புத்தாண்டு முதல் பிக்ஸட் டெபாசிட் முதலீட்டுக்கு புதிய விதிகள்! ஆர்பிஐ அறிவிப்பு!
RBI Fixed Deposit New Rules: பிக்ஸட் டெபாசிட் (Fixed Deposit) தொடர்பான புதிய விதிகள் ஜனவரியில் அமலுக்கு வரும். இது தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் புத்தாண்டின் தொடக்கத்தில் என்னென்ன மாற்றங்கள் நிகழப் போகிறது என்பதை இத்தொகுப்பில் அறியலாம்.
Fixed Deposit New Rules by RBI
பிக்ஸட் டெபாசிட்களில் முதலீடு செய்பவர்களுக்கு முக்கிய செய்திகள் வெளியாகியுள்ளன. வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் மற்றும் வீட்டுக் கடன் நிறுவனங்களுக்கான விதிகளை இந்திய ரிசர்வ் வங்கி மாற்றியுள்ளது. புதிய விதிகள் ஜனவரி 2025 முதல் அமலுக்கு வரும் எனத் தெரிகிறது.
Fixed Deposit Rules for NBFC
வங்கி விதிகளின்படி, சிறிய டெபாசிட்களை திரும்பப் பெறுவது சுலபம். இப்போது ரிசர்வ் வங்கி வங்கி அல்லாத நிதி நிறுவனங்களில் டெபாசிட் செய்த தொகையின் முதிர்வு தொடர்பான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இந்த விதிகளைப் பின்பற்றுவது கட்டாயம். இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கும். ஆனால், தேவைப்படும் நேரத்தில் பணம் எடுப்பதில் எந்தப் பிரச்னையும் இருக்காது.
Fixed Deposit Investment
புதிய விதிகளின்படி, வாடிக்கையாளர்கள் சிறிய டெபாசிட்களை எளிதாக எடுக்க முடியும். பிக்ஸட் டெபாசிட்டின் மதிப்பு 10,000 ரூபாய்க்குக் குறைவாக இருந்தால், முன்கூட்டியே பணம் எடுக்க அனுமதிக்கப்படும். ஆனால், வட்டி கிடைக்காது. 10,000 க்கும் மேற்பட்ட தொகையாக இருந்தால், முதலீட்டாளர்கள் குறைந்தது 10 மாதங்களுக்குப் பிறகு திரும்பப் பெற அனுமதிக்கப்படுவார்கள்.
Fixed Deposits
மற்ற டெபாசிட்களுக்கு வாடிக்கையாளர்கள் வட்டி முதலீடு இல்லாமல் மூன்று மாதங்களுக்கு அசல் தொகையில் (ரூ. 5 லட்சத்திற்குள்) அதிகபட்சமாக 50% வரை திரும்பப் பெறக் கோரலாம். மருத்துவ சிகிச்சை தொடர்பான தேவைக்காக முதிர்வுக் காலம் வருவதற்கு முன்பே பிக்சட் டெபாசிட்டில் செலுத்திய அசல் தொகையைத் திரும்பப் பெற முடியும்.
Fixed Deposit Rules 2025
ரிசர்வ் வங்கி FD நாமினிகளை நியமிப்பது தொடர்பான செயல்முறையையும் மாற்றியுள்ளது. இப்போது வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள், நாமினி நியமனப் படிவங்களைச் சமர்ப்பித்து, வாடிக்கையாளர்கள் நாமினியை மாற்றும்போதும் நீக்கும்போதும் ஒப்புகைச் சீட்டு வழங்க வேண்டும். பாஸ்புக் மற்றும் ரசீதில் "பதிவுசெய்யப்பட்ட நியமனம்" என்ற வார்த்தைகளும் சேர்க்கப்பட வேண்டும்.
Fixed Deposit New Rules
பிக்ஸட் டெபாசிட் (FD) முதிர்வு தொடர்பான அறிவிப்புகளை நிதி நிறுவனங்கள் 14 நாட்களுக்கு முன்பே வெளியிட வேண்டும் என்று ஆர்பிஐ கூறியுள்ளது. இதற்கு முன்பாக, இது இரண்டு மாதங்களாக இருந்தது.