MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • Online Shopping : ஜனவரி 1 முதல் மாறப்போகும் 6 முக்கிய விஷயங்கள்.. இனி ஆன்லைனில் பொருள் வாங்கும்போது இதையெல்லாம் கவனிங்க!

Online Shopping : ஜனவரி 1 முதல் மாறப்போகும் 6 முக்கிய விஷயங்கள்.. இனி ஆன்லைனில் பொருள் வாங்கும்போது இதையெல்லாம் கவனிங்க!

Online Shopping : ஜனவரி 1, 2027 முதல் ஆன்லைன் ஷாப்பிங்கில் புதிய விதிகள் அமலுக்கு வருகின்றன. தள்ளுபடி விலை, தேடல் முடிவுகள், டார்க் பேட்டர்ன்ஸ், மறைமுகக் கட்டணங்கள் உள்ளிட்ட 6 முக்கிய மாற்றங்கள் என்ன?

3 Min read
Author : Arun Mozhi Varman
Published : Oct 03 2026, 08:00 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
ஜனவரி 1 முதல் ஆன்லைன் ஷாப்பிங்கில் இந்த மாற்றங்கள்!
Image Credit : Chatgpt

ஜனவரி 1 முதல் ஆன்லைன் ஷாப்பிங்கில் இந்த மாற்றங்கள்!

ஆன்லைனில் பொருட்கள் வாங்கும்போது காட்டப்படும் தள்ளுபடி உண்மையானதுதானா? நாம் தேடும் பொருளைத்தான் முதலில் காட்டுகிறார்களா? கூடுதல் கட்டணங்கள் பற்றி முன்கூட்டியே தெரியுமா? இதுபோன்ற விஷயங்களில் நுகர்வோருக்கு கூடுதல் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்தும் வகையில், மின் வணிக விதிகளில் 2026-ம் ஆண்டு திருத்தங்களை மத்திய நுகர்வோர் விவகாரத் துறை கொண்டு வந்துள்ளது.

இந்த புதிய விதிகள் 2027 ஜனவரி 1 முதல் அமலுக்கு வர உள்ளன. இதன்படி ஆன்லைன் ஷாப்பிங்கில் விலை, தேடல் முடிவுகள், விளம்பரங்கள், கூடுதல் கட்டணங்கள், பொருள் மற்றும் விற்பனையாளர் தகவல்கள், புகார்கள் என பல விஷயங்களில் மாற்றங்கள் வர உள்ளன. அதில் ஆன்லைனில் பொருட்கள் வாங்கும் நமக்கு நேரடியாகப் பயன்படும் 6 முக்கிய மாற்றங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.

இதையும் படிங்க : Banana Waste : வீணாகும் வாழைத்தண்டில் இருந்து ரூ.2.5 கோடி பிசினஸ்! 3 நண்பர்களின் வேற லெவல் முயற்சி!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
60% தள்ளுபடி பார்த்ததும் வாங்காதீங்க.. பழைய விலையும் தெரியும்!
Image Credit : pinterest

60% தள்ளுபடி பார்த்ததும் வாங்காதீங்க.. பழைய விலையும் தெரியும்!

ஆன்லைன் தளங்களில் ஒரு பொருளுக்கு 50%, 60% என பெரிய அளவில் தள்ளுபடி காட்டுவதை நாம் அடிக்கடி பார்க்கிறோம். ஆனால் அந்தப் பொருள் முன்பு எந்த விலையில் விற்கப்பட்டது என்பது எப்போதும் தெளிவாக இருப்பதில்லை. புதிய விதிகளின்படி, ஒரு பொருளுக்கு தள்ளுபடி காட்டும்போது, தற்போதைய விலையுடன் அதன் முந்தைய விலையும் காட்ட வேண்டும்.

அந்த முந்தைய விலை என்பது தள்ளுபடி அறிவிப்புக்கு முந்தைய 30 நாட்களில் அந்தப் பொருள் விற்கப்பட்ட குறைந்தபட்ச விலையாக இருக்க வேண்டும். இதனால் ஒரு பொருளுக்கு காட்டப்படும் தள்ளுபடி உண்மையில் எவ்வளவு என்பதை நுகர்வோர் எளிதாக தெரிந்துகொள்ள முடியும்.

இதையும் படிங்க : Lemon : பால்கனி தொட்டியில் எலுமிச்சை வளர்க்க முடியுமா? இந்த முறையில் வளர்த்தால் வீட்டிலேயே காய்க்கும்!

36
நீங்கள் தேடிய பொருளை மறைத்து வேற பொருளை முன்னிலைப்படுத்த முடியாது!
Image Credit : Asianet News

நீங்கள் தேடிய பொருளை மறைத்து வேற பொருளை முன்னிலைப்படுத்த முடியாது!

ஆன்லைன் ஷாப்பிங் தளத்தில் ஒரு பொருளைத் தேடும்போது, முதலில் வரும் முடிவுகளையே பலரும் பார்க்கிறோம். இனி நுகர்வோர் தேடும் பொருளுக்குப் பொருத்தமில்லாத வகையில் தேடல் முடிவுகளை மாற்றி அமைப்பதற்கும், தவறாக வழிநடத்துவதற்கும் கட்டுப்பாடுகள் இருக்கும்.

அதேபோல், பணம் செலுத்தி முன்னிலைப்படுத்தப்படும் விளம்பரப் பொருட்கள் அல்லது ஸ்பான்சர் செய்யப்பட்ட பட்டியல்கள் சாதாரண தேடல் முடிவுகளைப் போல தெரியாமல் தெளிவாகக் குறிப்பிடப்பட வேண்டும். இதனால் ஒரு பொருள் தேடலுக்கு பொருத்தமாக இருப்பதால் முன்னால் வருகிறதா அல்லது விளம்பரமாக முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதா என்பதை நுகர்வோர் புரிந்துகொள்ள முடியும்.

இதையும் படிங்க : Flipkart : ரூ.10,000 முதல் ரூ.50,000 வரை தள்ளுபடி! இந்த பொருட்களுக்கு பண்டிகை காலத்தில் செம ஆஃபர்!

46
இப்பவே வாங்குங்க.. இன்னும் கொஞ்சம்தான் இருக்கு.. இந்த தந்திரங்களுக்கு செக்!
Image Credit : pinterest

இப்பவே வாங்குங்க.. இன்னும் கொஞ்சம்தான் இருக்கு.. இந்த தந்திரங்களுக்கு செக்!

ஆன்லைனில் பொருட்கள் வாங்கும்போது அவசரப்படுத்தும் வகையில் சில அறிவிப்புகளைப் பார்த்திருப்போம். இன்னும் சில பொருட்கள் மட்டுமே உள்ளன, சலுகை முடியப்போகிறது போன்ற தகவல்கள் மூலம் உடனடியாக வாங்கத் தூண்டுவது, தேவையில்லாத பொருளை கார்ட்டில் சேர்ப்பது, சந்தாவை ரத்து செய்வதை சிக்கலாக்குவது போன்றவை டார்க் பேட்டர்ன்ஸ் எனப்படும்.

2026-ம் ஆண்டு திருத்தப்பட்ட மின் வணிக விதிகளின்படி, ஆன்லைன் தளங்கள் டார்க் பேட்டர்ன்ஸ் தொடர்பான விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். மேலும், நிறுவனங்கள் தங்களுடைய நடைமுறைகளை ஆண்டுதோறும் சுய தணிக்கை செய்து, விதிகளைப் பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும்.

இதன் மூலம் நுகர்வோரை குழப்பி அல்லது அழுத்தம் கொடுத்து ஒரு குறிப்பிட்ட முடிவை எடுக்க வைக்கும் ஆன்லைன் வடிவமைப்புகளுக்கு கட்டுப்பாடு கொண்டுவரப்படுகிறது.

இதையும் படிங்க : Rice : அரிசி டப்பாவில் பூச்சி வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? இந்த தவறை மட்டும் செய்யாதீங்க!

56
மறைமுகக் கட்டணங்கள் முதல் விற்பனையாளர் தகவல் வரை.. இனி தெளிவாக இருக்கணும்!
Image Credit : Social Media

மறைமுகக் கட்டணங்கள் முதல் விற்பனையாளர் தகவல் வரை.. இனி தெளிவாக இருக்கணும்!

ஆன்லைனில் ஒரு பொருளை வாங்குவதற்கு முன்பு அந்தப் பொருள் மற்றும் விற்பனையாளர் தொடர்பான முக்கிய தகவல்களை நுகர்வோர் தெரிந்துகொள்ள வேண்டும். இதில் பொருளைத் திரும்ப வழங்கும் விதிமுறைகள், பணத்தைத் திருப்பித் தரும் நிபந்தனைகள், உத்தரவாதம், விநியோகம் மற்றும் பணம் செலுத்தும் விவரங்கள் போன்ற தகவல்கள் அடங்கும்.

மின் வணிக தளங்கள் தங்களுடைய சேவைக்கு தொடர்பில்லாத கட்டணங்களை ஒரே பரிவர்த்தனையில் சேர்த்து வசூலிப்பதற்கும் கட்டுப்பாடுகள் உள்ளன. இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களைப் பொறுத்தவரை, இறக்குமதியாளர் பெயர் மற்றும் விவரங்கள், பொருள் எந்த நாட்டில் தயாரிக்கப்பட்டது போன்ற தகவல்களும் தெரிவிக்கப்பட வேண்டும். இதனால் வாங்குவதற்கு முன்பே பொருளைப் பற்றிய முக்கிய விவரங்களை நுகர்வோர் தெரிந்துகொள்ள முடியும்.

இதையும் படிங்க : Gupta Vijaya Yoga : முருகனின் அருளால் உருவாகும் குப்த வெற்றி யோகம்! எதிரிகளைப் பந்தாடப் போகும் 4 ராசிகள்!

66
புகார் கொடுத்தால் அதன் நகலும் கிடைக்கும்.. உங்கள் தகவலுக்கும் கட்டுப்பாடு!
Image Credit : our own

புகார் கொடுத்தால் அதன் நகலும் கிடைக்கும்.. உங்கள் தகவலுக்கும் கட்டுப்பாடு!

ஆன்லைனில் வாங்கிய பொருளில் பிரச்சினை ஏற்பட்டால், நுகர்வோர் நிறுவனத்திடம் புகார் அளிக்கலாம். புதிய விதிகளின்படி, மின் வணிக நிறுவனத்தின் குறைதீர் அதிகாரியிடம் பதிவு செய்யப்படும் புகாரின் நகலை புகார் அளித்தவருக்கு வழங்க வேண்டும். மேலும், மின் வணிக நிறுவனங்கள் தேசிய நுகர்வோர் உதவி மையத்துடன் இணைப்பு ஏற்படுத்த வேண்டும்.

2025-ம் ஆண்டில் தேசிய நுகர்வோர் உதவி மையத்துக்கு கிடைத்த 17.71 லட்சத்துக்கும் அதிகமான புகார்களில், சுமார் 5.11 லட்சம் புகார்கள் மின் வணிகம் தொடர்பானவை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதேபோல், குறிப்பிட்ட நோக்கங்களுக்காக நுகர்வோர் தகவல்களைப் பயன்படுத்துவதற்கு முன்பு, அவர்களின் வெளிப்படையான மற்றும் உறுதியான ஒப்புதலைப் பெற வேண்டும்.

இந்த புதிய மாற்றங்கள் 2027 ஜனவரி 1 முதல் அமலுக்கு வர உள்ளன. எனவே இனி ஆன்லைனில் பொருட்கள் வாங்கும்போது தள்ளுபடி விலை, தேடல் முடிவுகள், கூடுதல் கட்டணங்கள், பொருள் மற்றும் விற்பனையாளர் தகவல்கள் ஆகியவற்றை முன்பைவிட கவனமாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : Egg Puff : குக்கர்ல முட்டை பப்ஸ் செய்வது எப்படி? பேக்கரி டேஸ்ட்ல வீட்டிலேயே செய்யலாம்!

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

AM
Arun Mozhi Varman
Bio : அருண் மொழி வர்மன் மீடியா துறையில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவர். மக்கள் தொலைக்காட்சி, ஒன் இந்தியா, கிளான்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களில் பணியாற்றியுள்ள இவர், பல்வேறு தளங்களில் செய்தி, கட்டுரை மற்றும் சிறப்புப் பதிவுகளை வெளியிட்டுள்ளார். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் துணை ஆசிரியராக பணி புரியும் இவர் அரசியல், சமூக நிகழ்வுகள், வரலாறு, கலாச்சாரம் மற்றும் சினிமா உள்ளிட்ட துறைகளில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
ஷாப்பிங்
வணிகம்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Success Story : பாத்திரம் கழுவ ஆரம்பித்து ரூ.20,000 கோடி சொத்து சேர்த்த ராஜ் சர்தானா!
Recommended image2
Confirmed Train Ticket: ரயில் டிக்கெட் கன்ஃபார்ம் ஆகலையா? 60 நாள் விதி முதல் தட்கல் வரை இந்த ட்ரிக்ஸ் உதவும்
Recommended image3
UPI Charges: யுபிஐ கட்டணம் தவிர்க்க இந்த ட்ரிக் பயன்படுத்தாதீங்க! ஒரே கடைக்கு மீண்டும் பணம் அனுப்பினால் அலர்ட் வரும்
Related Stories
Recommended image1
Coconut Business : தேங்காயில் மாதம் ரூ.20 லட்சம் சம்பாதிக்கும் இல்லத்தரசி! வீட்டுத் தேங்காயை இப்படியும் பயன்படுத்தலாமா?
Recommended image2
Banana Waste : வீணாகும் வாழைத்தண்டில் இருந்து ரூ.2.5 கோடி பிசினஸ்! 3 நண்பர்களின் வேற லெவல் முயற்சி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved