Credit Card: கிரெடிட் கார்டு ஸ்கோரை மேம்படுத்த 5 வழிகள்! இதோ டிப்ஸ்!
சில வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் உங்கள் கிரெடிட் கார்டு ஸ்கோரை அதிகரிக்கலாம். கிரெடிட் கார்டு ஸ்கோரை பாதிக்கும் முக்கிய காரணிகள், அவற்றை மேம்படுத்தும் வழிகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

Credit Card Score Improve Tips
இன்று பெரும்பாலானவர்கள் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி வருகின்றனர். அத்தியாவசிய தேவைகளுக்கு கிரெடிட் கார்டுகள் பெரிதும் கைகொடுத்து வருகின்றன. அவசரத் தேவைகளுக்கு நண்பர்கள், தெரிந்தவர்களிடம் பணம் கிடைக்காத நிலையில் கிரெடிட் கார்டுகள் உதவி வருகின்றன. ஆனால் குறிப்பிட்ட தேதிக்குள் பணத்தை திருப்பி செலுத்துவது அவசியம். இல்லாவிடில் அது உங்களின் கிரெடிட் காரடு ஸ்கோரை பாதிக்கும். கிரெடிட் கார்டு ஸ்கோர் என்றால் என்ன? அது எப்படி செயல்படுகிறது? என்பது பலருக்கு முழுமையாகத் தெரியாவிட்டாலும், இது ஒருவரின் நிதி நிலையை பிரதிபலிக்கும் முக்கியமான கருவியாகும்.
1. பணம் செலுத்தும் வரலாறு (Payment History)
கிரெடிட் கார்டு ஸ்கோர் என்பது நீங்கள் எந்த அளவுக்குக் கடனைத் திருப்பிச் செலுத்த முடியும் என்ற நம்பகத்தன்மையைக் குறிக்கும் ஒரு எண் ஆகும். இது கடன் அனுமதி, வட்டி விகிதங்களை நேரடியாகப்
பாதிக்கிறது. இந்த செய்தியில் கிரெடிட் கார்டு ஸ்கோரை மேம்படுத்த 5 வழிகள் குறித்து பார்ப்போம்.
கிரெடிட் கார்டு ஸ்கோரில் மிக முக்கியமான அம்சம் நீங்கள் பில்களை சரியான நேரத்தில் செலுத்துகிறீர்களா என்பதுதான். ஒரு முறை தவறினாலும், அது பல ஆண்டுகளுக்கு ஸ்கோரை பாதிக்கும். தானியங்கி பணம் செலுத்துதல் அல்லது நினைவூட்டல்களைப் பயன்படுத்தி சரியான நேரத்தில் பணம் செலுத்துவது நல்லது.
2. கடன் பயன்பாடு (Credit Utilization)
உங்களுக்குக் கிடைக்கும் மொத்தக் கடனில் எவ்வளவு பயன்படுத்துகிறீர்கள் என்பதைக் குறிக்கும் சதவீதம் இது. 30%க்குள் வைத்திருப்பது நல்லது. அதிகமாகப் பயன்படுத்துவது நிதி நெருக்கடியைக் குறிக்கலாம். செலவுகளைக் கண்காணிப்பதன் மூலமும், சரியான நேரத்தில் நிலுவைத் தொகையைச் செலுத்துவதன் மூலமும் இதைக் கட்டுப்படுத்தலாம்.
3. கடன் வரலாற்றின் கால அளவு (Length of Credit History)
நீங்கள் எவ்வளவு காலமாகக் கடன் பயன்படுத்துகிறீர்கள் என்பதும் கிரெடிட் கார்டு ஸ்கோரில் ஒரு பங்கு வகிக்கிறது. பழைய கணக்குகளை மூடாமல், அவற்றில் குறைந்தபட்ச நடவடிக்கைகளை வைத்திருப்பதன் மூலம் நீண்ட கடன் வரலாற்றைப் பேணலாம். இவற்றின் விவரங்களையும் அறிந்து வைத்திருப்பதும் மிகவும் முக்கியமாகும்.
4. கடன் கலவை (Credit Mix)
தவணைக்கடன், கிரெடிட் கார்டுகள், சில்லறை விற்பனைக் கணக்குகள் போன்ற பல்வேறு வகையான கடன்களைச் சிறப்பாகக் கையாள்வது கிரெடிட் கார்டு ஸ்கோருக்கு மிகவும் நல்லது. இது நீங்கள் பல்வேறு வகையான கடன்களை நிர்வகிக்க முடியும் என்பதைக் காட்டுகிறது.
5. புதிய கடன் விண்ணப்பங்கள் (New Credit Inquiries)
புதிய கடனுக்கான ஒவ்வொரு விண்ணப்பமும் கடன் அறிக்கையில் ஒரு விசாரணையைஏற்படுத்தும். 6 மாதங்களில் பல விசாரணைகள் இருந்தால், கிரெடிட் கார்டு ஸ்கோர் குறையக்கூடும். தேவைப்படும்போது மட்டும் விண்ணப்பிப்பது நல்லது.இந்த ஐந்து அம்சங்களைப் புரிந்துகொண்டு பின்பற்றினால், உங்கள் கிரெடிட் கார்டு ஸ்கோரை மேம்படுத்தி, சிறந்த நிதி வாய்ப்புகளைப் பெறலாம்.
கிரெடிட் கார்டில் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டால், அதிக வட்டி செலுத்த வேண்டியிருக்கும் என்பதையும் மனதில் கொள்ளுங்கள். ஆகவே வட்டி விகிதம் குறைவாக உள்ள கிரெடிட் கார்டைத் தேர்வு செய்வது மிகவும் நல்லது. ஒவ்வொரு கிரெடிட் கார்டுடன் தொடர்புடைய கட்டணங்களை தெரிந்து கொள்வது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.