வங்கிகளில் இனி தினமும் டெபாசிட் செய்ய முடியாது?; சேவை நேரமும் மாறுகிறது? வரப்போகும் அதிரடி மாற்றம்!
வங்கிகளில் டெபாசிட் உள்ளிட்ட பரிவர்த்தனை நடைபெறும் நிலையில், இதில் மத்திய அதிரடி மாற்றத்தை கொண்டு வர உள்ளது. இது தொடர்பான விவரத்தை பார்ப்போம்.
இந்தியாவில் தினமும் பல லட்சக்கணக்கான மக்கள் வங்கி சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இப்போது மாதத்தின் நான்கு ஞாயிற்றுக்கிழமைகள் தவிர, இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளிலும் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த விடுமுறை நாட்களை தவிர மற்ற நாட்களில் வங்கிகள் முழுமையாக இயங்குவதால் பெரும் பணிச்சுமைக்கு ஆளாவதாக வங்கி ஊழியர்கள் தொடர்ந்து தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், வங்கிகள் தொடர்பாக மத்திய அதிரடி மாற்றத்தை கொண்டு வர உள்ளது.
அதாவது வங்கிகளின் டெபாசிட் உள்ளிட்ட பணபரிவர்த்தனைகளில் இந்த மாற்றம் வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இனிமேல் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியாது.
பரிவர்த்தனைகளுக்கு குறிப்பிட்ட நாட்கள் நியமிக்கப்படும், மேலும் நேரங்களும் மாறும் என்று தகவல்கள் கூறுகின்றன. அதாவது வங்கிகளில் இனிமேல் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை மட்டுமே மக்கள் பணபரிவர்த்தனை செய்ய அனுமதிக்கப்படுவார்கள் சனிக்கிழமைகளில் வங்கிகள் முழுமையாக மூடப்பட்டிருக்கும் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இப்போது பெரும்பாலான வங்கிகளில் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை மட்டுமே பணவரிவர்த்தனை செய்யப்படுகிறது. ஆனால் இனிமேல் மாலை 6 மணி வரை பணவரிவர்த்தனை செய்யும் வகையில் மாற்றம் வரப்போகிறது. என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தங்களுக்கு பணிச்சுமை அதிகமாக இருப்பதால், 5 நாட்கள் மட்டுமே வேலை என்ற கோரிக்கையை வங்கி ஊழியர்கள் நீண்ட காலமாக முன்வைத்து வந்தனர். மத்திய அரசு இறுதியாக அவர்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்க உள்ளது.
ஆனால் வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை என்பது வங்கி ஊழியர்களுக்கு எந்த அளவுக்கு உதவியாக இருக்கும் என்பது தெரியவில்லை. வாரத்தில் 5 நாள் வேலை நேரத்தை ஈடுகட்ட வங்கி ஊழியர்கள் அதிக நேரம் வேலை செய்ய வேண்டியிருக்கும். பரிவர்த்தனைகள் இப்போது பல கூடுதல் மணிநேரங்களுக்குத் தொடரும்.
பொதுமக்களை பொறுத்தவரை வங்கிகள் 5 நாட்கள் மட்டுமே இயங்கினால் பணவரிவர்த்தனை நேரம் நீட்டிக்கப்படும். மாலை 6 மணி வரை வங்கிகளைத் திறந்து வைத்திருக்க முடிவு எடுக்கப்படுகிறது. இதனால் மாலை 3 மணிக்கு பிறகும் எளிதாக பணபரிவர்த்தனை செய்ய முடியும். மாலையிலும் உங்கள் வங்கி பணிகளை முடிக்கலாம்.
இனிமேல் வாரத்துக்கு 5 நாட்கள் மட்டுமே வங்கிகள் இயங்கும் நடைமுறை வந்தால் வங்கி ஊழியர்கள் இந்த 5 நாட்களுக்குள் மொத்த பணிகளையும் முடிக்க வேண்டும். ஒருபுறம் பார்த்தால் அவர்களுக்கு வேலைச்சுமை அதிகரிக்கும். இதனால் அவர்களால் வாடிக்கையாளர்களுக்கு கனிவுடன் சேவையை செய்ய முடியுமா? என்ற கேள்வியையும் தவிர்க்க முடியவில்லை.
தற்போது வரை வங்கி மாற்றங்கள் குறித்து மத்திய அரசு எந்த அதிகாரப்பூர்வ தகவலையும் தெரிவிக்கவில்லை. ஆனாலும் இந்த அறிவிப்பு இந்த மாத இறுதியிலோ அல்லது இன்னும் சில மாதங்களிலோ வரலாம் என்று சில வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.