MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • Day trading - யாருக்கு லாபத்தை அள்ளித்தரும்?

Day trading - யாருக்கு லாபத்தை அள்ளித்தரும்?

டே டிரேடிங் என்பது பங்குகளை வாங்கி அதே நாளில் விற்று லாபம் ஈட்டும் முதலீட்டு முறை. இதில் வெற்றி பெற சந்தை நிலவரம், வர்த்தக திறன், பொறுமை, மற்றும் சரியான நேரத்தில் முடிவெடுக்கும் திறன் அவசியம். 

2 Min read
Vedarethinam Ramalingam
Published : Jun 01 2025, 02:27 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
Day Trading எனும் ஆச்சரியம்
Image Credit : our own

Day Trading எனும் ஆச்சரியம்

டே டிரேடிங் (Day Trading) என்பது ஒரு நாளில் பங்குகளை வாங்கி, அதே நாளில் விற்று லாபம் ஈட்டும் ஒரு முதலீட்டு முறை. இது ஒரு வேகமான முதலீட்டு முறையாகும், இதில் ஒருவரின் வர்த்தக திறன்கள் மற்றும் சந்தை நிலைமைகளின் துல்லியமான மதிப்பீடு முக்கிய பங்கு வகிக்கிறது. காலையில் பங்குகளை வாங்கி, மாலைக்குள் விற்று லாபம் பார்க்கும் டே டிரேடிங்கில் சிலர் லாபம் பார்த்து வரும் நிலையில் பலரின் கையையும் அது கடித்து விடும் என்பதே பொதுவான கருத்தாக உள்ளது.

28
இதை செய்தால் டிரேடிங் கேட்டதை கொடுக்கும்
Image Credit : Getty

இதை செய்தால் டிரேடிங் கேட்டதை கொடுக்கும்

டே டிரேடிங்கில் லாபம் சம்பாதித்திருக்கும் தனிமனிதர்கள் வெறும் 10% தான் என்கிறது ஒரு சர்வே. அதேபோல் 99 சதவீதம் பேர் நஷ்டம் அடைகின்றனர் என்ற கருத்தும் நிலவுகிறது. பண நஷ்டம் மட்டுமன்றி, கண்ணெதிரே நொடிக்கு நொடி சந்தை ஏறுவதையும் இறங்குவதையும் பார்த்துப் பதைபதைத்துப் போவதில் உடலும் மனமும்கூட சலித்து நொந்துபோகும் என்பதால் கவனம் தேவை என்பதே பல்வேறு தரப்பினரின் அறிவுரை.ஆனால் ஒரு சில விஷங்களில் கவனம் செலுத்தினால் டே டிரேடிங் நமக்கு ஏற்றத்தை தரும் என்கின்றனர் சந்தை நிபுணர்கள்.கொஞ்சம் கவனம், கூடுதல் பொறுமை மற்றும் கால்குலேஷன் மைண்ட் ஆகியவை இருந்தால் டே டிரேடிங்கில் கலக்கலாம்.

Related Articles

Related image1
இந்திய பங்குச்சந்தை சரிவுக்கான 7 காரணங்கள்
Related image2
ஓய்வு காலத்தில் மாதம் ரூ.4 லட்சம் பென்ஷன் பெற இப்படி முதலீடு செய்யுங்கள்!
38
புள்ளி விவரம் என்ன சொல்கிறது?
Image Credit : Getty

புள்ளி விவரம் என்ன சொல்கிறது?

டே டிரேடிங்கில் கால்பதிக்கும் 70% பேர் நஷ்டத்தையே சந்திப்பதாக ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. ஆனால்  பெரும்பான்மையானவர்களுக்கு நஷ்டத்தைத் தருமானால் அதில் பலரால் தொடர்ந்து எப்படி லாபத்தை கொடுக்க முடிகிறது என்பதே சிலரின் கேள்வியாக உள்ளது. முக்கியமாக நான்கு தகுதிகள் இருந்தால்தான், டே டிரேடிங்கில் ஈடுபட்டு வெற்றியடைய முடியும் என்கின்றனர் சந்தை நிபுணர்கள்.

48
கவனம் தேவை
Image Credit : our own

கவனம் தேவை

டே டிரேடிங்கில் ஈடுபட வேண்டுமானால் வர்த்தகம் நடக்கும் நேரத்தில் முழுமையாக அதில் கவனம் செலுத்தும் அளவுக்கு நேரத்தை ஒதுக்கவேண்டும் என்பது கட்டாயம்

58
கணிக்க தெரிந்த மனம் வேண்டும்
Image Credit : Gemini

கணிக்க தெரிந்த மனம் வேண்டும்

அதேபோல் நம்பர்களையும் செய்திகளையும் கையாளும் திறன் இருக்கவேண்டும் எனவும் ஒரு செய்தி நடந்தால் அதற்கு சந்தை எப்படி ரியாக்ட் செய்யும் என்பதைக் கணிக்கத் தெரிந்திருக்கவேண்டும் என்றும் சந்த நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இவ்வளவு எண்ணிக்கையில் வர்த்தகம் நடக்கிறது என்றால் நாம் நுழையலாமா, கூடாதா என்பதைத் தீர்மானிக்க தெரிந்திருந்தால் சந்தையில் கலக்கலாம் எனவும் அவர்கள் கூறுகின்றனர்.

68
எல்லா பணத்தையும் போட வேண்டாம்
Image Credit : Gemini

எல்லா பணத்தையும் போட வேண்டாம்

போட்ட பணமே போனாலும் பாதிப்பில்லை என்று ரிஸ்க் எடுக்கக்கூடிய அளவுக்குப் பணம் இருக்கவேண்டும். எல்லாவற்றையும் விட இதுதான் மிக முக்கியமானது. இதுதான் ஒருவரின் வெற்றியைத் தீர்மானிக்கக் கூடியதாக இருக்கிறது.

78
வேகமாக சரியான முடிவெடுக்கும் திறன் வேண்டும்
Image Credit : rawpixel.com@freepik

வேகமாக சரியான முடிவெடுக்கும் திறன் வேண்டும்

டே டிரேடிங்கின் வெற்றி சரியான நேரத்தில் வேகமாக எடுக்கப்படும் சரியான முடிவைக்கொண்டே அமைகிறது. எனவே முடிவெடுக்கும் திறனைக்கொண்டே வெற்றி சாத்தியமாகிறது. போட்டி நிறைந்த சந்தையில் சரியான முடிவெடுக்கும் திறன் என்பது சூழ்நிலையைப் புரிந்துகொண்டு, மற்ற டிரேடர்களின் முடிவு என்னவாக இருக்கும் எனக் கணித்து, அதற்கு ஈடான முடிவெடுப்பதேயாகும். அதனை சரியாக செய்தால் கண்டிப்பாக வெற்றி பெறலாம்.இவற்றோடு, டே டிரேடிங்கை ஒரு அன்றாடத் தொழிலாக மேற்கொள்ள விரும்புபவர்கள் என்.எஸ்.இ போன்ற நிறுவனங்கள் தரும் கட்டணப் பயிற்சியைப் பெறுவது அவசியம்!

88
புத்திசாலித்தனம் அவசியம்
Image Credit : DCStudio@freepik

புத்திசாலித்தனம் அவசியம்

லாபத்தை ஈட்டித்தரும் இந்த முடிவெடுக்கும் திறன் ஒவ்வொரு மனிதரிடமும் பெருமளவு வேறுபடுகிறது. அதனால்தான் மார்க்கெட்டில் பணம் சம்பாதித்து பென்ஸ் கார் வைத்திருப்பவர்களையும் பார்க்கிறோம். பணத்தைத் தொலைத்துத் தவித்து நிற்பவர்களையும் பார்க்கிறோம்.டே டிரேடிங் என்பதை ஒரு சூதாட்டமாக நினைக்காமல், நன்கு விஷயம் தெரிந்து செய்யக்கூடிய சாதுரியமான வர்த்தகம் என்று நினைத்து புத்திசாலித்தனமாகச் செய்ய முடிவெடுத்தால், அதில் இறங்கலாம். இல்லாவிட்டால், இருப்பதே போதும் என்று நினைத்து நம் தினப்படி வேலைகளில் கவனம் செலுத்தலாம்

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
வர்த்தகம்
பங்குச் சந்தை
பங்குகள்
முதலீடு
வணிகம்
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved