MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • வாட்ஸ்அப் பிசினஸ் டூ ரூ.95,000 கோடி சாம்ராஜ்யம்: இ-காமர்ஸ் வரலாற்றை மாற்றிய 'மீஷோ'; யார் இந்த விதித் ஆத்ரே?

வாட்ஸ்அப் பிசினஸ் டூ ரூ.95,000 கோடி சாம்ராஜ்யம்: இ-காமர்ஸ் வரலாற்றை மாற்றிய 'மீஷோ'; யார் இந்த விதித் ஆத்ரே?

அரசு வேலை ஆசையை உதறித் தள்ளி ரூ.95,000 கோடி சாம்ராஜ்யத்தை உருவாக்கிய மீஷோ சிஇஓ விதித் ஆத்ரேயின் வியக்கவைக்கும் வெற்றிக் கதை மற்றும் ஐபிஓ சாதனைகள் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

3 Min read
Author : Meenakshisundaram
Published : Oct 22 2026, 09:21 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
யார் இந்த மீஷோ சி.இ.ஓ விதித் ஆத்ரே?
Image Credit : x

யார் இந்த மீஷோ சி.இ.ஓ விதித் ஆத்ரே?

பெற்றோர் இருவருமே அரசு ஊழியர்கள்... நடுத்தரக் குடும்பத்தில் வளரும் ஒரு பையனிடம் என்ன எதிர்பார்ப்பார்கள்? நல்லா படிச்சு ஒரு பாதுகாப்பான அரசு வேலைக்கு போப்பா அல்லது யு.பி.எஸ்.சி எழுதி சிவில் சர்வீஸ் அதிகாரியாகு என்பதுதானே இயல்பான ஒன்றாக இருக்கும்? விதித் ஆத்ரேவின் வீட்டிலும் இதுதான் நடந்தது. ஆனால், ஐஐடி டெல்லியில் படித்து முடித்த இந்த இளைஞனின் மனதில் ஓடிய எண்ணங்களே வேறு. இன்று, சரியாக ஒரு தசாப்தத்திற்குப் பிறகு, அவர் எடுத்த அந்த ஒரு மாற்றுப் பாதைதான் இந்திய இணைய வர்த்தக வரலாற்றையே மாற்றி எழுதியுள்ளது. சஞ்சீவ் குமாருடன் கைகோர்த்து அவர் தொடங்கிய 'மீஷோ' (Meesho), தற்போது பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு சுமார் ரூ.95,000 கோடி சந்தை மதிப்பைக் கொண்ட பிரம்மாண்ட நிறுவனமாக விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது.

ஆனால், இந்த வெற்றி ஒரு இரவில் நிகழ்ந்துவிடவில்லை. கல்லூரிப் படிப்புக்கும் இந்த ₹95,000 கோடி சாம்ராஜ்யத்திற்கும் இடையில் தோல்விகள், உத்திகளின் மாற்றங்கள் மற்றும் தூசு படிந்த தெருக்களில் செலவிட்ட வியர்வைத் துளிகள் எனப் பல கதைகள் புதைந்து கிடக்கின்றன.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
பாதுகாப்பான வேலையா? புத்தம் புதிய சவாலா?
Image Credit : x

பாதுகாப்பான வேலையா? புத்தம் புதிய சவாலா?

2012-ல் ஐ.ஐ.டி டெல்லியில் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் படித்து முடித்த ஆத்ரேவுக்குப் போட்டி நிறைந்த சூழலும் லட்சியமும் புதியதல்ல. என்றாலும் குடும்பத்தினர் வழக்கம் போல அரசுப் பணி அல்லது சிவில் சர்வீஸ் தேர்வுகளை எழுதச் சொல்லி வற்புறுத்தினர். குடும்பத்தின் விருப்பத்திற்காகவும் அனுபவத்திற்காகவும் ஆரம்பத்தில் ஐடிசி மற்றும் இன்மோபி போன்ற பெரிய நிறுவனங்களில் பணியாற்றினார். ஆனால், அங்கே வேலை செய்துகொண்டே தொழில்கள் எப்படி நடக்கின்றன, சாதாரண மக்களின் தினசரிப் பிரச்னைகளைத் தொழில்நுட்பம் மூலம் எப்படித் தீர்க்கலாம் என்பதை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டே இருந்தார். அந்தத் தேடல்தான் குடும்பம் காட்டிய வழக்கமான பாதையிலிருந்து அவரை வெளியே கொண்டு வந்தது.

35
ஏசி அறையை விட்டுவிட்டு தெருவில் இறங்கி சாதனை!
Image Credit : x

ஏசி அறையை விட்டுவிட்டு தெருவில் இறங்கி சாதனை!

தொடக்கத்தில் இருந்தே பிரம்மாண்டமான அமேசான், பிளிப்கார்ட் போன்ற இ-காமர்ஸ் தளத்தை உருவாக்குவது இவர்களது நோக்கமாக இருக்கவில்லை. ஆத்ரேவும் அவரது நண்பர் சஞ்சீவ் குமாரும் சிறு வியாபாரிகள் படும் பாட்டை நேரில் பார்க்க முடிவு செய்தனர். அப்போது உள்ளூர் வியாபாரிகள் பலரும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை காட்ட வாட்ஸ்அப் (WhatsApp) பயன்படுத்துவதைக் கவனித்தனர். ஆனால் வாட்ஸ்அப் என்பது அரட்டை அடிப்பதற்கான செயலியே தவிர, மொத்த பிசினஸையும் நடத்தும் கருவி அல்லவே. வாடிக்கையாளரிடம் பேசுவது வாட்ஸ்அப் என்றால், பேமெண்ட் வாங்க ஒரு வழி, பொருளை அனுப்ப லாஜிஸ்டிக்ஸ் பார்க்க ஒரு வழி என வியாபாரிகள் தடுமாறிக்கொண்டிருந்தனர்.

பிரச்னையின் ஆழத்தைப் புரிந்து கொள்ள ஆத்ரேவும் குமாரும் நேராக களத்தில் குதித்தனர். சூரத், ஜெய்ப்பூர், டெல்லியின் சாந்தினி சவுக் எனத் துணிச் சந்தைகளுக்குப் பயணித்து, சிறு வியாபாரிகளிடம் நேரில் பேசினர். விசிட்டிங் கார்டுகளை அள்ளினர்; சப்ளையர்களின் நெட்வொர்க்கை உருவாக்கினர்.

அங்கேதான் அவர்கள் அந்த மேஜிக்கைக் கண்டனர். பல பெண்கள் வீட்டில் இருந்தபடியே வாட்ஸ்அப் மூலம் முறைசாரா வணிகங்களை நடத்திக் கொண்டிருந்தனர். பெரிய சப்ளையர்களிடம் இருந்து துணிகள் மற்றும் பொருட்களின் படங்களை வாங்கி, தங்களுக்குத் தெரிந்த குடும்பத்தினர், நண்பர்கள் வட்டத்தில் விற்று லாபம் பார்த்து வந்தனர். இந்த பெண்களுக்கு ஏன் தொழில்நுட்ப ரீதியாக ஒரு முழுமையான தளத்தை அமைத்துக் கொடுக்கக் கூடாது? என்ற பொறி அங்கேதான் தட்டியது.

45
தோல்விகளில் இருந்து பிறந்த 'மீஷோ' (Meri Shop)
Image Credit : x

தோல்விகளில் இருந்து பிறந்த 'மீஷோ' (Meri Shop)

ஆரம்பத்தில் இந்நிறுவனம் 'மீஷோ' என்ற பெயரில் தொடங்கப்படவில்லை. 'ஃபேஷ்னியர்' (Fashnear) என்ற பெயரில், உடைகளை உடனடியாக வீட்டுக்கே டெலிவரி செய்யும் ஹைப்பர்லோகல் தளமாகத்தான் ஆரம்பித்தனர். ஆனால், வேகமாக டெலிவரி செய்வதை விட, எங்களுக்கு பல வகையான வெரைட்டிகள்தான் முக்கியம் என வாடிக்கையாளர்கள் உணர்த்தினர். அந்த யோசனை தோல்வியடைந்தது. அடுத்து, கடைகளுக்கு டிஜிட்டல் வலைத்தளம் அமைக்கும் முயற்சியில் இறங்கினர்; அதுவும் பெரிய அளவில் கைகொடுக்கவில்லை. வாடிக்கையாளர்களின் பழக்கத்தை மாற்ற முயற்சிப்பதை விட, மக்கள் ஏற்கனவே என்ன செய்கிறார்களோ அதற்கேற்ப தொழில்நுட்பத்தை உருவாக்க வேண்டும் என்பதைப் புரிந்துகொண்டனர். வியாபாரிகள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்திய விதம் அவர்களுக்குப் புதுப் பாதையைக் காட்டியது.

அதன்பின், 'மீஷோ சப்ளை' என்ற தளத்தை உருவாக்கினர். மொத்த வியாபாரிகளையும், வாட்ஸ்அப் மூலம் விற்க நினைக்கும் சாதாரண மக்களையும் இது இணைத்தது. அவ்வளவுதான்... ஆர்டர்கள் மாதந்தோறும் மளமளவென இரட்டிப்பாகத் தொடங்கின. தங்கள் கனவுத் திட்டத்திற்கு 'மீஷோ' (Meesho) எனப் பெயரிட்டனர். அது வேறொன்றுமில்லை, மேரி ஷாப் (Meri Shop - என் கடை) என்பதன் சுருக்கமே ஆகும். ஒரு இல்லத்தரசி அல்லது சிறு வியாபாரி சொந்தமாகச் செலவு செய்து ஆப் உருவாக்காமல், தங்களுக்கான டிஜிட்டல் கடையை உருவாக்கிக் கொள்ள வழிவகுப்பதே இதன் தாரக மந்திரம்.

55
ஐபிஓ சாதனை மற்றும் இன்றைய மதிப்பு
Image Credit : x

ஐபிஓ சாதனை மற்றும் இன்றைய மதிப்பு

சமூக வர்த்தகத்தில் (Social Commerce) ஆரம்பித்த மீஷோ, நாளடைவில் விநியோகஸ்தர்கள், விற்பனையாளர்கள் மற்றும் கோடிக்கணக்கான நுகர்வோரை இணைக்கும் மிகப்பெரிய இ-காமர்ஸ் ஜாம்பவானாக விஸ்வரூபம் எடுத்தது. ஃபோர்ப்ஸ் தகவலின்படி, 2024-ஆம் ஆண்டின் இறுதிக்குள் மீஷோ 19 கோடி பயனர்களையும், 4 லட்சம் விற்பனையாளர்களையும் வசப்படுத்தியது. 2024-25 நிதியாண்டில் இந்நிறுவனத்தின் வருவாய் 26% உயர்ந்து ரூ. 9,900 கோடியைத் தொட்டது. 2025 டிசம்பர் 3 முதல் 5 வரை நடைபெற்ற மீஷோ ஐபிஓ (IPO), முதலீட்டாளர்களிடையே வரலாறு காணாத வரவேற்பைப் பெற்று சுமார் 79 மடங்கு அதிகமாக விண்ணப்பிக்கப்பட்டது (Subscribed).

டிச.10, 2025 அன்று பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டபோது, இதன் வெளியீட்டு விலையான ரூ.111-ஐ விட சுமார் 46% உயர்ந்து என்எஸ்இ-யில் ரூ.162.50 ஆக வர்த்தகமானது. 2026 ஆகஸ்ட் 20 நிலவரப்படி, ஒரு பங்கின் விலை சுமார் ₹205 என்ற அளவில் வர்த்தகமாகி, நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு ரூ.95,000 கோடியாக உயர்ந்துள்ளது. அரசு வேலை என்ற வழக்கமான பாதுகாப்பு வளையத்திற்குள் முடங்கிப் போகாமல், தெருவில் இறங்கி சிறு வியாபாரிகளின் துயரத்தைப் புரிந்துகொண்டு உழைத்த விதித் ஆத்ரேவின் இந்த வெற்றிப் பயணம், சொந்தமாகச் சாதிக்கத் துடிக்கும் ஒவ்வொரு இளைஞனுக்கும் சிறந்த பாடம்!

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

M
Meenakshisundaram
மீடியா துறையில் 5+ ஆண்டுகள் அனுபவம் கொண்ட மீனாட்சிசுந்தரம், தி இந்தியன் எக்ஸ்பிரஸ், சன் நியூஸ், தந்தி டிவி, பாலிமர் நியூஸ் உள்ளிட்ட முன்னணி செய்தி நிறுவனங்களில் திறம்பட பணியாற்றியவர். பிரேக்கிங் நியூஸ், ஆழமான ஆய்வுக் கட்டுரைகளில் தனித்துவ முத்திரை பதித்த இவர், தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சீனியர் சப்-எடிட்டராகப் பொறுப்பு வகிக்கிறார். அறிவியல், புதிய டெக்னாலஜி, வணிகம், அரசியல் மற்றும் குற்றப் பின்னணி சார்ந்த விவகாரங்களை எளிய நடையில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
வணிகம்
 
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
2nd TEST • SA vs AUS
Result
SASA
425/9
AUSAUS
99 & 295
SA beat AUS by 31 runs
Schedule ›
5th T20 • IND vs WI
abandoned
INDIND
118/5
WIWI
-
Match abandoned
Schedule ›
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
NZNZ
Sat, 24 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
NZNZ
Tue, 27 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd TEST • SA vs AUS
SASA
Tue, 27 Oct, 2026
AUSAUS
02:00 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
Poonawalla Fincorp நிறுவனத்தின் கடன் சலுகைகளுடன் இந்தப் பண்டிகைக் காலத்தை மேலும் மகிழ்ச்சிகரமானதாக மாற்றுங்கள்
Recommended image2
5000 Withdrawal Limit: இந்த வங்கியில் ரூ.5,000 மட்டுமே எடுக்க முடியும்! ரிசர்வ் வங்கி அதிரடி
Recommended image3
புது கார் வாங்க பிளான் பண்றீங்களா? ஈஎம்ஐ மட்டும் பாக்காதீங்க: தவிர்க்க வேண்டிய 5 முக்கிய தவறுகள்!
Related Stories
Recommended image1
Oat Milk Business : துபாயில் ரூ.1 கோடி சம்பளம்! வேலையை விட்டுத் தொழில் தொடங்கிய பெண்.. இன்று ரூ.2.2 கோடி வருவாய்!
Recommended image2
JioFiber vs Jio AirFiber: ஒரே ஜியோ.. எது பெஸ்ட்? வேகம், கட்டணம், வசதி – எதில் லாபம் அதிகம்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved