BSNL New Plan | அடங்காது போலயே... ரூ.197க்கு 70 நாள் வேலிடிட்டி + எக்கச்சக்க சலுகைகள்!
தொழில் போட்டியாளர்களான ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியாவை ஒரு வைப் மோடில் வைத்துள்ளது BSNL. தொலைதொடர்பு நிறுவனங்களின் ஜாம்பவான்களுக்கு மத்தியில் தானும் இருக்கேன் என்பதை விடாமல் நிரூபித்தும் வருகிறது. இப்போது புதிதாக 197 ரூபாய்க்கு பிஎஸ்என்எல் ஒரு திட்டத்தை அறிவித்துள்ளது. அத்திட்டம் குறித்த விவரங்களை இதில் பார்க்கலாம்.
தொலைதொடர்பு நிறுவனங்கள் ஒருகாலத்தில் லைஃப்டைம் ஃபிரி வேலிடிட்டி வழங்கி வந்தனர். ஆனால் தொலைதொடர்புதுறையின் அதிகப்படியான வளர்ச்சியால் அதிக மொபைல் எண்கள் தேவைப்படவே லைஃப்டைம் வேலிடிட்டியை ரத்து செய்து பணத்திற்கு ஏற்றாறர்போல் வேலிட்டிட்டி வழங்கி வருகிறது. இப்போதெல்லாம் ஒன்றுக்கு இரு சிம் இருக்கும் போது. இன்னொரு சிம்மை ஆக்டிவாக வைத்திருகவே அதிக பணம் செலவிட வேண்டியுள்ளது.
BSNL Rs 197 Plan Details
BSNL ரூ.197 ரீசார்ஜ் பிளான் முழுக்க முழுக்க சிம் ஆக்டிவாக வைத்திருக்கவே கொண்டுவரப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் ரீச்சார்ஜ் செயும் போது 70 நாட்களுக்கு வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. இதன்மூலம் 2 மாதங்களுக்கும் மேல் 70 நாட்கள்+ சிம் கார்டை ஆக்டிவாக வைத்திருக்கலாம்.
BSNL Rs 197 Plan Details
BSNL ரூ.197 ரீசார்ஜ் பிளான் முழுக்க முழுக்க சிம் ஆக்டிவாக வைத்திருக்கவே கொண்டுவரப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் ரீச்சார்ஜ் செயும் போது 70 நாட்களுக்கு வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. இதன்மூலம் 2 மாதங்களுக்கும் மேல் 70 நாட்கள்+ சிம் கார்டை ஆக்டிவாக வைத்திருக்கலாம்.
மிச்சம் மீத பயனர்களையும் தன்பக்கம் ஈர்க்கும் BSNL! வெறும் ரூ.91 ரீச்சார்ஜின் 60 நாள் வேலிடிட்டி!
இந்த விலையில் ஜியோ(Jio), ஏர்டெல் (airtel) மற்றும் வோடபோன் ஐடியா(Vodafone Idea) நிறுவனங்களில் வாய்ப்பே இல்லை எனலாம். மேலும், பிஎஸ்என்எல் ரூ.197 ரீச்சார்ஜ் திட்டத்தி்ல் தினசரி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் SMS சலுகையையும் கிடைக்கிறது. தினமும் 2 ஜிபி டேட்டா சலுகை வழங்கப்படுகிறது. கிடைக்கிறது. மேலும் நாளொன்றுக்கு 100 SMS அனுப்பிக்கொள்ளலாம். மேற் கூறப்பட்ட வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகை ஆகிய அனைத்தும் முதல் 15 நாட்களுக்கு மட்டுமே அனுக முடியும். அதன் பிறகான 55 நாட்கள் சிம் ஆக்டிவ் வேலிடிட்டியுடன் தொடர்ந்து இயங்கும். உங்கள் இன்கமிங் கால்கள் வழக்கபோல் வந்துகொண்டிருக்கும்.
BSNL SIM : வீட்டிலிருந்தே பிஎஸ்என்எல் 4ஜி, 5ஜி சிம்களை ஆர்டர் செய்யலாம்.. எப்படி தெரியுமா?