MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • மீண்டும் நம்பர் 1 சிம்மாசனத்தில் அதானி: அம்பானியை ஓரங்கட்டி ரூ.9.23 லட்சம் கோடியுடன் புதிய வரலாற்று சாதனை!

மீண்டும் நம்பர் 1 சிம்மாசனத்தில் அதானி: அம்பானியை ஓரங்கட்டி ரூ.9.23 லட்சம் கோடியுடன் புதிய வரலாற்று சாதனை!

முகேஷ் அம்பானியைப் பின்னுக்கு தள்ளி அதானி குழுமத் தலைவர் கௌதம் அதானி மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளார். அதானி குடும்பத்தின் சொத்து மதிப்பு 13% உயர்ந்து ₹9.23 லட்சம் கோடியாக உள்ள நிலையில், அம்பானி சொத்து ₹8.63 லட்சம் கோடியாகக் குறைந்துள்ளது.

3 Min read
Author : Meenakshisundaram
Published : Sep 25 2026, 09:13 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
அம்பானியை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்த அதானி
Image Credit : Asianet News

அம்பானியை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்த அதானி

இந்தியாவின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் மீண்டும் ஒரு பிரம்மாண்ட திருப்பம் நிகழ்ந்துள்ளது. ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானியைப் பின்னுக்குத் தள்ளி, அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி மீண்டும் இந்தியாவின் முதற்பெரும் செல்வந்தர் என்ற பெருமையைத் தட்டிச் சென்றுள்ளார்.

'எம்3எம் ஹுருன் இந்தியா' (M3M Hurun India) வெளியிட்டுள்ள இந்தியச் செல்வந்தர்கள் பட்டியலின்படி, அதானி மற்றும் குடும்பத்தினரின் சொத்து மதிப்பு 13% உயர்ந்து, ரூ.9.23 லட்சம் கோடியாகப் பதிவாகியுள்ளது. மறுபுறம், முகேஷ் அம்பானி குடும்பத்தினரின் சொத்து மதிப்பு 10% குறைந்து ரூ.8.63 லட்சம் கோடியாக உள்ளது. இதன்மூலம், அம்பானியை விட ரூ.59,400 கோடி கூடுதல் சொத்துகளுடன் அதானி மீண்டும் அரியணையில் அமர்ந்துள்ளார்.

கடந்த 5 ஆண்டுகளில், அதானி மற்றும் அம்பானி இடையே முதலிடத்துக்கான போட்டி மிகக் கடுமையாக நிலவி வருவதாகவும், இந்த 5 ஆண்டுகளில் 5 முறை இவர்களின் நிலைகள் மாறி மாறி முதலிடத்தைப் பிடித்துள்ளதாகவும் இந்த ஆய்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
முதல் 10 இடங்களில் உள்ள பெரும் செல்வந்தர்கள்
Image Credit : x

முதல் 10 இடங்களில் உள்ள பெரும் செல்வந்தர்கள்

கௌதம் அதானி & குடும்பத்தினர் – ரூ.9.23 லட்சம் கோடி (13% உயர்வு - முதலிடம்)

முகேஷ் அம்பானி & குடும்பத்தினர் – ரூ.8.63 லட்சம் கோடி (10% சரிவு - 2ம் இடம்)

லட்சுமி நிவாஸ் மிட்டல் & குடும்பத்தினர் (ஆர்செலர் மிட்டல்) – ரூ.3.39 லட்சம் கோடி ( 3-ம் இடம்)

சைரஸ் பூனாவாலா & குடும்பத்தினர் (சீரம் நிறுவனம்) – ரூ.3.03 லட்சம் கோடி (4-ம் இடம்)

ரோஷினி நாடார் மல்ஹோத்ரா (எச்.சி.எல்) – ரூ.2.79 லட்சம் கோடி. (5-ம் இடம்)

குமார மங்கலம் பிர்லா & குடும்பத்தினர் – ரூ.2.69 லட்சம் கோடி (6-ம் இடம்)

திலீப் சாங்வி (சன் பார்மா) – ரூ.2.65 லட்சம் கோடி (7-ம் இடம்)

அசிம் பிரேம்ஜி (விப்ரோ) – ரூ.2.63 லட்சம் கோடி (8-ம் இடம்)

அனில் அகர்வால் & குடும்பத்தினர் (வேதாந்தா) - ரூ.2.08 லட்சம் கோடி (87% வளர்ச்சி; 9-ம் இடம்)

சமீர் மேத்தா & குடும்பத்தினர் (டோரன்ட் பார்மா) -ரூ.1.89 லட்சம் கோடி (52% உயர்வு; 10-ம் இடம்)

35
இந்தியப் பொருளாதாரத்தில் சரிபாதி சொத்து!
Image Credit : Chatgpt

இந்தியப் பொருளாதாரத்தில் சரிபாதி சொத்து!

இந்தியாவில் குறைந்தபட்சம் ரூ.1,000 கோடி சொத்து வைத்துள்ள செல்வந்தர்களின் எண்ணிக்கை, கடந்த ஆண்டைவிட 128 பேர் உயர்ந்து 1,810-ஆக அதிகரித்துள்ளது. இவர்களின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு 12.8% உயர்ந்து, ரூ.187.5 லட்சம் கோடியை எட்டியுள்ளது. இது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) ஏறக்குறைய சரிபாதியாகும்.

