MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • 1 மாதம் ரூ.1 சலுகைனு நினைச்சு ஏமாறாதீங்க... மறைந்திருக்கும் யுபிஐ ஆட்டோபே ஆபத்துகள்!

1 மாதம் ரூ.1 சலுகைனு நினைச்சு ஏமாறாதீங்க... மறைந்திருக்கும் யுபிஐ ஆட்டோபே ஆபத்துகள்!

ரூ.1, ரூ.2 ஃப்ரீ ட்ரையல் சலுகைகளால் உங்க வங்கி கணக்கில் பணம் குறைகிறதா? UPI ஆட்டோபே மறைந்திருக்கும் ஆபத்துகள் மற்றும் பாதுகாக்கும் வழிகளை பற்றி பார்போம்.

4 Min read
Author : Kiruthickraj D
Published : Oct 03 2026, 02:36 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
யுபிஐ பயனர்களுக்குப் பரவும் அதிர்ச்சி எச்சரிக்கை!
Image Credit : Gemini

யுபிஐ பயனர்களுக்குப் பரவும் அதிர்ச்சி எச்சரிக்கை!

கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe) போன்ற யுபிஐ (UPI) ஆப்கள் வழியாக நாம் பல வகையான கட்டணங்களைச் செலுத்தி வருகிறோம். அதில், 1 மாதத்திற்கு ரூ.1 மட்டுமே அல்லது 3 மாதங்களுக்கு ரூ.2 மட்டுமே" என்று கூறிக்கொள்ளும் 'ஃப்ரீ ட்ரையல்' (Free Trial) விளம்பரச் சலுகைகளின் கீழ் சிறிய தொகையைச் செலுத்தி இதுவரை உள்ளே சென்றுள்ளீர்களா? ஆம் எனில், இந்த எச்சரிக்கை முழுக்க முழுக்க உங்களுக்கானதுதான். ரூ.1 அல்லது ரூ.2 என்ற சிறிய தொகை நமக்கு அற்பமாகக் தோன்றலாம். ஆனால், பல பயனர்களுக்கு இது அவர்கள் விரும்பாத அல்லது தொடரத் திட்டமிடாத மாதாந்திர கட்டணப் பிடித்தங்களின் அமைதியாகத் தொடக்கமாக அமைந்துவிடுகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
கண்ணைக் கவரும் சலுகைகளும் மறைந்திருக்கும் ஆபத்தும்
Image Credit : Gemini

கண்ணைக் கவரும் சலுகைகளும் மறைந்திருக்கும் ஆபத்தும்

ஓடிடி (OTT) தளம், மியூசிக் ஸ்ட்ரீமிங் சேவை, ஏ.ஐ டூல் அல்லது கிளவுட் ஸ்டோரேஜ் சந்தா என எதுவாக இருந்தாலும், பல டிஜிட்டல் சேவைகள் பதிவு செய்யும்போதே பயனர்களை 'யுபிஐ ஆட்டோபே' (UPI AutoPay) அனுமதியை வழங்குமாறு கோருகின்றன. இந்த அனுமதி வழங்கப்பட்டதும், அந்த அனுமதியை உடனடியாக ரத்து செய்யாவிட்டால், ஃப்ரீ ட்ரையல் காலம் முடிந்த பிறகு, அந்தந்த சேவை வழங்குநரால் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி சந்தா கட்டணம் தானாகவே எடுக்கப்பட்டுவிடும். இத்தகைய கட்டணப் பிடித்தங்கள் எப்போதுமே நேரடியான மோசடியாக இருப்பதில்லை. பெரும்பாலான சந்தர்ப்பங்களில், பயனர்கள் முன்பே தொடர் கட்டண முறைக்கு ஒப்புதல் அளித்திருப்பதால், தொழில்நுட்ப ரீதியாக அவை அங்கீகரிக்கப்பட்டவையாகவே கருதப்படுகின்றன.

நிபுணர்களின் கூற்றுப்படி, இதில் உள்ள சிக்கல் என்னவென்றால், பல நுகர்வோர்கள் தாங்கள் எதற்கு ஒப்புதல் அளிக்கிறோம் என்பதை கவனிக்கத் தவறிவிடுகிறார்கள் அல்லது தாங்கள் கொடுத்த ஆட்டோபே அனுமதியையே முற்றிலுமாக மறந்துவிடுகிறார்கள். பேஇன்ஸ்டாகார்ட்டின் முழுநேர இயக்குநரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான சைகிருஷ்ணா முசுனுருவின் கூற்றுப்படி, "இது கட்டண முறையில் உள்ள குறைபாடு அல்ல, மாறாக இது விழிப்புணர்வு சார்ந்த ஒரு பிரச்சினையாகும். ரூ.200 அல்லது ரூ.300-க்குள் செய்யப்படும் சிறிய அளவிலான பிடித்தங்கள் ஆனது பெரும்பாலும் வாடிக்கையாளர்களுக்குத் தெரியாமலேயே அவர்களது மாதாந்திர செலவில் இரண்டறக் கலந்துவிடுகிறது.

குறிப்பாக, நுகர்வோர் பொழுதுபோக்கு, ப்ரொடெக்டிவிட்டி சாஃப்ட்வேர் மற்றும் பல்வேறு டிஜிட்டல் சேவைகளுக்கான சந்தாக்களை ஒரே நேரத்தில் ஆக்டிவாக வைத்திருக்கும் போது, எந்தச் சேவைக்காகப் பணம் கழிக்கப்பட்டது என்பதைத் தொடர்ந்து நிர்வகிக்காமல் போகக்கூடும்.

35
பயனர்கள் தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது?
Image Credit : Gemini

பயனர்கள் தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது?

தொடர் டிஜிட்டல் பேமண்ட்களை மற்ற வழக்கமான நிதிச் செலவுகளைப் போலவே கவனமாகக் கையாளுமாறு நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். அதற்காகப் பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றுவது அவசியமாகும். ஒவ்வொரு மாதமும் குறைந்தது ஒரு முறையாவது நீங்கள் பயன்படுத்தும் ஆப்பில் உள்ள யுபிஐ மேன்டேட்களை (ஆட்டோபேக்களை) சரிபார்த்து மதிப்பாய்வு செய்யவும். அனைத்து ஆட்டோபேகளுக்கும் தவறாமல் எஸ்எம்எஸ் மற்றும் ஆப் நோட்டிஃபிகேஷன்களை இயக்கி வைக்கவும். சம்பந்தப்பட்ட சந்தா அடிப்படையிலான ஆப்பை உங்களது மொபைலில் வெறுமனே நீக்குவதற்கு பதிலாக, அதன் அமைப்புகளில் சென்று இனி தேவைப்படாத சந்தாக்களை முழுமையாக ரத்து செய்ய மறக்க வேண்டாம்.

இதுபோன்ற கண்ணுக்குத் தெரியாத தொடர் கட்டங்களால் வீட்டுச் செலவுகள் பாதிக்கப்படுவதைத் தடுக்க, பொழுதுபோக்கு மற்றும் டிஜிட்டல் சந்தாக்களுக்கென ஒரு தனி வங்கிக் கணக்கைப் (Bank Account) பயன்படுத்துவதைக் கருத்தில் கொள்ளலாம். மேலும், கவனிக்கப்படாமல் போகக்கூடிய சிறிய தொடர் பற்றுக்கள் உட்பட உங்களது மாதாந்திர வங்கி அறிக்கைகளை (Bank Statements) எப்போதும் கவனமாக மதிப்பாய்வு செய்யவும். பெரும்பாலான சந்தா கட்டணங்கள் 99 ரூபாயில் தொடங்குகின்றன. ஓடிடி, பிரீமியம் மெம்பர்ஷிப், சமூக வலைத்தளச் சந்தா (Social Media Subscription), இ-காமர்ஸ் போன்ற சேவைகளுக்காக ரூ.199, ரூ.299, ரூ.399 போன்ற சந்தா கட்டணங்களை ஆட்டோ-பே வசதியின் கீழ் செலுத்தி கொண்டிருக்கும் யுபிஐ பயனர்கள் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

ஆட்டோ-பே ஒப்புதல் கிடைத்தவுடன், யுபிஐ கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள பயனரின் வங்கிக் கணக்கிலிருந்து தானாகவே நிதியை கழிக்கும் இந்த செயல்முறை, ஒவ்வொரு முறையும் பணம் செலுத்தும் தொல்லையை எளிதாக்கினாலும், பயனர் தான் ஆக்டிவாக வைத்துள்ள சந்தாக்களைப் பற்றி முழுமையாக மறந்துவிடும் சூழ்நிலைகளுக்கு வழிவகுக்கிறது. பயனர்கள் இதை உணர்வதற்கு முன்பே, சிறிய அளவிலான சந்தாத் தொகைகள் மாதக்கணக்கில் அவர்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து கழிந்து கொண்டிருக்கும். பெரிய தொகையாக இருந்தால் மாதாந்திர செலவில் இடிக்கிறதே என்று உடனடியாகக் கண்டுபிடிக்க வாய்ப்புள்ளது; ஆனால், இது போன்ற சிறிய தொகையாக இருந்தால் மற்ற சிறிய அளவிலான செலவுகளோடு காணாமல் போய்விடும்.

45
ஆட்டோ-டெபிட் / இ-மேண்டேட் என்றால் என்ன?
Image Credit : Gemini

ஆட்டோ-டெபிட் / இ-மேண்டேட் என்றால் என்ன?

ஆட்டோ-டெபிட் அல்லது இ-மேண்டேட் என்பது ஒரு வாடிக்கையாளர் தனது வங்கி அல்லது நிதி நிறுவனத்திற்கு வழங்கும் அறிவுறுத்தலின் டிஜிட்டல் வடிவமாகும். இந்த அறிவுறுத்தலானது, கடன் இஎம்ஐ-கள், பயன்பாட்டுக் கட்டணங்கள் (மின்சாரக் கட்டணம் போன்றவைகள்) மற்றும் பல்வேறு சந்தாக்கள் போன்ற தொடர் பேமண்ட்களை (ஒவ்வொரு மாதமும் செலுத்தப்படும் பேமண்ட்கள்) உங்களது வங்கிக் கணக்கு, கிரெடிட் கார்டு அல்லது யுபிஐ-யிலிருந்து நேரடியாக, தானாகவே பிடித்தம் செய்ய நிறுவனங்களை அனுமதிக்கிறது.

இது ஒவ்வொரு முறையும் கைமுறையாகப் பணம் செலுத்தும் தேவையை நீக்குவதோடு, தாமதமாகக் கட்டணம் செலுத்துவதையும் அதனால் ஏற்படும் கூடுதல் கட்டணங்களையும் குறைக்கிறது. ஒரு இ-மேண்டேட்டை அமைக்க, வாடிக்கையாளர் ஒரு ஒப்புதல் படிவத்தை நிரப்ப வேண்டும்; மேலும் நெட் பேங்கிங் சான்றுகள், கிரெடிட்/டெபிட் கார்டு விவரங்கள் போன்றவைகளைப் பயன்படுத்தித் தனது அடையாளத்தைச் சரிபார்க்க வேண்டும். மேற்கூறிய சரிபார்ப்பு முடிந்தவுடன், வங்கி ஆனது தொடர் பேமண்ட் அறிவுறுத்தலை அமைத்து, அது உடனடியாகச் செயல்பாட்டுக்கு வருகிறது.

55
யுபிஐ மேன்டேட்களை அடையாளம் கண்டு ரத்து செய்வது எப்படி?
Image Credit : Gemini

யுபிஐ மேன்டேட்களை அடையாளம் கண்டு ரத்து செய்வது எப்படி?

பெரும்பாலான யுபிஐ ஆப்களில் 'மேன்டேட்ஸ்' (Mandates) என்கிற ஒரு பகுதி உள்ளது. அங்கு ஆக்டிவாக உள்ள மேன்டேட்களின் முழுப் பட்டியலையும் பார்க்க முடியும். கூடுதலாக, வணிகரின் பெயர், பணம் செலுத்திய தொகை மற்றும் தேதி ஆகிய விவரங்களையும் சரிபார்க்கலாம். அவைகளை மதிப்பாய்வு செய்து, தற்போது நீங்கள் பயன்படுத்தாத தேவையற்ற சந்தாக்கள் ஏதேனும் ஆக்டிவாக உள்ளதா என்பதைக் கண்டறியலாம். பயனர்கள் தங்கள் மேன்டேட்களை ரத்து செய்ய, அந்தந்த யுபிஐ ஆப்களில் உள்ள 'மேன்டேட்ஸ்' பகுதிக்குச் செல்ல வேண்டும். அதில் குறிப்பிட்ட மேன்டேட்டைத் தேர்ந்தெடுத்து 'கேன்சல்' (Cancel) பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.

இந்தச் செயலைச் செய்த பிறகு அந்த மேன்டேட் வெற்றிகரமாக ரத்து செய்யப்படும். சில சந்தாக்களை நேரடியாகச் சேவை வழங்குநரின் தளத்திலும் ரத்து செய்ய வேண்டியிருக்கலாம். ஆட்டோ-பே மேன்டேட்களை ரத்து செய்வது, ஏற்கனவே செய்யப்பட்ட பரிவர்த்தனைகளைத் திரும்பப் பெறாது; மாறாக, எதிர்காலத்தில் மேலும் எந்தப் பரிவர்த்தனைகளும் நடைபெறுவதை மட்டுமே தடுக்கும். தேவையற்ற பிடித்தங்களைத் தடுக்க, எந்தவொரு கட்டணமும் கழிக்கப்படுவதற்கு முன்பாகவே பயனர் மேன்டேட்டை ரத்து செய்ய வேண்டும்.காப்பீட்டுக் கொள்கை பிரீமியங்கள் அல்லது கடன் இஎம்ஐ-கள் (Loan EMIs) போன்ற மிக முக்கியமான பேமண்ட்கள் தற்செயலாக நிறுத்தப்படவில்லை என்பதைப் பயனர் முன்கூட்டியே உறுதி செய்வது அவசியமாகும்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

KD
Kiruthickraj D
வணிகம்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Gold: தங்கத்தை அடகு வைக்க போறீங்களா? ஏலத்துக்கு போவதை தவிர்க்க 'இந்த' 5 விஷயங்களை செய்யுங்க!
Recommended image2
8th Pay Commission: 2027-ல் புதிய சம்பளம் வந்தால் நிலுவைத்தொகை எவ்வளவு? முழு கணக்கீடு இதோ
Recommended image3
Crop Loan: விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! பயிர்க் கடன் வசூல் முற்றிலும் நிறுத்தம் – தமிழ்நாடு அரசு அதிரடி!
Related Stories
Recommended image1
Crop Loan: விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! பயிர்க் கடன் வசூல் முற்றிலும் நிறுத்தம் – தமிழ்நாடு அரசு அதிரடி!
Recommended image2
Govt Scheme: ரூ.10 லட்சம் வரை கடன் + 50% மானியம்! ஏற்கனவே தொழில் செய்பவர்களுக்கு ஜாக்பாட்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved