ஒரே நாளில் கிடு கிடுவென அதிகரித்த தங்கம் விலை.! இன்று ஒரு சவரனுக்கு இவ்வளவு உயர்ந்ததா.?
தங்கத்தின் விலை சமீபத்தில் ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. சில நாட்களுக்கு முன்பு அதிரடியாகக் குறைந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில், முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்வதற்கு முன் கவனமாகச் சிந்திக்க வேண்டியது அவசியம்.
தங்கத்தில் முதலீடு
தங்கம் என்பது அனைத்து தரப்பு மக்களின் சேமிப்பில் முக்கிய பங்காக உள்ளது. தங்களது குழந்தைகளுக்கு எதிர்கால சேமிப்பாகவும், படிப்பு, மருத்துவம் போன்ற காலங்களில் அவசர தேவைகளுக்கு உடனடியாக உதவிடும் என்ற காரணத்தால் தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்து வருகிறார்கள். திருமணம் மற்றும் விஷேச நாட்களில் அணிவதற்கும் தங்கத்தை அதிகளவு வாங்குகின்றனர். அந்த வகையில் தங்கத்திலும் நிலத்திலும் முதலீடு செய்தவர்கள் என்றும் நஷ்டப்பட்டதில்லை என கூறுவார்கள். அதற்கு ஏற்றார் போல இரண்டின் விலையும் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது.
உச்சத்தை தொடும் தங்கம் விலை
கடந்த 10 வருடங்களுக்கு முன்பு ஒரு சவரன் 10 ஆயிரம் ரூபாய் என விற்பனை செய்யப்பட்டது. தற்போதோ ஒரு கிராம் 10 ஆயிரம் ரூபாயை எட்டும் நிலைக்கு வந்து விட்டது. இனி வரும் காலங்களில் தங்கத்தை வைத்திருப்பவர்கள் தான் கோடீஸ்வரர்களாக கருதப்படும் நிலை உருவாகும் என கூறப்படுகிறது. அந்த வகையில் இன்னும் சில ஆண்டுகளில் ஒரு கிராம் தங்கம் 20 ஆயிரத்தையும் ஒரு சவரன் தங்கம் 2 லட்சத்தையும் எட்டும் என பொருளாதார வல்லுநர்கள் கூறி வருகிறார்கள். அதற்கு ஏற்றார் போல் தங்கத்தின் விலையும் அதிகரித்தது.
திடீரென குறைந்த தங்கம் விலை
கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி யாரும் எதிர்பாராத வகையில் ஒரு சவரன் 60ஆயிரத்தை நெருகியது. இதனால் நடுத்தர வர்க்க மக்கள் தங்கத்தை வாங்க முடியுமா.? என அச்சம் அடைந்தனர். தங்கம் கைக்கு எட்டாமல் சென்றதை நினைத்து வருத்தப்பட்டனர். ஆனால் நவம்பர் 1 ஆம் தேதி முதல் தங்கத்தின் விலையானது அதிரடியாக சரிய தொடங்கியது. கடந்த இரண்டு வாரத்தில் 4ஆயிரம் ரூபாய் அளவிற்கு தங்கம் விலை குறைந்தது.
Gold price today
நகைக்கடைகளில் குவிந்த மக்கள் கூட்டம்
இதனால் மகிழ்ச்சி அடைந்த மக்கள் அடித்தது ஜாக்பாட் என பழைய நகைகளை அடகு வைத்தும், கடன் வாங்கியும் நகைகளை வாங்க தொடங்கினர். பல நகைக்கடைகளில் மக்களின் கூட்டம் அலைமோதியது. தங்கம் விலை குறைவிற்கு அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது.
எனவே தற்போது குறைந்துள்ள தங்கத்தின் விலையானது எந்த நேரமும் மீண்டும் என கூறப்பட்டது. அதற்கு ஏற்றார் போல் சரசர வென சரிந்த தங்கம் விலை மீண்டும் கிடு கிடுவென உயர தொடங்கியுள்ளது. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 1500 ரூபாய் அளவிற்கு தங்கத்தின் விலை உயர்ந்தது.
gold Jewels
இன்றைய தங்கம் விலை என்ன.?
இந்தநிலையில் நேற்று கிராமுக்கு 70 ரூபாய் உயர்ந்து 7,065 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்து 56ஆயிரத்து 520 ரூபாய்க்கு விற்பனையானது. இன்று தங்கத்தின் விலையானது மீண்டும் அதிகரித்துள்ளது. அதன் படி கிராமுக்கு 50 ரூபாய் உயர்ந்துள்ளது. அந்த கையில் ஒரு கிராம் 7,115 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு சவரனுக்கு 400 ரூபாய் அதிகரித்துள்ளது. அதன் படி ஒரு சவரன் 56,920 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.