MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • Bank Holidays Alert: செப்.26 முதல் 30 வரை 5 நாட்கள் வங்கி சேவை பாதிக்குமா? மக்களே உஷார்.!

Bank Holidays Alert: செப்.26 முதல் 30 வரை 5 நாட்கள் வங்கி சேவை பாதிக்குமா? மக்களே உஷார்.!

Bank Holidays Alert: செப்டம்பர் 26 முதல் 30 வரை வங்கி கிளைகளின் வழக்கமான சேவைகள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. வார இறுதி விடுமுறையுடன் 3 நாள் வேலைநிறுத்தமும் வருவதால், வங்கிக்கு நேரில் சென்று செய்ய வேண்டிய பணிகளை முன்கூட்டியே முடிப்பது நல்லது.

3 Min read
Author : Raghupati R
Published : Sep 21 2026, 11:55 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
செப்டம்பர் 26 30 வங்கி வேலைநிறுத்தம்
Image Credit : Getty

செப்டம்பர் 26-30 வங்கி வேலைநிறுத்தம்

செப்டம்பர் மாதத்தின் இறுதி நாட்களில் வங்கி வாடிக்கையாளர்கள் சில முக்கிய விஷயங்களை முன்கூட்டியே கவனிக்க வேண்டும். செப்டம்பர் 26 முதல் 30 வரை தொடர்ந்து 5 நாட்களுக்கு வங்கி கிளைகளில் வழக்கமான பணிகள் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. செப்டம்பர் 26 சனிக்கிழமை என்பதாலும், செப்டம்பர் 27 ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் அந்த இரண்டு நாட்களும் வார இறுதி விடுமுறை நாட்களாகும். இதைத் தொடர்ந்து செப்டம்பர் 28, 29 மற்றும் 30 ஆகிய மூன்று நாட்களுக்கு நாடு முழுவதும் வேலைநிறுத்தம் நடத்த வங்கி ஊழியர் சங்கங்கள் அறிவித்துள்ளன. இதனால் கிளைக்கு நேரில் சென்று செய்ய வேண்டிய சில வங்கி பணிகள் தாமதமாகலாம். முக்கியமாக, ஆவணங்கள் சமர்ப்பித்தல், காசோலை தொடர்பான சில பணிகள், வங்கியின் நேரடி உதவி சேவைகள் போன்றவற்றை செய்ய வேண்டியவர்கள் முன்கூட்டியே திட்டமிடுவது நல்லது. பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட சில வங்கிகளும் வாடிக்கையாளர்களை தங்களுடைய முக்கியமான கிளைகளை முன்கூட்டியே முடித்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
எஸ்பிஐ வங்கி வேலைநிறுத்த எச்சரிக்கை
Image Credit : Asianet News

எஸ்பிஐ வங்கி வேலைநிறுத்த எச்சரிக்கை

இந்த வேலைநிறுத்தத்துக்கு பின்னால் வங்கி ஊழியர் சங்கங்கள் முன்வைக்கும் பல்வேறு கோரிக்கைகள் உள்ளன. அதில் 5 நாட்கள் மட்டும் வங்கிகள் செயல்படும் முறையை அமல்படுத்த வேண்டும். 2024-ம் ஆண்டு ஊதிய ஒப்பந்தம் மற்றும் தொடர்புடைய உடன்பாட்டில் வாரத்தில் 5 நாட்கள் வங்கி செயல்பாடு தொடர்பாக ஒப்புதல் கிடைத்துள்ளதாக ஊழியர் சங்கங்கள் கூறி வருகின்றன. இதுதவிர ஊழியர்களின் செயல்திறன் அடிப்படையிலான ஊக்கத்தொகை, புதிய பணியாளர்கள் நியமனம், ஓய்வூதியம், புதிய ஓய்வூதிய திட்டம், பணிக்கொடை உள்ளிட்ட பல்வேறு நிலுவை கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. செப்டம்பர் 11, 2026 அன்று நாடு முழுவதும் ஒரு நாள் வேலைநிறுத்தம் நடைபெற்ற நிலையில், தற்போது செப்டம்பர் 28 முதல் 30 வரை மீண்டும் மூன்று நாள் வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. தங்களுடைய கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்காவிட்டால் அக்டோபர் 26 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோம் என்றும் ஊழியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.

LPG Aadhaar Link: அக்டோபர் 1-க்குள் இதை செய்யலைனா கேஸ் மானியம் கட்!

35
பாரத ஸ்டேட் வங்கி அறிவிப்பு
Image Credit : getty

பாரத ஸ்டேட் வங்கி அறிவிப்பு

இதற்கிடையில் பாரத ஸ்டேட் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு வாடிக்கையாளர்களுக்கு முக்கியமானதாக உள்ளது. வேலைநிறுத்தம் தொடங்குவதற்கு முன்பே கிளையில் நேரடியாக செய்ய வேண்டிய முக்கியமான வங்கி பணிகளை முடித்துக்கொள்ளுமாறு வாடிக்கையாளர்களிடம் வங்கி கேட்டுக்கொண்டுள்ளது. குறிப்பாக ஆவணங்கள் சமர்ப்பித்தல், சில காசோலை பணிகள், ஆவண சரிபார்ப்பு, வங்கி ஊழியர்களின் நேரடி உதவி போன்ற பணிகள் பாதிக்கப்பட்டால் தாமதமாகலாம். அதே நேரத்தில் தானியங்கி பணம் வழங்கும் இயந்திரம், தானியங்கி பணம் செலுத்தும் மற்றும் பெறும் இயந்திரம், வாடிக்கையாளர் சேவை மையங்கள், இணைய வங்கி, யோனோ, கைப்பேசி வங்கி சேவை மற்றும் யுபிஐ போன்ற வசதிகளை பயன்படுத்தலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே 5 நாட்களும் அனைத்து வங்கி சேவைகளும் முழுமையாக முடங்கிவிடும் என்பது அர்த்தமில்லை. குறிப்பாக கிளையில் நேரடியாக செய்ய வேண்டிய பணிகளுக்கே அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

45
வங்கி சேவை பாதிப்பு
Image Credit : getty

வங்கி சேவை பாதிப்பு

வாடிக்கையாளர்கள் இப்போது செய்ய வேண்டியது என்ன என்பதும் முக்கியம். காசோலை சமர்ப்பித்தல், ஆவணங்கள் கொடுத்தல், வாடிக்கையாளர்களின் விவரங்களைப் புதுப்பித்தல், கடன் தொடர்பான கிளைப் பணிகள், பாதுகாப்புப் பெட்டகத்தைப் பயன்படுத்துதல் அல்லது வங்கி ஊழியரின் நேரடி உதவி வேறு ஏதேனும் வேலை இருந்தால், செப்டம்பர் 26க்கு முன்பே அந்த கிளையைத் தொடர்புகொண்டு பணியை முடிப்பது நல்லது. அவசரமாக பணம் எடுக்க வேண்டியவர்கள் தானியங்கி பணம் வழங்கும் இயந்திரங்களை பயன்படுத்தலாம். பணம் அனுப்புதல் மற்றும் வழக்கமான கட்டணங்களுக்கு யுபிஐ, இணைய வங்கி அல்லது கைப்பேசி வங்கி வசதிகளை பயன்படுத்தலாம். இருப்பினும் அனைத்து பணிகளும் இணையவழியில் கிடைக்கும் என்று முன்கூட்டியே கருதாமல், உங்கள் வங்கி வழங்கும் குறிப்பிட்ட சேவை பற்றிய தகவலை சரிபார்ப்பது பாதுகாப்பானது. குறிப்பாக முக்கியமான பணிகள் இருந்தால் கடைசி நேரம் வரை காத்திருக்காமல் முன்கூட்டியே முடித்துக்கொள்வது நல்லது.

55
செப்டம்பர் 2026 வங்கி விடுமுறைகள்
Image Credit : getty

செப்டம்பர் 2026 வங்கி விடுமுறைகள்

எனவே செப்டம்பர் 26 முதல் 30 வரை “5 நாட்கள் வங்கி விடுமுறை” என்று கூறுவதை விட, 2 நாட்கள் வார இறுதி விடுமுறையுடன் அடுத்த 3 நாட்கள் வேலைநிறுத்தம் நடைபெறுவதால் வங்கி கிளைகளின் வழக்கமான செயல்பாடுகள் தொடர்ந்து பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது என்பதே விளக்கம். இதனால் அனைத்து வங்கி சேவைகளும் 5 நாட்களுக்கு முழுமையாக நிறுத்தப்படும் என்று கூற முடியாது. தற்போதைய அறிவிப்பின்படி வேலைநிறுத்தம் செப்டம்பர் 28, 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில். மேலும் கோரிக்கைகள் தொடர்பாக உடன்பாடு ஏற்படாவிட்டால் அக்டோபர் 26 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் நடத்தப்படும் என்று ஊழியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன. இதற்கிடையில் அரசு, வங்கி நிர்வாகங்கள் மற்றும் ஊழியர் சங்கங்களுக்கு இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் புதிய முடிவு எடுக்கப்பட்டால் நிலைமை மாறக்கூடும். எனவே வங்கி கிளையில் நேரடியாக செய்ய வேண்டிய முக்கிய பணிகள் இருந்தால், அவற்றை முன்கூட்டியே முடித்துக்கொள்வது வாடிக்கையாளர்களுக்கு சிரமத்தை தவிர்க்க உதவும்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
வங்கி விடுமுறை
விடுமுறை
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Digital Gold: டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்வது எப்படி? தெரிந்துகொள்ள வேண்டிய ஆபத்துகள்!
Recommended image2
8th Pay Commission: அடிப்படைச் சம்பளம் ரூ.72,000 ஆக உயருமா? 4.0 'பிட்மென்ட் ஃபாக்டர்' விளக்கம்.!
Recommended image3
D-Mart Savings Guide: டி-மார்ட்டில் எப்போது ஷாப்பிங் செய்தால் அதிக சலுகைகள் கிடைக்கும்?
Related Stories
Recommended image1
House Foundation Cost: 1,200 சதுர அடி வீடு கட்டப் போறீங்களா? அஸ்திவாரம் போட எவ்வளவு செலவாகும் தெரியுமா?
Recommended image2
Petrol Pump: பெட்ரோல் போடப்போறீங்களா? பணத்தை எடுத்துட்டு போங்க.. இல்லைனா அவ்ளோதான் - முழு விபரம் உள்ளே
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved