MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • டிரைவர் இல்லாமல் ஓடும் டெல்லி மெட்ரோவின் புதிய சாதனை: ஒரே நாளில் 16 லட்சம் பேர் பயணம்!

டிரைவர் இல்லாமல் ஓடும் டெல்லி மெட்ரோவின் புதிய சாதனை: ஒரே நாளில் 16 லட்சம் பேர் பயணம்!

டெல்லி மெட்ரோவின் ஓட்டுநரில்லா ரயில்களில் ஒரே நாளில் 16 லட்சம் பேர் பயணித்து புதிய சாதனை. இந்தியாவின் பிற நகரங்களுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படுமா? முழு விவரம்.

3 Min read
Author : Kiruthickraj D
Published : Nov 17 2026, 04:29 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
டிரைவர் இல்லாமல் ஓடும் மெட்ரோ ரயில் சாதனை
Image Credit : X

டிரைவர் இல்லாமல் ஓடும் மெட்ரோ ரயில் சாதனை

2020ஆம் ஆண்டில் டெல்லி மெட்ரோ தனது முதல் டிரைவரில்லா ரயில்களை அறிமுகப்படுத்தியது. 6 ஆண்டுகளுக்குப் பிறகு, ஒருநாளில் 1.6 மில்லியன் மக்கள் இத்தொடருந்துகளில் பயணம் செய்துள்ளனர். இது அருணாச்சலப் பிரதேசத்தின் மொத்த மக்கள் தொகையை விடவும், தினசரி 8 மில்லியன் (80 லட்சம்) பயணிகளைக் கொண்ட டெல்லி மெட்ரோவின் மொத்த பயணிகளில் 5-ல் ஒரு பங்காக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

2020ஆம் ஆண்டில் டெல்லி மெட்ரோவின் மஜந்தா வழித்தடத்தில் முதல் டிரைவரில்லா ரயில்கள் இயக்கத் தொடங்கப்பட்டன. கிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்குப் பிறகு, நாட்டின் மிகப்பெரிய மெட்ரோ நெட்வொர்க்கில் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், இந்த டிரைவரில்லா ரயில்கள் அதன் ஒரு தவிர்க்க முடியாத அங்கமாக மாறியுள்ளன.

தற்போது டெல்லி மெட்ரோ தனது மஜந்தா மற்றும் பிங்க் வழித்தடங்களில் 120 கி.மீ தூரத்திற்கு 100 ஆளில்லா ரயில் இயக்க (UTO) ரயில்களை இயக்கி வருகிறது. இது மொத்த நெட்வொர்க்கில் 29% ஆகும். நடந்து வரும் திட்டங்கள் நிறைவடைந்தவுடன் இந்த டிரைவரில்லா நெட்வொர்க் 198 கி.மீ ஆக விரிவுபடுத்தப்படும் போது, இந்த பங்கு மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
டிசம்பர் 2020-ல் அறிமுகமான டிரைவரில்லா ரயில்கள்
Image Credit : X

டிசம்பர் 2020-ல் அறிமுகமான டிரைவரில்லா ரயில்கள்

பிரதமர் நரேந்திர மோடி, ஜனகபுரி மேற்கு முதல் பொட்டானிகல் கார்டன் வரை இயங்கும் டெல்லி மெட்ரோவின் மஜந்தா வழித்தடத்தில் இந்தியாவின் முதல் டிரைவரில்லா ரயில் சேவைகளை டிச.28, 2020 அன்று தொடங்கி வைத்தார். இந்த டிரைவரில்லா ரயில்கள் முழுமையான தானியங்கி அமைப்பு மூலம் செயல்படுகின்றன, இது மனிதர்களால் ஏற்படும் பிழைகளின் சாத்தியக்கூறுகளை முழுமையாக நீக்குகிறது. மஜந்தா வழித்தடத்தில் டிரைவரில்லா சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, டெல்லி மெட்ரோவின் பிங்க் வழித்தடத்திலும் இந்த ரயில்கள் நடைமுறைக்கு வந்தன.

34
1.6 மில்லியன் மக்கள் பயணம்
Image Credit : X

1.6 மில்லியன் மக்கள் பயணம்

தீபாவளியை முன்னிட்டு பொதுமக்கள் பெருமளவில் பயணம் செய்ததை அடுத்து, டெல்லி மெட்ரோவின் ஓட்டுநரில்லா ரயில்களில் இந்த ஆண்டு நவ.2ஆம் தேதி ஒரே நாளில் மட்டும் 1.6 மில்லியன் பயணிகள் வியக்கத்தக்க வகையில் பயணம் செய்துள்ளனர். இதன் மூலம் நெட்வொர்க்கின் தினசரி 8 மில்லியன் பயணிகளில் ஒவ்வொரு 5 பேரில் ஒருவர் ஓட்டுநரில்லா ரயிலைப் பயன்படுத்தியுள்ளனர்! 'ET' பகுப்பாய்வின்படி, 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த எண்ணிக்கை அருணாச்சலப் பிரதேசத்தின் முழு மக்கள் தொகையை விட அதிகமாகும்.

44
இந்தியா முழுவதும் டிரைவரில்லா மெட்ரோ ரயில்கள் வருமா?
Image Credit : X

இந்தியா முழுவதும் டிரைவரில்லா மெட்ரோ ரயில்கள் வருமா?

மற்ற மெட்ரோ ரயில் திட்டங்களும் இந்த மாதிரியைப் பின்பற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டதாக டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனின் (DMRC) நிர்வாக இயக்குநர் விகாஸ் குமார் நம்புகிறார். ஓட்டுநரில்லா ரயில் இயக்கங்கள், ரயில் இயக்கத்திற்கு கூடுதல் நெகிழ்வுத்தன்மையை வழங்குகின்றன; இதன் மூலம் மனிதர்களின் தலையீடும், மனிதப் பிழைகளும் குறைக்கப்படுகின்றன. மேலும், சேவைகளுக்காக ரயில்களின் பயன்பாட்டுத் திறனை மேம்படுத்தவும் இது உதவுகிறது என்று விகாஸ் குமார் 'ET' இடம் தெரிவித்தார்.

ரயில்கள் சேவைக்குச் செல்வதற்கு முன்பு மேற்கொள்ளப்படும் முழுமையான சுய-சோதனைகள் காரணமாக, டெல்லியின் டிரைவரில்லா ரயில்களின் நம்பகத்தன்மை பலமடங்கு மேம்பட்டுள்ளது என்றும், இது மனித பிழைகளை நீக்க உதவுகிறது என்றும் அவர் கூறினார். இருப்பினும், அரசாகத்தில் உள்ள சில விமர்சகர்கள் உட்பட பலர் இந்தத் தொழில்நுட்பத்தைக் கேள்விக் குள்ளாக்குகின்றனர். டிரைவரில்லா இயக்கங்களுக்கு தேவையான ஆரம்ப மூலதனச் செலவு அதிகம் என்பதையும், ரயில் டிரைவர்கள் வேலையிழக்கும் அபாயம் உள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

2018 இல் வந்தே பாரத் ரயில் முன்மாதிரியை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்த முன்னாள் ரயில்வே பொது மேலாளர் நாட்டின் சூழலுக்குப் பொருந்துமா என்பதை மதிப்பிடாமல் இந்தியா டிரைவரில்லா ரயில் தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்ள வேண்டாம் என்று எச்சரித்துள்ளார்.வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் மனிதவளச் செலவுகள் மிகவும் குறைவு என்பதால், சர்வதேசப் போக்கைப் பின்பற்றுவதை விட நமது சொந்த ஆய்வின் அடிப்படையிலேயே முடிவுகளை எடுக்க வேண்டும் என்று அவர் நிதி நாளிதழிடம் தெரிவித்தார்.

ஓட்டுநரில்லா இயக்கங்கள் பல செயல்பாட்டு நன்மைகளை வழங்குகின்றன என்பதை சுதான்ஷு மணி ஒப்புக்கொண்டார். தானியங்கி முறை மனிதப் பிழையை நீக்குகிறது, துல்லியமான வருகை மற்றும் புறப்பாடு நேரத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது, மேலும் வழக்கமாக டிரைவரின் அறை இருக்கும் இடத்தில் கூடுதல் பயணியர் இடவசதியை விடுவிக்கிறது என்று அவர் கூறினார்.

இருப்பினும், டிரைவரில்லா மற்றும் வழக்கமான மெட்ரோ அமைப்புகளின் செலவுகள் மற்றும் நன்மைகள் பற்றிய உறுதியான ஒப்பீடு எளிதில் கிடைக்கவில்லை. தானியங்கி முறையால் ரயில் டிரைவர்களின் தேவை இல்லாமல் போகலாம் என்ற கவலைக்குப் பதிலளித்த DMRC நிர்வாக இயக்குநர் விகாஸ் குமார், 2020 இல் டிரைவரில்லா சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, டிரைவர் பணியை நிறுத்திய எந்தவொரு டிரைவரும் தங்கள் வேலையை இழக்கவில்லை என்று கூறினார். மாறாக, அவர்கள் நிறுவனத்திற்குள்ளேயே மற்ற பொறுப்புகளில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

DMRC தற்போது சுமார் 3,000 ரயில் ஓட்டுநர்களைப் பணியமர்த்தியுள்ளது. இந்தியா முழுவதும் டெல்லி என்.சி.ஆர், மும்பை, பெங்களூரு, கொல்கத்தா, ஹைதராபாத், சென்னை, லக்னோ, புனே மற்றும் அகமதாபாத் உள்ளிட்ட 26 நகரங்களில் மெட்ரோ ரயில் சேவைகள் இயங்கி வருகின்றன. அவர்கள் ஸ்டேஷன் மேனேஜ்மென்ட், கூட்ட நெரிசல் கட்டுப்பாடு போன்ற பணிகளுக்காக மூலோபாய ரீதியாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்று அவர் மேலும் கூறினார்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

KD
Kiruthickraj D
வணிகம்
 
2nd TEST • PAK vs SL 2026
Live
PAKPAK
(31.0 ov)102/1
SLSL
98
Day 1 - Session 3
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
AUSAUS
Wed, 18 Nov, 2026
ENGENG
09:00 am
Match yet to begin.
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
220
ENGENG
355/6
ENG beat AUS by 135 runs
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
187
INDIND
209
IND beat NZ by 22 runs
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
132/3
ENGENG
131
AUS won by 7 wickets
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
333
INDIND
89
NZ beat IND by 244 runs
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
abandoned
NZNZ
-
INDIND
-
Match abandoned
Schedule ›
1st TEST • PAK vs SL 2026
Result
PAKPAK
434 & 284/8
SLSL
446
Match drawn
Schedule ›
15th T20 • WBBLT20
Result
SS-WSS-W
162/2
ST-WST-W
158
Sydney Sixers Women Won by 9 runs (D/L) method
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
PF Money for Higher Returns: பிஎஃப் மூலம் கிடைத்த பணம்... எதில் முதலீடு செய்தால் அதிக லாபம்? பாதுகாப்பான 7 வழிகள் இதோ!
Recommended image2
Aadhaar No Longer Mandatory: ஆதார் இல்லையா? கவலை வேண்டாம்! இனி இந்த 6 ஆவணங்கள் இருந்தாலே போதும்!
Recommended image3
8th Pay Commission: ரூ.25,000 முதல் ரூ.75,000 வரை பென்ஷன் வாங்குவோருக்கு எவ்வளவு உயர்வு? புதிய கணக்கீடு
Related Stories
Recommended image1
Post Office vs Bank FD: வங்கியா? தபால் நிலையமா? 5 ஆண்டு முதலீட்டுக்கு அதிக வட்டி தரும் திட்டம் எது?
Recommended image2
வெறும் 5 பிராண்ட் விளம்பரங்கள், ரூ.3 லட்சம் வருமானம்: கன்டென்ட் கிரியேட்டர் சயந்திகா பௌமிக் பகிர்ந்த சுவாரஸ்ய ரகசியம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved