MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • பண்டிகை வந்தா நகை மட்டும்தான் வாங்கணுமா? தங்கத்தில் முதலீடு செய்ய பல வழிகள் இருக்கே!!

பண்டிகை வந்தா நகை மட்டும்தான் வாங்கணுமா? தங்கத்தில் முதலீடு செய்ய பல வழிகள் இருக்கே!!

முதலீடாக தங்கத்தை வாங்குவதற்கு பல்வேறு வழிகள் உள்ளன. குறிப்பாக இந்தப் பண்டிகைக் காலத்தில் தங்கம் வாங்குபவர்கள் வழக்கத்திற்கு மாறான புதிய முறைகளிலும் முதலீடு செய்யலாம்.

2 Min read
Author : SG Balan
Published : Oct 05 2024, 04:22 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
Gold Investment

Gold Investment

இந்த பண்டிகை காலத்தில், தங்கத்தில் முதலீடு செய்வதை புத்திசாலித்தனமான செயல்தான். மங்களகரமான விசேஷ நாட்களில் தங்கம் வாங்குவது நீண்ட காலமாக இருந்து வரும் வழக்கம். எலக்ட்ரானிக்ஸ், மரச்சாமான்கள், தங்கம் மற்றும் பிற ஆடம்பரமான பொருட்களை வாங்குவது நல்ல அதிர்ஷ்டத்தைத் தருவதாக நம்பப்படுகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28
How to Invest in Gold

How to Invest in Gold

குறிப்பாக, தீபாவளி போன்ற விசேஷ நாட்களில் தங்கம் வாங்குவது செல்வம் பெருக வழிவகுக்கும் என்பது பலரின் நம்பிக்கை. இதனால் தங்கத்தை முதலீடாக வாங்குவது அதிகரித்துள்ளது. பண்டிகை வரும்போது தங்கம் வாங்கும் வாடிக்கையாளர்கள் சில மாற்று வழிகளிலும் தங்கத்தில் முதலீடு செய்வதைத் தெரிந்துகொள்ளலாம்.

38
Sovereign Gold Bonds (SGB)

Sovereign Gold Bonds (SGB)

அரசாங்கம் தங்கப் பத்திரங்களை வெளியிடுகிறது. ஆனால், அவை உடனடியாகக் கிடைக்காது. அரசு அவ்வப்போது தங்க பத்திர விற்பனையை அறிவிக்கும். இது வருடத்திற்கு ஒருமுறை அல்லது இரண்டு முறை மட்டுமே நடக்கும். மேலும் தங்க பத்திர விற்பனை சுமார் ஒரு வாரத்திற்குத்தான் இருக்கும். தங்கப் பத்திரம் வாங்க விரும்பும் முதலீட்டாளர்கள் விழிப்புடன் இருந்து இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இந்த ஆண்டுக்கான புதிய தங்க பத்திர விற்பனையை அரசு இன்னும் அறிவிக்கவில்லை.

48
Digital gold

Digital gold

ஆன்லைன் தளங்கள் மூலம் "டிஜிட்டல் தங்கம்" விற்பனைக்கு உள்ளது. டிஜிட்டல் தங்கத்தை வாங்க வாடிக்கையாளர்கள் Paytm, PhonePe மற்றும் Google Pay போன்ற பேமெண்ட் செயலிகளை பயன்படுத்தலாம். வாடிக்கையாளர்கள் ஒரு ரூபாய்க்குக்கூட தங்கத்தை வாங்கலாம். தங்கத்தை விற்பனை செய்வதற்காக, பெரும்பாலான பெமெண்ட் செயலிகள் SafeGold அல்லது MMTC-PAMP உடன் கூட்டு சேர்ந்துள்ளன. இது பொதுத்துறை நிறுவனமான MMTC மற்றும் சுவிட்சர்லாந்து அமைப்பான PAMP SA இணைந்து செயல்படுத்தும் கூட்டு முயற்சியாகும்.

58
Gold coins

Gold coins

நகைக்கடைகள், வங்கிகள், வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் மற்றும் இ-காமர்ஸ் இணையதளங்கள் கூட தங்க நாணயங்களை விற்பனை செய்கின்றன. ஒவ்வொரு நாணயமும் BIS வழிகாட்டுதல்களின்படி ஹால்மார்க் செய்யப்படும். 0.5 முதல் 50 கிராம் வரை எடையுள்ள தங்க நாணயங்களை வாங்கலாம். தங்க நாணயங்களை சேதப்படுத்தாத பேக்கேஜிங்கில் வாங்குவது முக்கியம். பேக்கேஜிங் சேதம் அடைந்திருந்தால் ஏமாற்றப்பட வாய்ப்பு உள்ளது.

68
Gold ETF

Gold ETF

முதலீட்டாளர்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட பணத்தை 99.5% தூய்மையான தங்கக் கட்டியில் முதலீடு செய்வது தங்க ஈ.டி.எஃப். மியூச்சுவல் ஃபண்ட் திட்டம். தங்கத்தின் விலையில் ஏற்படும் மாற்றங்களைக் கண்காணிக்கும் திறந்தநிலை கட்டமைப்பைக் கொண்ட மியூச்சுவல் ஃபண்டுகள் தங்க ஈ.டி.எஃப் என அழைக்கப்படுகின்றன. முதலீட்டாளர்கள் எப்போது வேண்டுமானாலும் தங்க ஈ.டி.எஃப். பண்டுகளை வாங்கலாம் அல்லது விற்கலாம்.

78
Gold savings plan

Gold savings plan

பல நகைக்கடைக்காரர்கள் கவர்ச்சிகரமான தங்க சேமிப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளனர். இந்தச் சேமிப்புத் திட்டங்களில் குறிப்பிட்ட காலத்திற்கு ஒவ்வொரு மாதமும் ஒரு நிலையான தொகையை டெபாசிட் செய்ய வேண்டும். கால அவகாசம் முடிந்ததும், டெபாசிட் செய்யப்பட்ட மொத்தத் தொகைக்கும், போனஸுக்கும் சேர்த்து அதே நகைக்கடையில் தங்கம் வாங்கிக்கொள்ளலாம்.

88
Gold jewellery

Gold jewellery

தங்கத்தில் முதலீடு செய்ய நகைகளை வாங்கினால், அவற்றைப் பாதுகாப்பாக வைத்திருப்பது, அணிந்து அணிந்து காலப்போக்கில் அவை பழசாகிவிடுவது போன்றவை குறித்து கவலைப்பட வேண்டியிருக்கும். மேலும், செய்கூலி, சேதாரம் என்று இதர கட்டணங்கள் காரணமாக தங்க நகைகளின் விலை அதிகமாக இருக்கிறது. வாங்கும் தங்க நகைகளின் வகையைப் பொறுத்தும் தயாரிப்பு செலவு மாறுபடும். தங்க நகைகள் சிக்கலான வடிவமைப்பைக் கொண்டிருந்தால் செய்கூலி குறிப்பிடத்தக்க அளவு செலவை அதிகரிக்கும். எனவே நகைகளுக்கு மாற்றாக உள்ள தங்க முதலீட்டு வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்வது சிறப்பான வழியாக இருக்கும்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
கனரா வங்கி
பாரத ஸ்டேட் வங்கி
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Diwali Gift: தீபாவளிக்கு முன் ரூ.2,000 வரப்போகுது.. உங்க வங்கி கணக்கில் வந்துருச்சா.. செக் பண்ணுங்க
Recommended image2
Income Tax Deadlines: நவம்பர் 7, 14, 15, 21, 30... வரி செலுத்துவோர் கவனிக்க வேண்டிய தேதிகள்!
Recommended image3
வங்கி வட்டி விகிதங்கள் முதல் கிரெடிட் கார்டு வரை: நவ.1 முதல் அமலுக்கு வரும் 5 முக்கிய விதிகள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved