நிதி நெருக்கடியா? 7 எளிய வழிகள் மூலம் நிம்மதியாக வாழுங்கள்
நிதி நெருக்கடியில் சிக்கியிருக்கிறீர்களா? கவலை வேண்டாம். உங்கள் வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்ல சில சிறந்த உத்திகள் இங்கே. இந்த 7 எளிய வழிகள் மூலம் நிதி நெருக்கடியிலிருந்து விடுபட்டு நிம்மதியாக வாழ்க்கையை வாழுங்கள்.

சம்பளத்தை 3 பங்காகப் பிரித்து சமநிலையை உருவாக்குங்கள்
50% - அத்தியாவசிய செலவுகள் (வாடகை, பில்கள், மளிகை)
30% - வாழ்க்கை முறை (பொழுதுபோக்கு, பயணம்)
20% - சேமிப்பு மற்றும் முதலீடு
முதல் வாரச் சேமிப்பு: சம்பளத்தில் 20% சேமிக்கவும்
மாதச் சம்பளத்தில் 20%-ஐ முதல் வாரத்திலேயே சேமிப்பில் போடுங்கள். பெரிய பொருட்கள் வாங்க நினைத்தால், ஒரு வாரம் பொறுத்திருங்கள். தேவையா, ஆசையா என்று யோசியுங்கள்.
அவசர நிதி: எதிர்பாராத செலவுகளுக்குத் தயாராக இருங்கள்
வேலை இழப்பு, உடல்நலக் குறைவு, குடும்ப அவசரநிலை போன்ற எதிர்பாராத நிகழ்வுகளுக்கு, மாதச் சம்பளத்தில் 6 மடங்கு அவசர நிதியை உருவாக்குங்கள்.
EMI கட்டுப்பாடு: மாதச் சம்பளத்தில் 40% மட்டுமே EMI
EMI-கள் மாதச் சம்பளத்தில் 40%-க்கு மேல் இருக்கக்கூடாது. இதனால் நிதி நெருக்கடி ஏற்படாது.
வாழ்க்கை காப்பீடு: டெர்ம் இன்சூரன்ஸ் அவசியம்
ஆண்டு வருமானத்தில் 20 மடங்கு டெர்ம் இன்சூரன்ஸ் எடுங்கள். குடும்பத்தின் நிதிப் பாதுகாப்பிற்கு இது அவசியம்.
72-ன் விதி: முதலீடு எப்போது இரட்டிப்பாகும்?
முதலீட்டின் வருடாந்திர லாபத்தை 72-ஆல் வகுத்தால், முதலீடு இரட்டிப்பாகும் வருடங்கள் கிடைக்கும்.
100-வயது விதி: எவ்வளவு ரிஸ்க் எடுக்கலாம்?
100 - உங்கள் வயது = ஈக்விட்டி முதலீட்டு சதவீதம். ரிஸ்க் மற்றும் பாதுகாப்பிற்கான சமநிலைக்கு இந்த விதி உதவும்.
7 பங்குகளில் முதலீடு செய்து பணக்காரர் ஆகுங்கள்! இல்லைனா வருத்தப்படுவீங்க!