MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • ஹோட்டலில் தங்கும்போது ஆதார் கார்டைக் கொடுத்தீங்களா? இனி இந்த தப்பை மட்டும் செய்யாதீங்க!

ஹோட்டலில் தங்கும்போது ஆதார் கார்டைக் கொடுத்தீங்களா? இனி இந்த தப்பை மட்டும் செய்யாதீங்க!

இந்தியாவில் ஆதார் அட்டை பல தேவைகளுக்கு பயன்படும் முக்கியமான ஆவணமாக உள்ளது. வங்கிக் கணக்கு, பான் கார்டு, ரேஷன் கார்டு, ஓட்டுநர் உரிமம் என பலவும் ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்டுள்ளன. எனவே ஆதார் தகவல்களை மிகக் கவனமாகப் பயன்படுத்த வேண்டும். 

2 Min read
SG Balan
Published : Sep 11 2024, 03:13 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Using Aadhaar

Using Aadhaar

ஹோட்டலில் அறையை முன்பதிவு செய்துவிட்டு செக்-இன் செய்யும்போதெல்லாம் ஆதார் கார்டு கேட்கப்படும். அப்போது 99.9 சதவீதம் பேர் தங்களது ஆதார் அட்டையின் அசல் நகலைக் கொடுக்கிறார்கள். இது எவ்வளவு பெரிய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என்பதை மக்கள் உணரவில்லை.

25
Sharing Aadhaar card in hotels

Sharing Aadhaar card in hotels

ஆதார் அட்டை மூலம் தனிப்பட்ட தகவல்களை யார் வேண்டுமானாலும் திருடும் அபாயம் உள்ளது என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். வங்கிக் கணக்கும் பாதிக்கப்படலாம். இதுபோன்ற ஆபத்துகள் அனைத்தையும் தவிர்க்க விரும்பினால், முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். அசல் ஆதார் அட்டையையோ அதன் புகைப்பட நகலையோ ஹோட்டலில் கொடுக்கவே கூடாது. இதுபோன்ற இடங்களில் நீங்கள் எப்போதும் மாஸ்க் ஆதார் கார்டை பயன்படுத்த வேண்டும்.

35
Aadhaar Safety

Aadhaar Safety

முதலில் மாஸ்க் ஆதார் என்றால் என்ன என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இன்றைய காலகட்டத்தில் ஆதார் அட்டை ஒரு முக்கியமான ஆவணமாக மாறிவிட்டது. வங்கிக் கணக்கைத் தொடங்குவது, கடன் பெறுவது, அரசுத் திட்டங்களில் பலன் பெற விண்ணப்பிப்பது போன்ற என பல இடங்களில் தகவல் சரிபார்ப்புக்கு ஆதார் அட்டை தேவைப்படுகிறது. ஆதார் இவ்வளவு முக்கியமான ஆவணமாக இருப்பதால், அதில் உள்ள விவரங்களின் முக்கியத்துவத்தையும் புரிந்துகொள்ளலாம். எனவே எந்தவிதமான மோசடிக்கும் பலியாகாமல் இருக்க ஆதார் தகவல்களை மிகக் கவனமாகப் பயன்படுத்த வேண்டும்.

45
Masked Aadhaar Card

Masked Aadhaar Card

மாஸ்க் ஆதார் கார்டு என்பது ஆதார் தகவல்களுக்கு முழுமையான பாதுகாப்பு வழங்குகிறது. ​​மாஸ்க் ஆதார் கார்டில் வழக்கமான ஆதார் அட்டையில் உள்ள சில விவரங்கள் மட்டும் மறைக்கப்பட்டிருக்கும். குறிப்பாக ஆதார் எண்ணின் முதல் 8 இலக்கங்கள் தெரியாது. கடைசி 4 இலக்கங்களை மட்டுமே பார்க்க முடியும். இது ஆதார் அட்டையைப் பாதுகாப்பாக வைத்திருக்கும் அம்சம் ஆகும்.

55
UIDAI portal

UIDAI portal

மாஸ்க் ஆதார் அட்டையை https://uidai.gov.in/ என்ற ஆதார் ஆணையத்தின் (UIDAI) அதிகாரபூர்வ இணையதளத்தில் இருந்து டவுன்லோட் செய்யலாம். இந்த மாஸ்க் ஆதார் கார்டை எந்த ஹோட்டலிலும் முன்பதிவு செய்வும், செக் அவுட் செய்யும்போதும் பயன்படுத்தலாம். விமான நிலையத்திலும் இந்த மாஸ்க் ஆதார் அட்டையைப் பயன்படுத்தலாம். எனவே, ஆதார் தகவல்கள் பாதுகாப்பாக இருக்க மாஸ்க் ஆதார் கார்டை பயன்படுத்தப் பழகிக்கொள்வது நல்லது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
ஆதார் அட்டை

Latest Videos
Recommended Stories
Recommended image1
வீடு, கார், தனிநபர் கடன்களில் இஎம்ஐ குறையுது.. ரிசர்வ் வங்கியின் பரிசு.. எவ்வளவு குறையும்?
Recommended image2
கடன் வாங்கியவர்களுக்கு குட் நியூஸ்.. ரெப்போ விகிதம் 5.25% ஆக குறைப்பு.. அதிரடி முடிவு
Recommended image3
Farmer: விவசாயிகளே, மழை வருதுன்னு பயப்படாதீங்க! பயிர்களை காப்பாற்றும் 10 ஸ்மார்ட் டிப்ஸ் இதோ.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved