MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • வெறும் ரூ.9-ல் தொடங்கிய ஸ்நாக்ஸ் இன்று ரூ.100 கோடி சாம்ராஜ்யம்: 3 டெல்லி நண்பர்கள் பெங்களூரில் சாதித்த ருசிகர வரலாறு!

வெறும் ரூ.9-ல் தொடங்கிய ஸ்நாக்ஸ் இன்று ரூ.100 கோடி சாம்ராஜ்யம்: 3 டெல்லி நண்பர்கள் பெங்களூரில் சாதித்த ருசிகர வரலாறு!

தொடக்கத்தில் ஒரு படூரேவை ரூ.9-க்கு வழங்கிய மார்க்கெட்டிங் உத்தி மாபெரும் வெற்றியைத் தந்தது. தற்போது மாதம் 50,000-க்கும் அதிகமான படூரேக்களை விற்பனை செய்து வரும் இந்நிறுவனம், சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான உணவு சாம்ராஜ்யமாக உயர்ந்து அசத்தியுள்ளது.

2 Min read
Author : Meenakshisundaram
Published : Oct 10 2026, 05:08 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
பெங்களூருவில் முளைத்த ரூ.100 கோடி பிசினஸ்!
Image Credit : x

பெங்களூருவில் முளைத்த ரூ.100 கோடி பிசினஸ்!

டெல்லியின் சுவையான ‘சோலே படூரே’ (Chole Bhature) சாப்பிட வேண்டும் என்ற ஒரு சின்ன ஆசை, இன்று பெங்களூருவில் ரூ.100 கோடி மதிப்பிலான பிரம்மாண்ட உணவு சாம்ராஜ்யமாக மாறும் என்று அந்த 3 நண்பர்கள் நினைத்துக்கூடப் பார்த்திருக்க மாட்டார்கள்.

தலைநகர் டெல்லியில் பல வருடங்கள் வாழ்ந்த கரண், சேத்தன், நபஜோதி ஆகிய 3 நண்பர்கள், சில ஆண்டுகளுக்கு முன் கர்நாடக தலைநகரான பெங்களூருவுக்குக் குடிபெயர்ந்தனர். அங்கு சென்ற அவர்களுக்கு டெல்லி தெருவோர உணவுகளின் அசல் சுவை கிடைக்கவில்லையே என்ற ஏக்கம் நாளுக்கு நாள் அதிகரித்தது. எங்கேயாவது தில்லி டேஸ்ட் கிடைக்குமா? என்று ஊர் முழுக்க அலைந்து தேடுவதை விட, நாமே ஏன் அந்த அசல் தில்லி சுவையை பெங்களூருவுக்குக் கொண்டு வரக்கூடாது? என்று யோசித்தார்கள். அந்த சிந்தனைதான் 'ஷியாம்ஜி சோலே படூரே' (Shyamji Chole Bhature) பிறக்கக் காரணமாக அமைந்தது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
டெல்லியில் ஒரு சுவையான தேடல்!
Image Credit : x

டெல்லியில் ஒரு சுவையான தேடல்!

யோசித்ததோடு நின்றுவிடாமல், மூவரும் உடனடியாக டெல்லிக்குப் பறந்தனர். வாரக்கணக்கில் பழைய டெல்லி, சாந்தினி சவுக் என மூலை முடுக்கெல்லாம் அலைந்து திரிந்து, பல கடைகளில் சோலே படூரேக்களை ருசித்துப் பார்த்தனர். அவற்றின் தனித்துவமான மசாலா ரகசியங்களையும் செய்முறைகளையும் நுணுக்கமாகக் கற்றுக்கொண்டனர்.

அந்த அசல் சுவையை அப்படியே கொடுக்கக்கூடிய பாரம்பரிய சமையல் கலைஞர்களைக் கண்டுபிடிப்பது. தீவிர தேடலுக்குப் பிறகு சரியான மாஸ்டர்களைக் கண்டறிந்தனர். ஆனால், வடக்கிலிருந்து தெற்கே நெடுந்தொலைவில் இருக்கும் பெங்களூருவுக்கு வர அவர்கள் தயங்கினர். நண்பர்கள் மூவரும் பொறுமையாக அவர்களின் நம்பிக்கையைப் பெற்று, அன்பாகப் பேசி சம்மதிக்க வைத்து பெங்களூருவுக்கு அழைத்து வந்தனர்.

35
மாஸ்டர் பிளான்: மாபெரும் கூட்டத்தைக் கூட்டிய '₹9' ஆஃபர்!
Image Credit : x

மாஸ்டர் பிளான்: மாபெரும் கூட்டத்தைக் கூட்டிய '₹9' ஆஃபர்!

உணவகம் தொடங்கியதும் வாடிக்கையாளர்களை ஈர்க்க ஒரு பக்காவான பிசினஸ் திட்டத்தைக் கையில் எடுத்தனர். முக்கியமாக 2 தரப்பினரை அவர்கள் டார்கெட் செய்தனர். சொந்த ஊர் உணவை மிஸ் செய்யும் வட இந்திய ஐடி ஊழியர்கள், இதுவரை ஒரிஜினல் தில்லி சோலே படூரேவை ருசித்திராத உள்ளூர் தென் இந்திய மக்கள். இவர்களைக் கவர அவர்கள் செய்த மிகப்பெரிய மாஸ்டர் ஸ்ட்ரோக்!

ஆரம்பத்தில் ஒரு சோலே படூரேவை வெறும் ரூ.9-க்கு அறிமுகப்படுத்தியதுதான். இந்த அட்டகாசமான சலுகை காட்டுத்தீயாகப் பரவ, கடையின் வாசலில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கிச் சாப்பிடத் தொடங்கினர்.

45
மாதம் 50,000 படூரேக்கள்... ஒரு மாபெரும் பிராண்டின் எழுச்சி!
Image Credit : x

மாதம் 50,000 படூரேக்கள்... ஒரு மாபெரும் பிராண்டின் எழுச்சி!

கூட்டம் அலைமோதியதைத் தொடர்ந்து, சாட் வகைகள், சுவையான இனிப்புகள், லஸ்ஸி மற்றும் பிற வட இந்திய உணவு வகைகளையும் மெனுவில் சேர்த்தனர். இன்று ‘ஷியாம்ஜி சோலே படூரே’ நிறுவனம் மாதம் தோறும் 50,000-க்கும் மேற்பட்ட படூரேக்களை விற்பனை செய்து அசத்தி வருகிறது.

55
ரூ.100 கோடி உணவு சாம்ராஜ்யத்தை உருவாக்கிய 3 நண்பர்கள்!
Image Credit : x

ரூ.100 கோடி உணவு சாம்ராஜ்யத்தை உருவாக்கிய 3 நண்பர்கள்!

இதுகுறித்து ‘மேசா ஸ்கூல் ஆஃப் பிசினஸ்’ (Mesa School of Business) தளத்தில் பேசிய இதன் இணை நிறுவனர் சேத்தன் கேடியா;

நாங்கள் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பெங்களூருவில் வசித்துவந்ததால், டெல்லி ஸ்ட்ரீட் ஃபுட்டின் அசல் சுவையை மிகவும் மிஸ் செய்தோம். அப்போது, ஒரே ஒரு மோமோஸை வைத்துக்கொண்டு இந்தியா முழுவதும் ஒரு பிராண்டாக உருவெடுத்த ‘வாவ் மோமோ’ (Wow Momo) நிறுவனம்தான் எங்களுக்குப் பெரிய இன்ஸ்பிரேஷனாக இருந்தது. அவர்களால் முடியும் போது, சோலே படூரேவை வைத்து நம்மால் ஏன் செய்ய முடியாது என்று நினைத்தோம்.

எங்கள் நோக்கம் வட இந்தியர்களை மட்டும் கவருவது அல்ல; பெங்களூருவில் உள்ள அனைத்து மக்களும் தில்லி உணவின் உண்மையான சுவையை அனுபவிக்க வேண்டும் என்பதே. அதனால்தான் நேரத்தை வீணடிக்காமல் பாரம்பரிய மாஸ்டர்களைத் தேடிக் கண்டுபிடித்து அழைத்து வந்தோம்," என்று உற்சாகத்துடன் பகிர்ந்துகொண்டார்.

சரியான சுவை, புதுமையான சந்தை உத்தி, கைவிடாத முயற்சி ஆகியவை இணைந்தால், உணவின் மீதான ஒரு சிறிய ஈர்ப்பு கூட பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள மாபெரும் பிசினஸாக மலரும் என்பதற்கு இந்த நண்பர்களின் கதையே ஆகச்சிறந்த சான்று.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

M
Meenakshisundaram
மீடியா துறையில் 5+ ஆண்டுகள் அனுபவம் கொண்ட மீனாட்சிசுந்தரம், தி இந்தியன் எக்ஸ்பிரஸ், சன் நியூஸ், தந்தி டிவி, பாலிமர் நியூஸ் உள்ளிட்ட முன்னணி செய்தி நிறுவனங்களில் திறம்பட பணியாற்றியவர். பிரேக்கிங் நியூஸ், ஆழமான ஆய்வுக் கட்டுரைகளில் தனித்துவ முத்திரை பதித்த இவர், தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சீனியர் சப்-எடிட்டராகப் பொறுப்பு வகிக்கிறார். அறிவியல், புதிய டெக்னாலஜி, வணிகம், அரசியல் மற்றும் குற்றப் பின்னணி சார்ந்த விவகாரங்களை எளிய நடையில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
வணிக யோசனை
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
FD Rates: நல்ல செய்தி காத்திருக்கு.! இனி 8.25% வட்டி.! யாருக்கு? எந்த பேங்குல கிடைக்கும் தெரியுமா?
Recommended image2
Diwali Bonus Investment: 3 மடங்காக மாறும் தீபாவளி போனஸ்.! உங்களை லட்சாதிபதியாக்கும் டிப்ஸ்.!
Recommended image3
Ration Card: இனி ஊர் மாறினாலும் கவலையில்லை! எங்கு வேணாலும் ரேஷனில் பொருள் வாங்கலாம்! குட் நியூஸ்!
Related Stories
Recommended image1
Diwali Bonus Investment: 3 மடங்காக மாறும் தீபாவளி போனஸ்.! உங்களை லட்சாதிபதியாக்கும் டிப்ஸ்.!
Recommended image2
FD Rates: நல்ல செய்தி காத்திருக்கு.! இனி 8.25% வட்டி.! யாருக்கு? எந்த பேங்குல கிடைக்கும் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved