நம்ப அக்கவுண்ட் தானேனு இஸ்டத்துக்கு பேங்க்ல பணம் போடாதீங்க; அப்றம் பிரச்சினையாகிடும்
பெரும்பாலான மக்கள் தங்கள் பணத்தை பாதுாகப்பாக வைக்க தேர்ந்தெடுக்கும் முதல் தேர்வாக வங்கி இருக்கும் நிலையில் நாம் கட்டாயம் அறிந்திருக்க வேண்டிய அடிப்படை வங்கி விதியை பற்றி பார்க்கலாம்.
சேமிப்பு கணக்கு
தற்போதைய சூழலில் நாட்டில் வங்கியில் கணக்கு இல்லாத குடும்பமே இல்லை என்று சொல்லும் அளவிற்கு அனைவரும் வங்கி கணக்கு துவங்கி உள்ளனர். மேலும் அரசின் பல நலத்திட்டங்கள் நேரடியாக வங்கி கணக்குகளுக்கு தான் வரவு வைக்கப்படுகின்றன. மக்கள் தங்கள் சேமிப்புக் கணக்கில் பணத்தை டெபாசிட் செய்கிறார்கள். ஆனால், சேமிப்புக் கணக்கில் எவ்வளவு பணம் சேமித்து வைப்பது என்பது உங்களுக்குத் தெரியுமா? வங்கி நட்டமடைந்தாலும், திவாலானாலும் நமக்கு ஒரு பைசா கூட நஷ்டம் ஏற்படாது. இதை விட அதிகமாக டெபாசிட் செய்தால் உங்கள் பணம் பறிபோகும்.
ஜன்தன் யோஜனா
ஜன்தன் யோஜனா திட்டத்தின் கீழ் மட்டும் இந்தியா முழுமைக்கும் சுமார் 45 கோடி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், ஒருவரது கணக்கில் எவ்வளவு பணம் பாதுகாப்பாக வைக்கப்படுகிறது என்பது பெரும்பாலான வாடிக்கையாளர்களுக்கு தெரியாது. வங்கிகள் எளிதில் திவாலாகாது என்றாலும், வங்கிகள் திவாலானதற்கு பல உதாரணங்கள் உள்ளன. அண்மையில், இதேபோன்ற ஒரு நிலை யெஸ் வங்கிக்கு ஏற்பட்டு வங்கி திவாலாகும் நிலை ஏற்பட்டது. வங்கிகள் எப்போதும் பாதுகாப்பாக இருக்கும் என்பதை உறுதியாக சொல்ல முடியாது.
இழப்பு
வங்கியில் கொள்ளை அல்லது இயற்கை பேரழிவு ஏற்பட்டு இழப்பை சந்தித்தால், வங்கிகள் உங்கள் முழுப் பணத்திற்கும் உத்தரவாதம் அளிக்காது. அத்தகைய சூழ்நிலையில், எவ்வளவு பணத்தை திரும்ப வழங்க வங்கிகள் கடமைப்பட்டுள்ளன என்பதை அறிவது மிகவும் அவசியமானது. உங்கள் கணக்கில் எவ்வளவு தொகை இருப்பு வைக்கப்பட்டிருந்தாலும் இழப்பு ஏற்பட்டால் வங்கிகள் எவ்வளவு பணத்தை திருப்பித் தர வேண்டும் என்பதை இப்போது நாங்கள் உங்களுக்குச் சொல்வோம்.
ரிசர்வ் வங்கி
டெபாசிட் இன்சூரன்ஸ் மற்றும் கிரெடிட் கேரண்டி கார்ப்பரேஷன் சட்டம் 1961 பிரிவு 16 (1)ன் கீழ், வங்கியில் எந்த வடிவத்திலும் டெபாசிட் செய்யப்பட்ட உங்கள் பணம் ரூ.5 லட்சம் வரை மட்டுமே உத்தரவாதம் அளிக்கப்படுகிறது. இதை விட அதிக பணம் டெபாசிட் செய்யப்படும் பட்சத்தில் வங்கி நஷ்டத்தில் மூழ்கும் நிலை ஏற்பட்டாலும். ரிசர்வ் வங்கியின் டெபாசிட் இன்சூரன்ஸ் மற்றும் கிரெடிட் கியாரண்டி கார்ப்பரேஷன் (டிஐசிஜிசி) உங்கள் டெபாசிட்டுக்கு உத்தரவாதம் அளிக்கிறது. ஆனால் இந்த தொகை எந்த வகையிலும் ரூ.5 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
உத்தரவாதம்
ரூ.5 லட்சம் வரையிலான உங்கள் தொகைக்கு ஒரே ஒரு வங்கி மட்டுமே உத்தரவாதம் அளிக்கிறதா என்று கேட்டால் இல்லை. உங்கள் வெவ்வேறு கணக்குகளில் எவ்வளவு பணம் இருப்பு வைக்கப்பட்டாலும், அதற்கு ரூ.5 லட்சம் மட்டுமே உத்தரவாதம் இருக்கும். நீங்கள் இந்த பணத்தை சேமிப்புக் கணக்கிலோ அல்லது நடப்புக் கணக்கிலோ வைத்திருந்தாலும் அல்லது FDஐ பெற்றாலும் சரி. ஒட்டுமொத்தமாக, வங்கி உங்களுக்கு ரூ.5 லட்சத்தை மட்டுமே திருப்பித் தர வேண்டும்.