BitChat: இணையம் இல்லாமல் பேசும் புதிய செயலி! ப்ளூ டூத்தால் இணைக்கும் ‘BitChat’!
ட்விட்டரை உருவாக்கிய ஜாக் டோர்ஸி, இணையம் இல்லாமல் ப்ளூடூத் மூலம் செய்தி அனுப்பும் BitChat செயலியை அறிமுகப்படுத்தியுள்ளார். சங்கிலித் தொடர்பு தொழில்நுட்பம் மூலம், பல சாதனங்கள் வழியாக செய்திகள் பயனரைச் சென்றடையும்.

இணையம் இல்லை புதிய உலகம்
ட்விட்டர் இணையதளத்தை தொடங்கி உலக அளவில் சமூக ஊடகப் புரட்சியை ஏற்படுத்திய ஜாக் டோர்ஸி, இப்போது தகவல் தொடர்பு உலகில் இன்னொரு புதுமையை அறிமுகம் செய்துள்ளார். அவர் உருவாக்கியுள்ள புதிய செயலியின் பெயர் BitChat. சாதாரண இணைய சேவை இல்லாமல், ப்ளூடூத் தொழில்நுட்பத்தின் மூலம் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு மெசேஜ்களை அனுப்பும் வசதி இந்த செயலியில் கொண்டுவரப்பட்டுள்ளது.
BitChat செயலியின் முக்கியக் கொள்கை
BitChat செயலியின் முக்கியக் கொள்கை – சங்கிலித் தொடர்பு (Mesh Networking). இதன் மூலம், சாதாரணமாக நாம் ப்ளூடூத் மூலம் ஒரே இரண்டு சாதனங்களையே இணைப்போம். ஆனால் இங்கு பல சாதனங்களை நேரடி சங்கிலியாக (chain) கட்டமைத்து, மெசேஜ்கள் பல்வேறு சாதனங்களின் வழியாக இறுதிக் கிடைக்கும் பயனரிடம் சென்று சேரும். உதாரணமாக, உங்கள் மொபைலில் இருந்து பக்கத்து நபரின் மொபைல் வழியாக மற்றொரு நபருக்கு மெசேஜ் செல்லும். இதனால், தொலைதூரம் இருந்தாலும் ப்ளூடூத் எல்லையை மீறி மெசேஜ் அனுப்ப முடியும்.
இந்த தொழில்நுட்பம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் இடங்கள்
- இயற்கை பேரிடர்கள் ஏற்பட்ட பகுதிகள்
- இணைய சேவை இல்லாத கிராமப்புறங்கள்
- மிகக் குறைந்த கட்டணத்தில் தகவல் பரிமாற்றம் தேவைப்படும் சூழல்கள்
BitChat செயலியின் கூடுதல் சிறப்பம்சங்கள்
- இணையம் தேவையில்லை – ப்ளூடூத் மட்டுமே போதும்
- குறைந்த பேட்டரி வாடிப்பு
- தரவு பாதுகாப்பு மற்றும் குறியாக்கம் (Encryption) வசதி
- ஒரே நேரத்தில் பல பயனர்களுக்கு தகவல் அனுப்பும் திறன்
- சமூக ஊடக சந்திப்புகளை உருவாக்கும் வசதி
சுதந்திரம் கிடைச்சாச்சு!
ஜாக் டோர்ஸி இதனை அறிமுகப்படுத்திய போது, “இணைய சேவைகள் அனைத்துக்கும் அடிப்படையில் தனியார் நிறுவனங்களின் கட்டுப்பாட்டை உடைத்து, மக்களுக்கு நேரடி தகவல் பரிமாற்ற சுதந்திரம் வழங்கவே இதை உருவாக்கியுள்ளேன்” என தெரிவித்துள்ளார். தற்போது இந்த செயலியை Android மற்றும் iOS ஸ்டோர்களில் பதிவிறக்கம் செய்ய முடியும். ஆரம்ப கட்டத்தில் இலவசமாக தரப்பட்டாலும், எதிர்காலத்தில் மேம்பட்ட தொழில்நுட்ப அம்சங்களுக்கு சின்ன பிளான் கட்டணம் வசூலிக்க வாய்ப்பு உள்ளது.இத்தகைய தொழில்நுட்பம் மூலம், தகவல் தொடர்பு முறைகள் முழுமையாக மாறக்கூடிய தருணத்தில் நம்மை இட்டுச் செல்லும் BitChat, சமூக மற்றும் அவசர பயன்பாட்டிற்கும் முக்கிய கருவியாக அமையப்போகிறது. இனி இணையம் இல்லாவிட்டாலும், தகவல்கள் தடைப்படாமல் சுதந்திரமாக பகிரலாம்!