ஏடிஎம்மில் பணம் எடுக்கும்போது பணம் சிக்கிக்கொண்டால் என்ன செய்வது?
ஏடிஎம்மில் பணம் எடுக்கும்போது நமக்குத் தேவையான பணத்தை எடுக்கச் செல்கிறோம். சில சமயங்களில் அது நடப்பதில்லை. ஆனால் கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டுவிட்டது. அப்போது என்ன செய்ய வேண்டும் என்பது பலருக்கும் தெரிவதில்லை. இதனைப் பற்றி முழுமையாக பார்க்கலாம்.

ஏடிஎம்மில் பணம் எடுக்கும்போது பல சிக்கல்கள் ஏற்படுகிறது. குறிப்பாக பணம் வரவில்லை. வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டுவிட்டது. இது கவலைக்குரிய விஷயம் தான். ஆனால் நீங்கள் அதற்கு பதற்றப்படத் தேவையில்லை.
ATM withdrawal failed
ஏடிஎம் பணம் எடுத்தல்
இதற்கு சில முக்கியமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இந்தப் பிரச்சனையைப் பலரும் சந்திக்கின்றனர். தொழில்நுட்பக் கோளாறால் இது நிகழலாம்
Cash not dispensed
ஏடிஎம் பரிவர்த்தனை
ஏடிஎம் சீட்டை வைத்திருக்க வேண்டும். அதாவது நீங்கள் பணம் எடுத்த ரசீதைப் பத்திரமாக வைத்திருங்கள். உங்களிடம் உள்ள ரசீதில் பணம் எடுக்கப்பட்டதாகக் காட்டும். பணம் வரவில்லை என்றால், புகார் செய்ய இது உதவும்.
Money debited no cash
ஏடிஎம் பிரச்சனை
பிறகு நீங்கள் உங்கள் வங்கியின் வாடிக்கையாளர் சேவையைத் தொடர்பு கொள்ளுங்கள். பரிவர்த்தனை ஐடி, நேரம், தேதி, ஏடிஎம் இடம், கணக்கு எண் ஆகியவற்றைத் தெரிவிக்கவும். புகார் ஐடியை வைத்திருங்கள்.
Failed ATM transaction
வங்கியில் புகார் செய்யலாம்
5-7 நாட்களில் பணம் திரும்ப வந்துவிடும். இல்லையென்றால் வங்கியில் புகார் செய்யவும். வங்கி 'வாடிக்கையாளர் குறைதீர்ப்பு' பிரிவில் புகார் செய்யலாம். சரியான நேரத்தில் நடவடிக்கை எடுத்தால் பணம் திரும்பக் கிடைக்கும்.