- Home
- Business
- அடி தூள்.! இனி டிவி, ஏசி, வாஷிங் மெஷின் ரொம்ப கம்மியான விலையில் வாங்கலாம்.! பொதுமக்களுக்கு ஜாக்பாட் பரிசு
அடி தூள்.! இனி டிவி, ஏசி, வாஷிங் மெஷின் ரொம்ப கம்மியான விலையில் வாங்கலாம்.! பொதுமக்களுக்கு ஜாக்பாட் பரிசு
இந்தியாவில் ஜிஎஸ்டி வரி விதிப்பால் மக்கள் பாதிக்கப்பட்ட நிலையில், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பல்வேறு பொருட்களுக்கான வரி விகிதங்கள் குறைக்கப்பட்டு, செப்டம்பர் 22 முதல் நடைமுறைக்கு வரும்.

இந்திய மக்களுக்கு தீபாவளி பரிசு
இந்தியாவில் ஜிஎஸ்டி வரி விதிப்பால் பல ஆயிரங்கள் முதல் பல லட்சங்கள் வரை வரிகளாகவே செலுத்தும் நிலை உள்ளது. இதனால் அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் தான் பிரதமர் நரேந்திர மோடி, ஆகஸ்ட் 15 அன்று சுதந்திர தின உரையில் வரி குறைப்பு தொடர்பான சீர்திருத்தங்களை அறிவித்தார்.
இதன் மூலம், ஜிஎஸ்டி வரி சலுகைகள் மற்றும் விகிதங்கள் எளிமைப்படுத்தப்பட்டு, சாதாரண மக்கள், விவசாயிகள், நடுத்தர வர்க்கம் உள்ளிட்டோருக்கு குறையும் என தெரிவிக்கப்பட்டது.
ஜிஎஸ்டி வரியை மாற்றிய மத்திய அரசு
அந்த வகையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 2025 செப்டம்பர் 3-4 அன்று டெல்லியில் நடந்த 56வது கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், தற்போது நடைமுறையில் உள்ள 5 %, 12 %, 18 % மற்றும் 28 சதவீதம் ஆகிய ஜிஎஸ்டி வரி விதிப்பு முறைகள் மாற்றப்பட்டுள்ளது. இதன் படி ஜிஎஸ்டியில் 12 சதவீதம், 28 சதவீதம் என்ற இரு வரிகள் நீக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக 5 சதவீதம், 18 சதவீத வரிகள் மட்டுமே இனி வரும் நாட்களில் நடைமுறையில் தொடர உள்ளது.
உணவு, கல்வி பொருட்களுக்கு 0% வரி
உணவு தானியங்கள், பால், மருத்துவம், கல்வி சார்ந்த உபகரணங்களுக்கு 0% வரி விதிக்கப்பட்டுள்ளது. மருந்துகள் ( 12% இலிருந்து 5%க்கு), பழங்கள், காய்கறிகள், டூத்பிரசு, சோப்பு, ஷாம்பு, சிறு கார்கள், பிராண்டட் உடைகள் (₹1,000க்கு மேல்), காலணிகள் (₹1,000-₹5,000 வரை) 5% வரியாக குறைக்கப்பட்டுள்ளது.
மேலும் பாஸ்தா, நூடுல்ஸ், மக்ரோனி போன்ற உணவு பொருட்களுக்கான ஏற்கனவே விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரியான 18 சதவீதத்தில் இருந்து தற்போது 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும்
டிவி, பிரிட்ஜ் வரி குறைப்பு
மேலும் மக்கள் வீடுகளில் அதிகமாக பயன்படுத்தப்படும் ஏசி, டிவி >32 இன்ச், வாஷிங் மெஷின், மொபைல் போன்கள், கம்ப்யூட்டர்கள், சிமெண்ட், ஐஸ் கிரீம், ஜூஸ், பேக்கட் உணவு, பல ஜவுளி பொருட்களுக்கான வரியும் 18% வரியாக குறைக்கப்பட்டுள்ளது.
இதே போல இருசக்கர வாகனங்கள், ஆட்டோ மற்றும் சரக்கு வாகனங்க்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வரி குறைப்பானது வருகிற செப்டம்பர் 22ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.