MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • இனி பென்ஷன் பணம் தாமதம் இல்லாமல் கிடைக்கும்! கவலையே படாதீங்க!

இனி பென்ஷன் பணம் தாமதம் இல்லாமல் கிடைக்கும்! கவலையே படாதீங்க!

​​ஓய்வூதியம் தொடர்பான புகார்களை எளிதில் தீர்க்கும் வகையில், ஓய்வூதியத்திற்கான புதிய ஒழுங்குமுறை மன்றம் ஒன்றை உருவாக்க மத்திய அரசு தயாராகி வருகிறது.

1 Min read
Author : SG Balan
| Updated : Mar 22 2025, 04:05 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
New Pension Plan

New Pension Plan

ஓய்வு பெற்ற பிறகு, ஒருவர் சேமிப்பு அல்லது ஓய்வூதியத்தை நம்பி வாழ வேண்டியிருக்கும். ஓய்வூதியம் பெறுவதில் மக்கள் எந்தப் பிரச்சினையையும் சந்திக்காமல் இருப்பதை உறுதிசெய்ய மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இத்தகைய சூழ்நிலையில், ஓய்வூதியம் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்க, அரசாங்கம் ஒரு மன்றத்தை உருவாக்க முடிவு செய்துள்ளது.

25
EPFO and NPS

EPFO and NPS

ஓய்வூதிய ஒழுங்குமுறை கட்டமைப்பை உருவாக்குவதற்கான தயாரிப்புப் பணிகளில் அரசாங்கம் ஈடுபட்டு வருகிறது. இதில் புகார்களைத் தீர்ப்பதற்கான குறை தீர்க்கும் வழிமுறைகளையும் ஆராய்ந்து வருகிறது. இது குறித்து அரசு வட்டாரத் தகவல்களை மேற்கோள் காட்டி தி எகனாமிக் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

35
Pension scheme

Pension scheme

ஓய்வூதியம் தொடர்பான புகார்களை விரைவாக தீர்க்க அனைவருக்கும் பொதுவான ஒழுங்குமுறை தரநிலை தேவை என்று மத்திய அரசு கருதுகிறது என அதிகாரி ஒருவர் கூறுகிறார். இந்த முயற்சியில், பல்வேறு நிறுவனங்களின் மேற்பார்வையின் கீழ் இயங்கும் பல்வேறு ஓய்வூதியத் திட்டங்களை ஒருங்கிணைப்பது பற்றியும் மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளது.

45
Pension fund

Pension fund

மற்றொரு அதிகாரி கூறுகையில், நமது நாட்டில் ஓய்வூதிய பாதுகாப்பு குறைவாக உள்ளது. அதற்காக புதிய திட்டத்தை உருவாக்க வேண்டிய அவசியம் உள்ளது. தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS) தன்னார்வ அடிப்படையிலான திட்டம். EPFO ​​இன் கீழ் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் (EPS) சம்பள வரம்பு மாதத்திற்கு ரூ.15,000 ஆக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் ஒரு பெரும் பகுதி ஊழியர்கள் ஓய்வூதியப் பலன்களை இழந்து வருகின்றனர் என்றார்.

55
Pension planning

Pension planning

மத்திய அரசு உருவாக்க இருக்கும் மன்றம், தற்போதுள்ள ஓய்வூதியத் திட்டங்களை ஒரு ஒருங்கிணைந்த அமைப்பின் கீழ் கொண்டுவந்து, அவற்றின் பாதுகாப்பை அதிகரிப்பதோடு, அவற்றின் செயல்படுத்தலை எளிதாக்கும் என எதிர்பார்ப்படுகிறது. அனைவருக்கும் ஓய்வூதியத் திட்டத்தைக் கொண்டுவருவதற்கான சாத்தியக்கூறுகளையும் அரசாங்கம் பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் இதுபற்றிய முன்ன்றிவிப்பை வெளியிட்டிருந்தார்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
ஓய்வூதியம்
சம்பளம்
EPFO (ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு)

Latest Videos
Recommended Stories
Recommended image1
1 ரூபாய் முதலீடு இல்லாமல் தொழில் தொடங்கலாம்!.. டாப் 5 பிசினஸ் ஐடியாஸ்!..
Recommended image2
ரூ.5,000 வரை.. போன்பே வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. நோட் பண்ணுங்க
Recommended image3
ரயிலில் மூத்த குடிமக்களுக்கு மீண்டும் பாதிக் கட்டணம்?.. அறிவிப்பு வெளியாகிறதா? லேட்டஸ்ட் அப்டேட்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved