- Home
- Business
- கிரெடிட் கார்டு யூஸ் பண்றீங்களா? ஏப்ரல் 1 முதல் டோட்டலாக மாறும் ரூல்ஸ்.. முழு விவரம் இதோ!
கிரெடிட் கார்டு யூஸ் பண்றீங்களா? ஏப்ரல் 1 முதல் டோட்டலாக மாறும் ரூல்ஸ்.. முழு விவரம் இதோ!
Credit Card New Rules April 2026: ஏப்ரல் 1ம் தேதி முதல் கிரெடிட் கார்டு விதிகளில் அதிரடி மாற்றங்கள் வரப்போகிறது. அவை என்னென்ன? என்பது குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

கிரெடிட் கார்டு விதிகளில் அதிரடி மாற்றம்
ஏப்ரல் 1ம் தேதி முதல் கிரெடிட் கார்டு சம்பந்தமாக சில பெரிய மாற்றங்கள் வரப்போகுது. வருமான வரிச் சட்டம் 2025-ன் கீழ் இந்த மாற்றங்கள் அமலுக்கு வரும். பான் கார்டு இணைப்பு, அதிக மதிப்புள்ள பரிவர்த்தனைகள் மீது கண்காணிப்பு எனப் பல புதிய விதிகள் வரவிருக்கின்றன. தினசரி செலவுகளுக்கு கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்களுக்கு பெரிய பாதிப்பு இருக்காது. ஆனால், நீங்க அதிகமா செலவு செய்றவரா இருந்தா, அல்லது அடிக்கடி வெளிநாடு பயணம் செய்றவரா இருந்தா, இந்த புதிய விதிகள் உங்களை நேரடியாகப் பாதிக்கும்.
பரிவர்த்தனைகள் தீவிரமாக கண்காணிக்கப்படும்
அதாவது அதிக மதிப்புள்ள பரிவர்த்தனைகள் இனி தீவிரமாகக் கண்காணிக்கப்படும். ஏப்ரல் 1 முதல், ஒரு நிதியாண்டில் உங்க கிரெடிட் கார்டு மூலமா நீங்க ₹10 லட்சத்துக்கும் மேல் செலவு செய்தால் உங்கள் வங்கி இந்தத் தகவலை வருமான வரித்துறைக்குத் தெரிவிக்கும். உங்க வருமான வரி தாக்கலை விட செலவு அதிகமா இருந்தால் விளக்கம் கேட்டு நோட்டீஸ் வரலாம்.
இனி பான் எண் கட்டாயம்
கிரெடிட் கார்டுக்கு இனி பான் எண் கட்டாயம். ஏப்ரல் 1 முதல், வங்கிகள் பான் எண் இல்லாம புது கிரெடிட் கார்டு கொடுக்காது. ஏற்கனவே இருக்கிற கார்டுகளையும் பான் எண்ணுடன் இணைக்க வேண்டும். இதனால, உங்க கிரெடிட் கார்டு உங்க வரி அடையாளத்தோட ஒரு முக்கிய பகுதியா மாறிடும். உங்க கம்பெனி உங்களுக்கு கிரெடிட் கார்டு கொடுத்திருந்தா, இது உங்களுக்குத்தான்.
சரியான நேரத்தில் பில் கட்ட வேண்டும்
ஏப்ரல் 1 முதல், கம்பெனி கார்டை பயன்படுத்தி நீங்க செய்யுற தனிப்பட்ட செலவுகள், வரிக்குட்பட்ட சலுகையா கருதப்படலாம். அதாவது, பர்சனல் ஷாப்பிங், டூர் போன்றவற்றுக்கு கம்பெனி கார்டை பயன்படுத்தினா, அந்தத் தொகை உங்க சம்பளத்தோட சேர்க்கப்பட்டு வரி விதிக்கப்படலாம். செலவு வேலை சம்பந்தப்பட்டதுதான்னு நிரூபிக்க நீங்க பில்களை சமர்ப்பிக்க வேண்டியிருக்கும். வருமான வரியை இனி கிரெடிட் கார்டு மூலமாவும் செலுத்த ஒரு புதிய ஆப்ஷன் வரலாம். கையில பணம் இல்லாத சமயத்துல இது ரொம்ப உதவியா இருக்கும். ஆனா ஜாக்கிரதை, இதுக்கு உங்க வங்கி புராசஸிங் கட்டணம் வசூலிக்கலாம். சரியான நேரத்துல பில் கட்டலைனா வட்டியும் சேரும்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

