MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • 2002-ல் ஒரே ஒரு சிறிய கடை, இன்று 400+ கடைகள்: ரூ.1.65 லட்சம் கோடி சாம்ராஜ்யத்தை உருவாக்கிய 'டி-மார்ட்' தமானி!

2002-ல் ஒரே ஒரு சிறிய கடை, இன்று 400+ கடைகள்: ரூ.1.65 லட்சம் கோடி சாம்ராஜ்யத்தை உருவாக்கிய 'டி-மார்ட்' தமானி!

மும்பையில் சோற்றுக்கே வழியில்லாத சிறிய அறையில் வாழ்ந்த ராதாகிஷன் தமானி, எப்படி இந்தியாவின் மிகப்பெரிய ரீடெயில் சாம்ராஜ்யமான 'டி-மார்ட் ' உருவாக்கினார் என்ற உத்வேகமான கதை பற்றி பார்ப்போம்.

2 Min read
Author : Meenakshisundaram
Published : Sep 23 2026, 09:33 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
ரூ.1.65 லட்சம் கோடி டி மார்ட் சாம்ராஜ்யத்தை உருவாக்கிய தமானி
Image Credit : instagram

ரூ.1.65 லட்சம் கோடி டி-மார்ட் சாம்ராஜ்யத்தை உருவாக்கிய தமானி

மும்பையின் நெரிசலான சந்துகளில் ஒருவேளை சாப்பாட்டுக்கே வழியில்லாமல் தவித்த ஒரு சிறுவன், பிற்காலத்தில் இந்தியாவின் மிகப்பெரிய சூப்பர் மார்க்கெட் சாம்ராஜ்யத்தை உருவாக்கி, லட்சக்கணக்கான கோடிகளுக்கு அதிபதியாவார் என்று யாராவது நினைத்து இருப்பார்களா?

இந்தியாவின் முன்னணி பெரும் பணக்காரர்களில் ஒருவரான ராதாகிஷன் தமானியின் (Radhakishan Damani) இந்த நிஜ வாழ்க்கை பயணம், எந்தவொரு சினிமா திரைக்கதையையும் மிஞ்சும் அசாத்திய உத்வேகக் கதை!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
வறுமை, தோல்வி & தொடக்க கால சோதனைகள்
Image Credit : x

வறுமை, தோல்வி & தொடக்க கால சோதனைகள்

ராஜஸ்தானின் ஒரு குக்கிராமத்தில் 1955 ஜூலை 12 அன்று பிறந்தவர் ராதாகிஷன் தமானி. பிழைப்பைத் தேடி குடும்பத்துடன் மும்பைக்கு வந்த அவரது தந்தை, அங்கு சிறிய தொழிலைச் செய்து வந்தார். ஒட்டுமொத்த குடும்பமும் அடைந்து கிடந்தது ஒரேயொரு சிறிய ஒற்றை அறையில்தான். படிப்பில் அவருக்கு சுத்தமாக நாட்டம் செல்லவில்லை. கல்லூரியில் சேர்ந்த முதல் ஆண்டிலேயே அனைத்துப் பாடங்களிலும் தோல்வியடைந்து படிப்பை பாதியிலேயே கைவிட்டார். வேறு வழியின்றி தந்தையின் சிறிய தொழில் பக்கமே ஒதுங்கினார்.

ஆனால், விதி அவரை அத்துடன் விடவில்லை. அடுத்தடுத்து சோதனைகள் வரிசைகட்டி நின்றன. எதிர்பாராத விதமாகத் தந்தை காலமானார்; மருத்துவச் செலவுகளிலும் குடும்பச் சுமையிலும் கையிலிருந்த சொற்பப் பணமும் கரைந்துபோனது. குடும்பத்தைக் காப்பாற்ற வழியில்லை; கையில் நயா பைசா இல்லை; எந்தவித சிறப்புத் திறமையும் இல்லை. ஆனால், அவரிடம் ஒரு விஷயம் மட்டும் அணையாத தீயாக எரிந்து கொண்டிருந்தது. வாழ்க்கையில் எப்படியாவது ஒரு பெரிய ஆளாக உருவெடுக்க வேண்டும் என்ற தீராத வெறி!

34
பங்குச் சந்தை கிங்: அடித்தளமிட்ட முதலீடுகள்
Image Credit : x

பங்குச் சந்தை கிங்: அடித்தளமிட்ட முதலீடுகள்

அடுத்து என்ன செய்வது என்று யோசித்த தமானி, இந்தியாவின் நிதித் தலைநகரான மும்பையின் பங்குச் சந்தைக்குள் (Stock Market) காலடி எடுத்து வைத்தார். தொடக்கத்தில் ஒரு சாதாரண 'ஸ்டாக் புரோக்கராக' (Stock Broker) தனது பயணத்தைத் தொடங்கியவர், சந்தையின் ஒவ்வொரு அசைவையும், ஏற்ற இறக்கங்களின் நுணுக்கங்களையும் மிகத் துல்லியமாகக் கற்றுத் தேர்ந்தார்.

அவரது கூர்மையான வர்த்தக முடிவுகளும் தீர்க்கமான நீண்ட கால முதலீடுகளும் கைகொடுக்கத் தொடங்கின. அடுத்த சில ஆண்டுகளிலேயே பங்குச் சந்தை முதலீடுகள் மூலம் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு மாபெரும் பணக்காரராக உயர்ந்தார்.

44
தேங்கி நிற்காத கனவு: 2002-ல் உதித்த 'டி-மார்ட்' புரட்சி!
Image Credit : Social Media

தேங்கி நிற்காத கனவு: 2002-ல் உதித்த 'டி-மார்ட்' புரட்சி!

பங்குச் சந்தையில் கொட்டிக்கிடந்த கோடிகள் பலரை ஓய்வெடுக்க வைத்திருக்கலாம். ஆனால், தமானிக்கு அது ஒரு புதிய தொடக்கத்தின் நுழைவுவாயிலாக மட்டுமே தெரிந்தது. இந்தியாவில் சூப்பர் மார்க்கெட்டுகள் மற்றும் சில்லறை வணிகம் (Retail Business) மெல்ல மெல்லத் தடம் பதிக்கத் தொடங்கிய காலகட்டம் அது.

சொந்தமாக ஒரு சில்லறை வர்த்தக சாம்ராஜ்யத்தை உருவாக்க வேண்டும் என்ற புதிய பெருங்கனவுடன், 2002-ஆம் ஆண்டு தனது முதல் டி-மார்ட் (DMart) கடையைத் திறந்தார். அன்று ஒரு சிறிய கடையில் தமானி விதைத்த அந்த விதை, இன்று விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது:400-க்கும் மேற்பட்ட பிரம்மாண்ட கிளைகள் இந்தியா முழுவதும் பரந்து விரிந்துள்ளன.

ரூ.1,40,000 கோடிக்கும் அதிகமான (ரூ.1.65 லட்சம் கோடி) பிரம்மாண்ட சந்தை மதிப்பு கொண்ட ரீடெயில் பேரரசாக அசுர வளர்ச்சி கண்டுள்ளது. பங்குச் சந்தையில் மாபெரும் வெற்றி பெற்ற பிறகும், இது போதும் என்று ஒரே இடத்தில் தேங்கி நிற்காமல், அடுத்தடுத்த கட்டங்களை நோக்கித் துணிச்சலாக நகர்ந்து பெரிய கனவுகளைத் துரத்தியதால்தான் ராதாகிஷன் தமானியால் இந்த வரலாற்றுச் சாதனையைப் படைக்க முடிந்தது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

M
Meenakshisundaram
மீடியா துறையில் 5+ ஆண்டுகள் அனுபவம் கொண்ட மீனாட்சிசுந்தரம், தி இந்தியன் எக்ஸ்பிரஸ், சன் நியூஸ், தந்தி டிவி, பாலிமர் நியூஸ் உள்ளிட்ட முன்னணி செய்தி நிறுவனங்களில் திறம்பட பணியாற்றியவர். பிரேக்கிங் நியூஸ், ஆழமான ஆய்வுக் கட்டுரைகளில் தனித்துவ முத்திரை பதித்த இவர், தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சீனியர் சப்-எடிட்டராகப் பொறுப்பு வகிக்கிறார். அறிவியல், புதிய டெக்னாலஜி, வணிகம், அரசியல் மற்றும் குற்றப் பின்னணி சார்ந்த விவகாரங்களை எளிய நடையில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
வணிகம்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Free Train Travel: ரயிலில் இனி இவர்களுக்கு கட்டணம் இல்லை! நவம்பர் 1 முதல் யாருக்கெல்லாம் இந்த வசதி தெரியுமா?
Recommended image2
Low Investment Business: வீட்ல இருந்தபடியே சம்பாதிக்கணுமா? இதோ 7 சூப்பர் ஐடியாஸ்!
Recommended image3
8th Pay Commission: OPS vs NPS விவகாரம்.! ஊழியர்கள் சொல்வது என்ன?
Related Stories
Recommended image1
Vegetable Price: காய்கறி வாங்கப் போறீங்களா? கோயம்பேடு சந்தையில் இன்று என்ன விலை தெரியுமா?
Recommended image2
Low Investment Business: வீட்ல இருந்தபடியே சம்பாதிக்கணுமா? இதோ 7 சூப்பர் ஐடியாஸ்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved