Gold Rate Today : இப்போதைக்கு தங்கம் வாங்காதீங்க.. தாறுமாறாக அதிகரித்த தங்க விலை
கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலையை காணலாம்.
தங்கத்தின் விலை தொடர்ந்து உச்சத்தை தொட்டு வருகிறது. அமெரிக்க டாலர்கள் மதிப்பு காரணமாக தங்கத்தின் விலை அதிகரிக்கிறது என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்.
இருப்பினும் பொதுமக்கள் தங்கம் வாங்க தொடர்ந்து ஆர்வம் காட்டுகின்றனர். வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவிற்கு தங்கம் சவரனுக்கு 45 ஆயிரத்தை கடந்து விற்பனை ஆனது.
நேற்றைய நிலவரப்படி, தங்கம் கிராம் ஒன்றுக்கு 20 குறைந்து 5,620க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோல சவரனுக்கு ரூபாய் 160 குறைந்து 44,960க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இன்றைய நிலவரப்படி (ஏப்ரல் 29) சென்னையில் தங்கம் கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.5,630க்கு விற்பனையாகிறது. தங்கம் சவரனுக்கு 80 உயர்ந்து ரூ.45,040க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை இன்று அதிகரித்துள்ளது. கிராம் ஒன்றுக்கு 40 காசுகள் உயர்ந்து ரூ.80.40க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 80,400க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க..பொன்னியின் செல்வன் 2 முதல் நாள் வசூல் மட்டும் இத்தனை கோடியா.! அடேங்கப்பா.!!