PF கணக்கில் அதிக வட்டி! எந்த அபராதமும் கிடையாது! EFPO புதிய திட்டம் ரெடி!
EPFO Amnesty Scheme: ஊழியர்களின் EPF கணக்கில் பங்களிப்பைச் செலுத்தாத நிறுவனங்களுக்கு EPFO பொது மன்னிப்பு வழங்கியுள்ளது. கடந்த கால நிலுவைத் தொகையை அபராதமின்றி செலுத்த அனுமதிக்கப்படுவார்கள். மேலும், EPF கணக்கில் கடைசி தேதி வரை உறுப்பினர்களுக்கு வட்டி வழங்கப்படும்.

EPFO New Scheme
ஓய்வூதிய நிதியை நிர்வகிக்கும் நிறுவனமான EPFO, சனிக்கிழமையன்று முக்கிய முடிவை அறிவித்துள்ளது. ஊழியர்களின் EPF கணக்கில் பங்களிப்பைச் செலுத்தாத நிறுவனங்களுக்கு பொது மன்னிப்பு வழங்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
புதிய திட்டத்தின்படி, அவர்கள் கடந்த கால நிலுவைத் தொகையை எந்தவித அபராதமும் இல்லாமல் டெபாசிட் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இது தவிர, EPF திட்டம் 1952 இல் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் EPF கணக்கில் கடைசி தேதி வரை உறுப்பினர்களுக்கு வட்டி வழங்கப்படும்.
EPFO Update
இது தொடர்பாக தொழிலாளர் அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தொழிலாளர் அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையிலான தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) உச்ச முடிவெடுக்கும் அமைப்பான மத்திய அறங்காவலர் குழு (CBT) EPFO பொது மன்னிப்பு திட்டத்தை பரிந்துரைத்தது எனத் தெரிவித்துள்ளது.
EPFO Penalty on Employers
இந்தத் திட்டம் நிறுவனங்கள் தங்கள் கடந்தகால இணக்கமின்மையைத் தாமாக முன்வந்து வெளிப்படுத்துவதற்கும், அபராதம் அல்லது சட்டரீதியான விளைவுகளை எதிர்கொள்ளாமல் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை டெபாசிட் செய்வதற்கும் ஊக்குவிக்கும்.
EPFO benefits for Employees
அதிக ஊழியர்களுக்கு சமூகப் பாதுகாப்புப் பலன்களை வழங்குவது, நிறுவனங்களின் நம்பிக்கையை மீட்டெடுப்பது மற்றும் பணியாளர்களை முறைப்படுத்துவதை ஊக்குவிப்பது ஆகியவை இத்திட்டத்தின் நோக்கம் எனக் கூறப்படுகிறது. 2024-25 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட வேலைவாய்ப்பு தொடர்பான ஊக்கத் திட்டத்தை செயல்படுத்த இந்த முயற்சி உதவும்.
EPFO Interest
இதற்கிடையில், EPF திட்டம் 1952 இல் ஒரு திருத்தத்திற்கு குழு ஒப்புதல் அளித்தது. அதன் மூலம் கடைசி தேதி வரை EPF உறுப்பினர்களுக்கு வட்டி வழங்கப்படும். தற்போதுள்ள விதிகளின்படி, 24ஆம் தேதிக்குள் தீர்வு காணப்பட்ட கோரிக்கைகளுக்கு, முந்தைய மாத இறுதி வரை மட்டுமே வட்டி வழங்கப்படும். இந்த திருத்தம் காரணமாக, EPFO உறுப்பினர்கள் அதிக லாபத்தைப் பெறுவார்கள். புகார்களும் குறைக்கப்படும்.
EDLI Insurance Benefits
ஏப்ரல் 28, 2024 முதல் பணியாளர் வைப்புத்தொகையுடன் இணைக்கப்பட்ட காப்பீட்டின் (EDLI) பலன்கள் நீட்டிக்கப்படுகிறது என்பதை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) உறுதி செய்தது. இத்திட்டத்தின் கீழ், பணியாளர் உயிரிழக்கும் பட்சத்தில், அவரைச் சார்ந்திருப்பவர்களுக்கு ரூ.2.5 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரை காப்பீடு வழங்கப்படுகிறது.