MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • 10 வினாடி தாமதம் ஆனாலும் Fastag கட்டணம் செலுத்த தேவையில்லை!

10 வினாடி தாமதம் ஆனாலும் Fastag கட்டணம் செலுத்த தேவையில்லை!

FASTag Rules: வாகனத்தில் பயணிக்கும் ஒவ்வொருவருக்கும் ஃபாஸ்டேக் பற்றி அறிமுகம் தேவையில்லை. சுங்கச்சாவடிகளில் அதிக நேரம் காத்திருக்காமல் விரைவாக கட்டணம் செலுத்தும் முறையே இந்த ஃபாஸ்டேக். இது ஒரு எலக்ட்ரானிக் கட்டண வசூல் அமைப்பு, இது இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (NHAI) கீழ் செயல்படுத்தப்படுகிறது. ஆனால் இந்த ஃபாஸ்டேக் பற்றி பலருக்கு சில விஷயங்கள் தெரியாது. அவற்றில் சிலவற்றை இப்போது தெரிந்துகொள்வோம்.

2 Min read
Author : SG Balan
Published : Mar 05 2025, 04:31 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
FASTag

FASTag

ஃபாஸ்டேக்கின் முக்கிய நோக்கம் என்ன?

சாலைகளில் சுங்கக் கட்டணம் செலுத்தும் போது வாகனங்கள் அதிக நேரம் காத்திருக்கக் கூடாது என்பதற்காக இந்த ஃபாஸ்டேக் முறை கொண்டு வரப்பட்டது. இதற்காக வாகன கண்ணாடிகளில் ஃபாஸ்டேக் கார்டு ஒட்டப்படுகிறது. இதன் மூலம் சுங்கச்சாவடியை கடக்கும்போது தானாகவே கணக்கில் இருந்து பணம் எடுக்கப்படும். இதன் மூலம் காண்டாக்ட்லெஸ் பேமெண்ட் சாத்தியமாகும். டேக் ஸ்கேன் செய்தவுடன் கணக்கில் இருந்து பணம் எடுக்கப்படும். நேரம் மற்றும் எரிபொருள் மிச்சமாகும். ஃபாஸ்டேக்கை மொபைல் வாலெட்கள், நெட் பேங்கிங், யூபிஐ, கிரெடிட்/டெபிட் கார்டுகள் மூலம் ரீசார்ஜ் செய்யலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
FASTag

FASTag

ஃபாஸ்டேக் கட்டாயம்:

இந்தியாவில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளிலும் ஃபாஸ்டேக் பயன்பாடு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அவசர கால சூழ்நிலைகளைத் தவிர மற்ற எல்லா நேரங்களிலும் ஃபாஸ்டேக் பயன்படுத்த வேண்டும். வங்கிகள், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) அங்கீகரித்த டீலர்கள், பெட்ரோல் பங்குகள், இ-காமர்ஸ் இணையதளங்கள் மூலம் ஃபாஸ்டேக் வாங்கலாம். ஃபாஸ்டேக் கணக்கில் போதுமான இருப்பு இல்லை என்றால் கார்டு பிளாக் செய்யப்படும்.

36
FASTag

FASTag

சில விதிமுறைகள்:

ஃபாஸ்டேக் வேலை செய்யவில்லை என்றால்: ஃபாஸ்டேக் கணக்கில் பணம் இருந்தும் ப்ராசஸ் ஆகவில்லை என்றால் நீங்கள் பணம் செலுத்த தேவையில்லை என்பது உங்களுக்கு தெரியுமா? சுங்கச்சாவடி நிர்வாகிகளிடம் பேமெண்ட் சம்பந்தமாக ஏதேனும் பிரச்சனை இருந்தால் பணம் செலுத்த தேவையில்லை என்று விதிமுறைகள் கூறுகின்றன. ஃபாஸ்டேக் வாலெட்டில் பணம் இருந்தும் சுங்கச்சாவடியில் ஸ்கேனர் வேலை செய்யவில்லை என்றால் கேஷ் கூட செலுத்த தேவையில்லை.

46
FASTag

FASTag

10 வினாடிகள் தாமதமானாலும்:

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் விதிமுறைகளின்படி சுங்கச்சாவடியில் 10 வினாடிகளுக்கு மேல் காத்திருக்க நேரிட்டாலும் பணம் செலுத்த தேவையில்லை என்று விதிமுறைகள் கூறுகின்றன.

56
FASTag

FASTag

மஞ்சள் கோடு:

சுங்கச்சாவடிக்கு 100 மீட்டர் தூரத்தில் மஞ்சள் கோடு இருக்கும். அந்த கோட்டுக்குள் வாகனங்கள் அதிக நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டாலும் கட்டணம் செலுத்த தேவையில்லை என்று விதிமுறைகள் கூறுகின்றன.

66
FASTag

FASTag

புகார் அளிக்கலாம்:

சுங்கச்சாவடி நிர்வாகிகள் மேலே குறிப்பிட்டுள்ள விதிமுறைகளை பின்பற்றவில்லை என்றால் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டணமில்லா எண் 1033க்கு கால் செய்து புகார் அளித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
ஃபாஸ்டேக் விதிகள்
 
4th T20 • NZ vs IND 2026
Live
NZNZ
(16.0 ov)206/4
INDIND
-
IND chose to bowl.
Schedule ›
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
(47.0 ov) 329 & 140/4
AUSAUS
429
Day 3
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
8th Pay Commission: 3 மாசத்துக்கு ஒருமுறை DA உயருமா? 8-வது ஊதியக் குழுவின் முக்கிய கோரிக்கைகள்
Recommended image2
Dindigul Thalappakatti : வெற்றிலை பாக்குக் கடையில் தொடங்கிய பயணம்! இன்று ₹1000 கோடி சாம்ராஜ்யம்!
Recommended image3
Indian Bank FD Rates: பிக்ஸட் டெபாசிட் வட்டி உயர்வு.. வாடிக்கையாளர்களுக்கு ஜாக்பாட்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved