மத்திய பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு காத்திருக்கும் குட்நியூஸ்: ரூ.5 லட்சமாக அதிரிப்பா?
பட்ஜெட் 2025: விவசாயத்தில் ஏற்படும் பிரச்சினைகளைத் தவிர்க்க மத்திய அரசு நிதி உறுதி திட்டத்தை வகுத்துள்ளது. இத்திட்டம் தற்போது ரூ.3 லட்சமாக இருக்கும் நிலையில், அடுத்த பட்ஜெட்டில் இதனை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
மத்திய பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு காத்திருக்கும் குட்நியூஸ்: ரூ.5 லட்சமாக அதிரிப்பா?
விவசாயிகளுக்கு மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்களைச் செய்து வருகிறது. விவசாயிகள் பொருளாதார ரீதியாக தங்களை நிலைநிறுத்துவதற்கான திட்டங்களும் பல உள்ளன. விவசாயத்தில் ஏற்படும் பிரச்சினைகளைத் தவிர்க்க மத்திய அரசு நிதி உறுதி திட்டத்தை வகுத்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் தற்போது ரூ.3 லட்சம் வழங்கப்பட்டு வருகிறது.
இதனிடையே கிசான் கிரெடிட் கார்டு வரம்பை அதிகரிக்க வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கை உள்ளது. மேலும், KCC வரம்பு உயர்த்தப்பட்டால், விவசாயிகள் விவசாயம் செய்வது எளிதாகும், மேலும் விதைகள், உரங்கள் மற்றும் பிற தேவைகளுக்கு அவர்கள் கந்துவட்டிக்காரர்களை நம்பியிருக்க வேண்டியதில்லை.
கிசான் கிரெடிட் கார்டு பெறுவது எப்படி
கிசான் கிரெடிட் கார்டு திட்டம் சுமார் 26 ஆண்டுகளுக்கு முன்பு 1998 ஆம் ஆண்டு மத்திய அரசால் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், விவசாயம் மற்றும் அது சார்ந்த தொழில்களில் ஈடுபடும் விவசாயிகளுக்கு 9 சதவீத வட்டியில் குறுகிய கால கடன் வழங்கப்படுகிறது.
கிசான் கடன் திட்டம்
இத்திட்டத்தின் சிறப்பு அம்சம் என்னவென்றால், கடனுக்கான வட்டியில் 2 சதவீதத்தை அரசு மானியமாகவும் வழங்குகிறது. அதே நேரத்தில், முழு கடனையும் உரிய நேரத்தில் செலுத்தும் விவசாயிகளுக்கு ஊக்கத் தொகையாக மேலும் 3 சதவீத மானியம் வழங்கப்படும்.
அதாவது இந்த கடன் விவசாயிகளுக்கு 4 சதவீத ஆண்டு வட்டிக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. ஜூன் 30, 2023 நிலவரப்படி, அத்தகைய கடன் வாங்கியவர்களின் எண்ணிக்கை 7.4 கோடிக்கு மேல். 8.9 லட்சம் கோடிக்கு மேல் நிலுவைத் தொகை ஏற்பட்டுள்ளது.
கிசான் கார்டு பெறுவது எப்படி
வரும் பட்ஜெட்டில் கிசான் கிரெடிட் கார்டு வரம்பு ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக அதிகரிக்கப்படலாம். இதற்கு முன் KCC வரம்பில் கடைசியாக மாற்றம் செய்யப்பட்டது 2006-07 இல். இதுபோன்ற சூழ்நிலையில், கிசான் கிரெடிட் கார்டு வரம்பை அரசாங்கம் மீண்டும் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.