மேலும், கடந்த ஓராண்டில் மட்டும் 27 பேர் புதிதாக டாலர் பில்லியனர்களாக (ரூ.9,550 கோடிக்கும் மேல் சொத்து கொண்டவர்கள்) உருவெடுத்துள்ளதால், நாட்டின் மொத்த டாலர் பில்லியனர்கள் எண்ணிக்கை 391-ஆகப் பதிவாகியுள்ளது.

45
புதிய தொழில்நுட்பங்களின் ஆதிக்கம் & சாதனையாளர்கள்
Image Credit : Chatgpt

புதிய தொழில்நுட்பங்களின் ஆதிக்கம் & சாதனையாளர்கள்

ஏ.ஐ. பிரிவு:

தொழில்நுட்பப் பிரிவில் செயற்கை நுண்ணறிவு (AI) துறை முதல்முறையாக தனிப் பிரிவாகப் பட்டியலிடப்பட்டு, அதில் 19 தொழிலதிபர்கள் ரூ.3.07 லட்சம் கோடி ஒட்டுமொத்த சொத்துகளுடன் தடம் பதித்துள்ளனர்.

குவாண்டம் கம்ப்யூட்டிங்:

பெங்களூரைச் சேர்ந்த ‘க்யூபிஏஐ’ (QpiAI) நிறுவனத் தலைவர் நாகேந்திர நாகராஜா, ரூ.1,700 கோடி சொத்து மதிப்புடன் குவாண்டம் கணினித் துறையிலிருந்து இந்தப் பட்டியலில் இணைந்த முதல் நபர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

அதிவேக வளர்ச்சி:

கியூபிட் நிறுவனத்தின் ஆதித்ய குமார் ஹல்வாசியாவின் சொத்து மதிப்பு ஒரே ஆண்டில் 859 சதவீதம் வரை எகிறி ரூ.18,800 கோடியை எட்டியதன் மூலம், அதிவேக வளர்ச்சி கண்ட நபராக உருவெடுத்துள்ளார்.

மிக இளம் பில்லியனர்கள்:

'ஸெப்டோ' (Zepto) நிறுவனத்தின் நிறுவனர்களான கைவல்ய வோஹ்ரா (23 வயது) -ஆதித் பலிச்சா (24 வயது) இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள மிக இளம் வயது செல்வந்தர்களாக சாதனை படைத்துள்ளனர்.

55
சுயமுயற்சியில் உருவான 70% பணக்காரர்கள்
Image Credit : Chatgpt

சுயமுயற்சியில் உருவான 70% பணக்காரர்கள்

70% பேர் சுயமாக உருவானவர்கள்:

ஒட்டுமொத்த பட்டியலில் 1,266 நபர்கள் (70%) தங்களின் சொந்த முயற்சியால் தொழில் தொடங்கி செல்வந்தர்களானவர்கள் என்பது நாட்டின் தொழில் முனைவு எழுச்சியைக் காட்டுகிறது. தொழில்துறை உற்பத்திப் பொருள்கள், ரசாயனம் மற்றும் மருந்து உற்பத்தி ஆகிய துறைகளே அதிக செல்வந்தர்களை உருவாக்கியுள்ளன.

நகரங்களின் வரிசை:

இந்திய அளவில் மும்பையிலிருந்து அதிகபட்சமாக 465 செல்வந்தர்களும், தில்லியிலிருந்து 236 பேரும், பெங்களூருவிலிருந்து 129 பேரும் இடம்பெற்றுள்ளனர்.

பெண்களின் பங்களிப்பு:

இந்தப் பட்டியலில் 33 டாலர் பில்லியனர்கள் உட்பட மொத்தம் 131 பெண் செல்வந்தர்கள் இடம்பிடித்துள்ளனர்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

M
Meenakshisundaram
மீடியா துறையில் 5+ ஆண்டுகள் அனுபவம் கொண்ட மீனாட்சிசுந்தரம், தி இந்தியன் எக்ஸ்பிரஸ், சன் நியூஸ், தந்தி டிவி, பாலிமர் நியூஸ் உள்ளிட்ட முன்னணி செய்தி நிறுவனங்களில் திறம்பட பணியாற்றியவர். பிரேக்கிங் நியூஸ், ஆழமான ஆய்வுக் கட்டுரைகளில் தனித்துவ முத்திரை பதித்த இவர், தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சீனியர் சப்-எடிட்டராகப் பொறுப்பு வகிக்கிறார். அறிவியல், புதிய டெக்னாலஜி, வணிகம், அரசியல் மற்றும் குற்றப் பின்னணி சார்ந்த விவகாரங்களை எளிய நடையில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
வணிகம்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
UPI பயனர்களுக்கு குட்நியூஸ்.. நேரடியாக களமிறங்கும் வங்கிகள்.. வியாபாரிகள் எக்ஸ்டிரா கட்டணம் வாங்க செக்!
Recommended image2
விவசாயிகளுக்கு சொத்து அடமானம் இல்லாமல் ரூ.2 கோடி கடன்: மத்திய அரசின் வேளாண் நிதித் திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி?
Recommended image3
Bank Customer Alert: 3 நாட்கள் வங்கி வேலைநிறுத்தம்! வாடிக்கையாளர்கள் இதை முன்கூட்டியே முடிச்சிடுங்க
Related Stories
Recommended image1
விவசாயிகளுக்கு சொத்து அடமானம் இல்லாமல் ரூ.2 கோடி கடன்: மத்திய அரசின் வேளாண் நிதித் திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி?
Recommended image2
Bank Customer Alert: 3 நாட்கள் வங்கி வேலைநிறுத்தம்! வாடிக்கையாளர்கள் இதை முன்கூட்டியே முடிச்சிடுங்க
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved