முன் அங்கீகரிக்கப்பட்ட வீட்டுக் கடன் பெறுவது எப்படி? கனவு இல்லத்தைக் கட்ட இந்த வழியை ட்ரை பண்ணுங்க!
முன்-அங்கீகரிக்கப்பட்ட வீட்டுக் கடன் விண்ணப்பதாரரின் வருமானம், கடன் தகுதி மற்றும் நிதி நிலை ஆகியவற்றின் அடிப்படையில் வழங்கப்படும்.
Pre Approved Home Loan
வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் பொதுவாக முன் அங்கீகரிக்கப்பட்ட வீட்டுக் கடனை வழங்குகின்றன. இது அடிப்படையில் ஒரு அடமானத்தைப் பாதுகாப்பதற்கான நிதித் திறன் உங்களிடம் இருக்கிறது என்பதற்கான அங்கீகாரம் ஆகும்.
Home Loan in India
இந்த முன்-அங்கீகரிக்கப்பட்ட வீட்டுக் கடன் பெறவதில் உள்ள நன்மைகள் என்ன? இதன் மூலம் வாங்கப்போகும் சொத்தின் மதிப்பு எந்த வரம்புக்குள் இரக்க வேண்டும் என்பதைத் துல்லியமாக அறிந்துகொள்ள இது உதவியாக இருக்கும்.
Home loan pre approval
முன்-அங்கீகரிக்கப்பட்ட கடன் பெரும்பாலும் வட்டி விகிதங்களுக்கான லாக்-இன் காலத்துடன் வழங்கப்படும். இது வட்டி விகிதம் உயர்வது குறித்த கவலை இல்லாமல் இருக்கும் பாதுகாப்பை வழங்குகிறது. வாங்கப்போகும் சொத்தை கண்டுபிடிக்கும்போது, நிதி விவரம் ஏற்கனவே மதிப்பீடு செய்யப்பட்டிருப்பதால், கடன் செயல்முறை வேகமாக நடக்கும்.
Pre approved home loan
இருப்பினும், எச்சரிக்கைகள் இல்லாமல் இல்லை. முன் அனுமதி பொதுவாக ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு, அதாவது மூன்று முதல் ஆறு மாதங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும். அதே நேரத்தில் இந்த முன் அனுமதி இது இறுதி கடன் ஒப்புதலுக்கு உத்தரவாதம் அளிக்காது. ஆனால், அதற்கான தகுதி உறுதி செய்கிறது.
Home loan pre-approved
வீட்டுக் கடனைப் பெறுவதற்கு சொத்து ஆவணங்கள் அவசியம். இருப்பினும், வாங்கப்போகும் வீட்டைத் தேடும் முயற்சியில் இருப்பவர்களுக்கு இது சிறந்த வாய்ப்பாக இருக்கும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.
Pre approved loan for property
முன்-அங்கீகரிக்கப்பட்ட வீட்டுக் கடன், கொள்கை ரீதியான அனுமதி என்றும் அழைக்கப்படுகிறது, இது விண்ணப்பதாரரின் வருமானம், கடன் தகுதி மற்றும் நிதி நிலை ஆகியவற்றின் அடிப்படையில் தான் வழங்கப்படும். இது சுமார் 3 மாதங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும். அதற்குள் வாங்கப்போகும் வீட்டைத் தேர்வு செய்ய வேண்டும்.
Pre approved loan lock-in period
லாக்-இன் காலத்திற்குள் வீட்டைத் தேர்வு செய்யவில்லை என்றால், விண்ணப்பதாரர் சமீபத்திய வருமான ஆவணங்களை கடன் வழங்கும் நிறுவனத்திடம் சமர்ப்பித்து கடன் விண்ணப்பத்தை மறுமதிப்பீடு செய்ய வேண்டும்.
Home loan
வட்டி விகிதம், மாதாந்திர தவணைகள் மற்றும் தவணைக்காலம் ஆகியவை கடன் வழங்கப்படும் நேரத்தில் மாறலாம். இறுதி கடன் விதிமுறைகள் அதன் அடிப்படையில் தீர்மானிக்கப்படும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.