MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • PAN Card Rules : ரூ.50,000 டெபாசிட் குறித்து பெரிய அப்டேட்.. பான் கார்டு ரூல்ஸ் மாறுது மக்களே

PAN Card Rules : ரூ.50,000 டெபாசிட் குறித்து பெரிய அப்டேட்.. பான் கார்டு ரூல்ஸ் மாறுது மக்களே

PAN Card Rules : ஜூன் மாதம் முதல் பான் கார்டு தொடர்பான நிதி விதிகளில் முக்கிய மாற்றங்கள் வரவுள்ளன. வங்கி பரிவர்த்தனைகள் மற்றும் சொத்து ஒப்பந்தங்களுக்கான வரம்புகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

1 Min read
Author : Raghupati R
Published : May 30 2026, 09:08 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
பான் கார்டு வைத்திருப்பவர்கள்
Image Credit : Asianet News

பான் கார்டு வைத்திருப்பவர்கள்

ஜூன் மாதம் தொடங்கும் நிலையில், பான் கார்டு தொடர்பான சில முக்கிய நிதி விதிகள் கவனம் செலுத்தப்பட்டுள்ளன. வங்கி பரிவர்த்தனை முதல் சொத்து ஒப்பந்தங்கள் வரை பல துறைகளை இந்த மாற்றங்கள், பான் கார்டு வைத்திருப்பவர்களுக்கு புதிய அனுபவத்தை ஏற்படுத்தக்கூடும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
ரூ.50,000-க்கு மேல் பணம்
Image Credit : Asianet News

ரூ.50,000-க்கு மேல் பணம்

இதுவரை, ஒரு நாளில் ரூ.50,000-க்கு மேல் பணம் வங்கி கணக்கில் செலுத்தும்போது பான் விவரம் அவசியமாக இருந்தது. ஆனால் புதிய மாற்றங்களின்படி, இந்த நடைமுறையில் தளர்வு கிடைக்கலாம் என கூறப்படுகிறது. இனிமேல், ஒரு நிதியாண்டில் அனைத்து வங்கி கணக்குகளிலும் சேர்த்து ரூ.10 லட்சத்தை மீறினால் டெபாசிட் அல்லது பணம் எடுப்பவர்களுக்கு மட்டுமே பான் விவரம் கட்டாயமாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Articles

Related image1
இந்த லிமிட்டுக்கு மேல் பணத்தை பேங்கில் போட.. பான் கட்டாயம்.. 17 ரூல்ஸ் மாறிடுச்சு
Related image2
ITR : பான் மட்டும் போதாது.. ஐடிஆர்க்கு கட்டாயம் தேவைப்படும் 5 முக்கிய ஆவணங்கள்.. முழு லிஸ்ட்
35
பெரிய அளவிலான பண பரிவர்த்தனை
Image Credit : Asianet News

பெரிய அளவிலான பண பரிவர்த்தனை

அதே நேரத்தில், சில உயர் மதிப்பு பரிவர்த்தனைகளில் கண்காணிப்பு கடுமையாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சொத்து வாங்குதல் மற்றும் விற்பனை தொடர்பான பான் வரம்பு ரூ.10 லட்சத்தில் ரூ.20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், அதிக மதிப்புள்ள ரியல் எஸ்டேட் ஒப்பந்தங்கள் மற்றும் பெரிய அளவிலான பண பரிவர்த்தனைகளில் பான் அவசியம் தொடரும்.

45
புதிய படிவம்
Image Credit : Google

புதிய படிவம்

இந்த மாற்றங்களுடன், பழைய படிவம்-60க்கு பதிலாக புதிய படிவம்-97 அறிமுகப்படுத்தப்படுவது கூடுதல் கவனத்தை பெற்றுள்ளது. பான் இல்லாதவர்கள் குறிப்பிட்ட பரிவர்த்தனைகளில் இந்த புதிய படிவத்தை பயன்படுத்த வேண்டிய நிலை உருவாகலாம் என அறியப்படுகிறது. இதன் மூலம் நிதி பரிவர்த்தனைகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் கண்காணிப்பை மேம்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

55
வருமான வரித்துறை
Image Credit : Youtube

வருமான வரித்துறை

வருமான வரித்துறையால் வழங்கப்படும் பான் கார்டு இன்று வங்கி கணக்கு திறப்பது முதல் வரி செலுத்துவது வரை பல முக்கிய பணிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. சில சிறிய பரிவர்த்தனைகளில் விதிகள் தளர்த்தப்பட்டாலும், பெரிய நிதி நடவடிக்கைகளில் கண்காணிப்பு மேலும் வலுப்பெறுவது, புதிய மாற்றங்களின் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பான் அட்டை
வணிகம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
குப்பையில் கொட்டும் தங்கம்.! கழிவிலிருந்து கோடிகள்.! லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளை அள்ளித்தரப்போகும் புதிய புரட்சி.!
Recommended image2
RBI: இனி 50, 100, 200, 500 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது? வரப்போகும் புதிய நோட்டுகள்.! ரிசர்வ் வங்கியின் அதிரடி முடிவு.!
Recommended image3
Tomato and Onion Price: பெட்டி பெட்டியாக தக்காளி.! மூட்டை மூட்டையாக வெங்காயம்.! போட்டி போட்டு அள்ளி செல்லும் இல்லத்தரசிகள்! விலை நிலவரம்?
Related Stories
Recommended image1
இந்த லிமிட்டுக்கு மேல் பணத்தை பேங்கில் போட.. பான் கட்டாயம்.. 17 ரூல்ஸ் மாறிடுச்சு
Recommended image2
ITR : பான் மட்டும் போதாது.. ஐடிஆர்க்கு கட்டாயம் தேவைப்படும் 5 முக்கிய ஆவணங்கள்.. முழு லிஸ்ட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved