முதலீடே தேவையில்லை! சேமிப்புக் கணக்கில் அதிக வட்டி கொடுக்கும் வங்கிகள்!
ஆர்பிஎல் வங்கி ரூ.25 லட்சம் முதல் ரூ.3 கோடி வரையிலான இருப்புகளுக்கு 7.5% வட்டி வழங்குகிறது. ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட், இண்டஸ்இண்ட், யெஸ், பந்தன் மற்றும் ஏயூ வங்கிகள் ரூ.10 லட்சத்திற்கு மேல் இருப்பு வைத்திருப்பவர்களுக்கு 7% வட்டி வழங்குகின்றன.

RBL Bank
ஆர்பிஎல் வங்கி
இந்த வங்கியின் சேமிப்பு கணக்கு வட்டி விகிதம் மிக உயர்ந்ததாக உள்ளது. 7.5 சதவீதம் வட்டி தரப்படுகிறது. இருப்பினும், இது ரூ.25 லட்சம் முதல் ரூ.3 கோடி வரையிலான இருப்புகளுக்குத்தான் பொருந்தும். ரூ.1 லட்சம் வரையிலான இருப்புகளுக்கு 3.5 சதவீதமும், ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையிலான வைப்புகளுக்கு 4.5 சதவீதமும் கிடைக்கும். ரூ.5-10 லட்சம் வரையிலான இருப்பைப் பராமரிக்கும் கணக்குதாரர்களுக்கு 5.5 சதவீதமும், ரூ.10-25 லட்சம் வரை பேலன்ஸ் வைத்திருப்பவர்களுக்கு 6.5 சதவீதமும் வட்டி வழங்கப்படுகிறது.
IDFC First Bank
IDFC ஃபர்ஸ்ட் வங்கி
ஐடிஎஃப்சி ஃப்ர்ஸ்ட் வங்கியும் 7.25 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது. இந்த வட்டியைப் பெற குறைந்தபட்ச இருப்புத் தொகை ரூ. 10 லட்சம் இருக்க வேண்டும்.
IndusInd Bank
இண்டஸ்இண்ட் வங்கி
இண்டஸ்இண்ட் வங்கி தினசரி ரூ.10 லட்சத்திற்கு மேல் இருப்பு வைத்திருக்கும் சேமிப்புக் கணக்குதாரர்களுக்கு 7 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது.
YES Bank
யெஸ் வங்கி
யெஸ் வங்கி தனது சேமிப்பு கணக்குதாரர்களுக்கு 7 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது. இதுவும் தினசரி ரூ.10 லட்சத்திற்கு மேல் இருப்புத்தொகையைப் பராமரிக்கும் வாடிக்கையாளர்களுக்குப் பொருந்தும்.
Bandhan Bank
பந்தன் வங்கி
பந்தன் வங்கியில் ஒவ்வொரு நாள் முடிவிலும் குறைந்தபட்சம் ரூ.10 லட்சம் பேலன்ஸ் இருப்பதை உறுதிசெய்யும் வாடிக்கையாளர்கள் சேமிப்புக் கணக்கில் 7 சதவீதம் வட்டியைப் பெறலாம்.
AU Bank
ஏயூ வங்கி
இந்த சிறு நிதி வங்கி சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஆண்டுக்கு 7 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது. இந்த வட்டி விகிதத்தைப் பெற குறைந்தபட்சம் ரூ. 10 லட்சம் இருப்பு வைத்திருக்க வேண்டும்.