LPG: ஒரு சிலிண்டர் GAS 2 மாசத்துக்கு வருதா.?! புது டெக்னிக்கா இருக்கே.!
சமையல் எரிவாயு விலை உயர்வை சமாளிக்க சில எளிய வழிமுறைகள் மூலம் 30% வரை எரிவாயுவை சேமிக்கலாம். சரியான பாத்திரம், அடுப்பு பராமரிப்பு, பிரஷர் குக்கர் பயன்பாடு போன்றவை சிலிண்டரின் ஆயுளை அதிகரிக்கும்.

சமையல் எரிவாயு சிக்கனம் இப்போது தேவை
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை என்பது நமது பட்ஜெட்டில் ஒரு தொகையை அப்படியே எடுத்துக்கொள்கிறது என்றால் அது மிகையல்ல. புகையில்லாத சூழலை சமையல் எரிவாயு கொடுத்தாலும் அதன் விலையேற்றம் நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களின் பட்ஜெட்டை பதம்பாக்கும். சமையல் எரிவாயு விலை அதிகரித்து வந்தால் என்ன ஒரு சில டெக்னிக்கை செய்தால் ஒரு சிலிண்டர் 2 மாதத்திற்கு கூட வரும் என்கின்றனர் சில இல்லத்தரசிகள். அட இது நல்ல விஷயமா இகுக்கே என்கிறீர்களா? ஆமாம். சின்ன சின்ன விஷங்களை செய்தால் 30 சதவீதம் வரை LPG செலவை குறைக்கலாம்.
உங்க கேஸ் அடுப்பு எப்படி இருக்கு?
சமையல் எரிவாயு அடுப்பை நல்ல நிலையில் மெயின்டெயின் பண்ண வேண்டியது மிகவும் அவசியம். அதில் உள்ள burner-ஐ நல்ல நிலையில் வைத்திருந்தால் கேஸ் வீணாவதை தடுக்கலாம். வாரத்திற்கு ஒருமுறை பிளேமைக் கவனித்து அதில் தூசிகள் இருந்தால் அதனை உடனே அகற்ற வேண்டும். நீலநிறத்தில் அடுப்பு எரிந்தால் பர்னர் நல்ல நிலையில் இருக்கிறது என்று அர்த்தம். சிவப்பு அல்லது மஞ்சள் பிளேம் இருந்தால் அப்போது எரிவாயு வீணாகிறது என்பதை புரிந்துகொள்ளலாம்.
கேஸ் குடிக்கும் சின்ன பாத்திரம்
சமையல் எரிவாயு அடுப்பில் நாம் பயன்படுத்தும் பாத்திரத்தின் அளவுகூட சமையல் எரிவாயு பயன்பாட்டை அதிகப்படுத்தவோ குறைக்கவோ செய்யும்.கேஸ் அடுப்பில் சிறிய பாத்திரம் வைத்தால் கேஸ் வீணாகும். அதேபோல பெரிய அடுப்பில் சிறிய பாத்திரம் வைத்தாலும் சமையல் எரிவாயு வீணாகும். எப்போதும் பாத்திரம் அடுப்பை முழுமையாக மூடும் அளவாக இருந்தால் எரிவாய வீணாவதை தடுக்க முடியும். இதனால் 10 நாட்களுக்கு வரவேண்டிய கேஸ் 20 நாட்களுக்கு எரியும்.
அடுப்பை வேகமாக அணைக்கவும்
சமையல் செய்யும் நீங்கள் அருகேயே இருந்து சமையல் செய்தால் ருசி அதிகரிப்பதுடன் கேஸ் செலவும் மிச்சமாகும். அடுப்ப பற்றவைத்துவிட்டு டீவி பார்ப்பது, அல்லது குளிக்க செல்வது உள்ளிட்ட செயல்களை செய்தால் கேஸ் பயன்பாடு அதிகரிக்கவே செய்யும். மூடியுடன் சமையல் செய்வது மிக முக்கியம். மூடியுடன் வைத்து வேகவைத்தால், வெப்பம் வெளியே போகாமல் உணவு சீக்கிரமே வெந்துவிடும் என்கின்றனர் சமையல் கலை வல்லுணர்கள். இது 20% வரை சமையல் நேரத்தையும், எரிவாயுவையும் குறைக்கும் என்கின்றனர் சிக்கனத்தை கடைபிடிக்கும் இல்லத்தரசிகள்.
எரிவாயுவை சேமிக்கும் குக்கர்
பிரஷர் குக்கர் என்பது LPG சிக்கனத்திற்கு உதவும் சிறந்த கருவி என்றால் அது மிகையல்ல. சாதம், பருப்பு, சாம்பார், குருமா போன்ற எல்லா சமையலையும் பிரஷர் குக்கரில் செய்தால், நேரமும், எரிவாயுவும் 40% வரை சேமிக்க முடியும். ஒரே சமயத்தில் இரண்டு மூன்று உணவுப் பொருட்களை வைக்கலாம் என்பதால் எரிவாயு செலவு மிச்சமாகும் என்பது உண்மையே. சமையல் ஆரம்பிக்கும் முன் தேவையான அனைத்து பொருட்களையும் தயார் செய்து வைக்கவும். காய்கறிகள் வெட்டாமல் சமையலை தொடங்கினால் அடுப்பு தேவையில்லாமல் எரியும். சமையல் எரிவாயு வீணாகும்.
இது இன்னொரு வழி
சுடுநீரை பயன்படுத்துதல், அறை வெப்பநிலையில் உள்ள பொருட்களை பயன்படுத்துதல், பருப்புகளை தண்ணீரில் ஊறவைத்து சமையல் செய்தல் போன்றவை சமையல் செய்யும் நேரத்தை குறைக்கும். சமையல் நேரம் குறைந்தால் சமையல் எரிவாயு சேமிக்கும். சோலார் குக்கர் போன்ற மாற்று சக்திகள் வீட்டில் இருந்தால், முக்கியமான வேலைகளை அதில் செய்துவிடலாம். இதனால் ஒரு சிலிண்டரை இரண்டு மாதம் வரை பயன்படுத்தலாம்.