பெஸ்டு மாணவர் கிரெடிட் கார்டு: கேஷ்பேக், ரிவார்டு பாயிண்ட்ஸ் வழங்கும் கார்டு எது?
உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் படிக்கும் மாணவர்களுக்கு ஏற்ற சர்வதேச மற்றும் உள்நாட்டு மாணவர் கிரெடிட் கார்டுகள் பல உள்ளன. அவற்றில் சிறந்த சில கார்டுகளைப் பற்றித் தெரிந்துகொள்ளலாம்.
Best Student Credit Cards in India
மாணவர் கிரெடிட் கார்டுகள் கல்லூரி மாணவர்களின் நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டவை. மாணவர்களை ஈர்ப்பதற்காக ரிவார்டு பாயிண்ட், கேஷ்பேக் சுலுகைகள் மற்றும் வட்டி இல்லாத காலம் போன்ற நன்மைகள் இந்த கார்டுகளில் உள்ளன. பேசிக் அல்லது செக்யூர் கிரெடிட் கார்டுகளாகக் கிடைக்கும். இந்த கார்டுகள் மாணவர்களிடம் பணத்தைப் பொறுப்புடன் கையாளும் பழக்கத்தை ஏற்படுத்தும்.
Student Credit Card with Cashback
பொதுவாக மாணவர்களுக்கு வருமானம் இருக்காது என்பதால் வங்கிகள் அல்லது கிரெடிட் கார்டு நிறுவனங்கள் மாணவர் கிரெடிட் கார்டுகள் வழங்குவதற்கு வருமானத் தகுதியைப் பார்ப்பதில்லை. ஆனால், சில பொதுவான நிபந்தனைகள் உள்ளன. மாணவர் கிரெடிட் கார்டு பெறுவதற்கான தகுதிகள் மற்றும் தேவைகள் வங்கிக்கு வங்கி மாறுபடும்.
Student Credit Card with reward points
மாணவர்கள் தங்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்றவாறு கிரெடிட் கார்டுகளை தேர்வு செய்ய வேண்டும். அவர்கள் தங்களுக்கு இருக்கும் அளவான பட்ஜெட்டுக்கு ஏற்ப கார்டுகளைப் பெற வேண்டும். குறிப்பாக, கார்டு பெறுவதற்கான கட்டணமோ வருடாந்திரக் கட்டணமோ செலுத்தத் தேவையில்லாத கார்டைத் தேர்வு செய்வது நல்லது. மறைமுகக் கட்டணங்கள் இல்லை என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ள வேண்டும். கேஷ்பேக், ரிவார்டு பாயிண்ட்ஸ் போன்ற சலுகைகள் கிடைக்கும் கார்டுகளையும் பார்த்துத் தேர்வு செய்யலாம்.
Student Credit Card without annul fee
டிஸ்கவர் இட் ஸ்டூடண்ட் கேஷ் பேக் (Discover it Student Cash Back): இது சிறந்த சர்வதேச கிரெடிட் கார்டு. ஒவ்வொரு காலாண்டிலும் 5% (1,500 டாலர் வரை) கேஷ் பேக் சலுகைகளைப் பெறலாம். வாங்கும் பொருட்களுக்கு 1% கேஷ்பேக் கிடைக்கும். வருடாந்திரக் கட்டணம் எதுவும் இல்லை. இதற்கு விண்ணப்பிக்க சமூக பாதுகாப்பு எண் (SSN) அல்லது தனிநபர் வரி செலுத்துவோர் அடையாள எண் (ITIN) தேவை.
Student Credit Cards in India
கேபிடல் ஒன் ஜர்னி ஸ்டூடண்ட் ரிவாட்ஸ் (Capital One Journey Student Rewards), சேஸ் ஃப்ரீடம் ஸ்டூடண்ட் கிரெட்ட் கார்டு (Chase Freedom Student Credit Card) மற்றும் டிசர்வ் EDU மாஸ்டர் கார்டு (Deserve EDU Mastercard) ஆகியவை மாணவர்களுக்கான சிறந்த தேர்வுகளாக இருக்கும். இவை அனைத்தும் வருடாந்திரக் கட்டணம் வசூலிப்பது இல்லை. மேலும் 1% கேஷ்பேக் மற்றும் ரிவார்டு பாயிண்ட் சலுகைகளும் கிடைக்கும்.
Student Credit Card benefits
சில உள்நாட்டு கிரெடிட் கார்டுகளும் மாணவர்களுக்குப் பொருத்தமாக இருக்கும். ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வாவ் கிரெடிட் கார்டு (IDFC First Wow Credit Card) வைத்திருக்கும் மாணவர்கள் வருடாந்திர கட்டணம் செலுத்தத் தேவையில்லை. பரிவர்த்தனைகளுக்கு 4x ரிவார்டு பாயிண்ட்ஸ் கிடைக்கும். இதற்கு வருமானச் சான்று அல்லது கிரெடிட் கார்டு வரலாறு தேவையில்லை. உங்கள் வங்கிக் கணக்கில் குறைந்தபட்சம் ரூ.10,000 பேலன்ஸ் இருந்தால் போதும்.
How to get Student Credit Card
வெளிநாட்டில் படிக்கும் இந்திய மாணவர்களுக்கு, ஹெச்டிஎஃப்சி வங்கியின் ISIC Student ForexPlus Chip Card ஒரு கவர்ச்சிகரமான தேர்வாக இருக்கும். இதன் மூலம் உங்களுக்கு உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச மாணவர் அடையாள அட்டை (ISIC) கிடைக்கும். வருடாந்திரக் கட்டணம் இல்லாத இந்த கார்டில் ஷாப்பிங் சலுகைகளும் உண்டு.
Student Credit Card Responsibility
சரியான கிரெடிட் கார்டைத் தேர்ந்தெடுப்பது மாணவர்களின் நிதி நிர்வாகத்தை எளிதாக்கும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் அட்டையில் இருந்து அதிகப் பலன்களைப் பெற முயற்சி செய்ய வேண்டும். கிரெடிட் கார்டுகளை பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.