம் ஒரு முக்கியம் மற்றும் அத்தியாவசிய முதலீட்டு அம்சமாக உள்ளது. அந்த வகையில் தங்கத்தை அதிகளவு மக்கள் வாங்கி வருகிறார்கள்.
தங்கத்தின் விலை அதிகரித்தாலும் குறைந்தாலும் தங்கத்தின் மீது முதலீடு செய்வதை மக்கள் எப்போதும் குறைத்ததில்லை. அந்த வகையில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சவரன் தங்கம் ஆயிரம் ரூபாய் விற்பனை செய்யப்பட்ட நிலையில் அடுத்த சில வருடங்களிலேயே வரலாறு காணாத உச்சத்தை தொட்டது.
Chennai gold rate
உச்சத்தை தொட்ட தங்கம் விலை
கடந்த அக்டோபர் 31ம் தேதி 59,640 ரூபாய் என்ற வரலாற்றில் புதிய உச்சத்தை தொட்டது. இந்தநிலையில் தங்கத்தின் விலையானது வரும் நாட்களில் மேலும் அதிகரிக்க கூடும் என பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
அதன் படி அடுத்த 2 ஆண்டுகளில் ஒரு சவரன் 80 ஆயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாயை தொட வாய்ப்பு இருப்பதாக கூறி வருகின்றனர். எனவே தற்போது தங்கத்தை வாங்கி வைத்தால் வரும் நாட்களில் அதிக லாபம் கிடைக்கும் என பெரிய பெரிய முதலீட்டாளர்கள் அதிகளவிற்கு தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.
Tamilnadu gold rate
உச்சத்த தொடும் தங்கம் விலை
தங்கத்தின் விலையானது நாளுக்கு நாள் அதிகரிப்பதால் நடுத்தர வர்க்க மக்கள் தங்கத்தை வாங்க முடியாத நிலை உருவாகியுள்ளது. இந்தநிலையில் தற்போது சற்று குறைந்து வரும் தங்கத்தின் விலையானது அடுத்த சில நாட்கள் மற்றும் மாதங்களிலையே அதிகரிக்கும் என கூறப்படுகிறது. வரும் மார்ச் மாதத்திற்கு பிறகு தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொடும் என கணிக்கப்பட்டுள்ளது.
Gold price today
இன்றைய தங்கம் விலை என்ன.?
இதனிடையே நேற்று தங்கத்தின் விலையில் எந்த வித மாற்றமும் இல்லாமல் கிராமுக்கு 7ஆயிரத்து 130 ரூபாய்க்கும் ஒரு சவரனுக்கு 57ஆயிரத்து 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று கிராம் ஒன்றுக்கு 10 ரூபாய் அதிகரித்துள்ளது. அதன் படி ஒரு கிராம் 7ஆயிரத்து 140 ரூபாய்க்கும், சவரனுக்கு 80 ரூபாய் அதிகரித்து 57ஆயிரத்து 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.