தங்கம் வாங்குவதை எளிமையாக்கும் மத்திய அரசு! பட்ஜெட்டில் வெளியாகும் சூப்பர் அறிவிப்பு!
Union Budget 2025 Gold Scheme: 2025-26 நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் வரும் பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 8வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இந்நிலையில், தங்க நகைக்கடை வைத்திருப்பவர்கள் மத்திய அரசுக்கு சில கோரிக்கைகளை வைத்துள்ளனர். அதன்படி பொதுமக்கள் தங்கம் வாங்குவதை எளிமையாக்கும் வகையில் மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Buying Gold
இப்போது 22 கேரட் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.7510 ஆக உள்ளது. ஒரு சவரன் தங்கம் ரூ.60,000 ஐத் தாண்டிவிட்டது. தங்கத்திற்கு 3% ஜிஎஸ்டி வரியும் விதிக்கப்படுகிறது. இது தவிர செய்கூலி, சேதாரம் ஆகியவற்றின் மூலமாகவும் கூடுதல் செலவு ஆகிறது.
Union Budget 2025
இச்சூழலில், நடுத்தர வர்க்கத்தினர் தங்கத்தை வாங்குவது கடினமாக இருக்கிறது. இதனால் மிடில் கிளாஸ் குடும்பங்களும் தங்கம் வாங்குவதை எளிமையாக மாற்ற இஎம்ஐ மூலம் தங்க நகை வாங்குவதை அனுமதிக்க வேண்டும் என்று நகை வியாபாரிகள் வேண்டுகோள் வைத்துள்ளனர். தங்க நகைகளை வடிவமைப்பவர்களின் திறன் மேம்பாட்டுக்கு நிதி ஒதுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Nirmala Sitharaman
செபி, ரிசர்வ் வங்கி, வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம், நிதி அமைச்சகம், வர்த்தக அமைச்சகம் உள்ளிட்ட பல அமைப்புகள் தங்க விற்பனையைக் கண்காணிக்கின்றன. இதற்கு மாற்றாக அனைத்தையும் நிர்வகிக்கும் ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும் என நகை வியாபாரிகள் பரிந்துரை செய்கின்றனர். இது தங்கம் வாங்குவது தொடர்பான நடைமுறையை எளிமைப்படுத்தும் எனவும் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
Gold Investment
தங்கத்தைச் சுத்திகரிக்கும் நிறுவனங்கள் வெறும் 0.65% லாபத்துடன் இயங்கி வருகின்றன. தங்க டோர் எனப்படும் தூய்மையற்ற தங்கத்தை இறக்குமதி வரி அதிகமாக இருப்பதே இதற்குக் முக்கியக் காரணமாக உள்ளது. இந்த வரியைக் குறைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Gold Price
நகைத் தொழில் மூலம் ஏராளமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி வருகிறது. இது இன்னும் அதிகரிக்க அதிக வாய்ப்பு உள்ளது. இதனால், அரசு நகைத் தொழில் செய்பவர்களின் திறனை மேம்படுத்த மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும் என்பது நகை வியாபாரிகள் பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.