- Home
- Business
- இளைஞர்களுக்கு ரூ,10 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை கடனை வாரி வழங்கும் அரசு - 65% கட்டினால் போதும்
இளைஞர்களுக்கு ரூ,10 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை கடனை வாரி வழங்கும் அரசு - 65% கட்டினால் போதும்
புதியதாக தொழில் தொடங்க விரும்புவோருக்கு இது ஒரு நல்ல செய்தி. இளம் தொழில்முனைவோரை ஊக்குவிக்க மத்திய அரசு ஒரு அற்புதமான திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. இதில் நீங்கள் எடுக்கும் கடன் தொகையில் 35 சதவீதம் வரை மானியம் கிடைக்கும். இந்த அற்புதமான திட்டத்தைப் பற்றி மேலும் விவரங்களை அறிந்து கொள்வோம்.

இளைஞர்களுக்கு ரூ,10 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை கடனை வாரி வழங்கும் அரசு
இன்றைய இளைஞர்கள் வேலைகளை விட சொந்த தொழில் செய்யவே விரும்புகிறார்கள். குறைந்த சம்பளம், அதிக நேரம் வேலை செய்ய வேண்டியிருப்பதால் சொந்த தொழிலில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இதுபோன்ற இளைஞர்களை ஊக்குவிக்க மத்திய அரசு ஒரு சிறந்த திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. அந்த திட்டத்தின் பெயர் பிரதான் மந்திரி வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (PMEGP).
பிரதான் மந்திரி வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்
புதியதாக தொழில் தொடங்க விரும்புவோர் இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தால், உங்களுக்கு வழங்கப்படும் கடன் தொகையில் 35% வரை மானியம் கிடைக்கும். மானியம் சரியாக கிடைக்க நீங்கள் செய்ய வேண்டியது திட்ட அறிக்கையை சரியாக தயாரிப்பதுதான். ஏனென்றால் வங்கிகள் கடன் வழங்கும்போது அனைத்து வகையான சான்றிதழ்களையும் மிகவும் கவனமாக ஆய்வு செய்யும்.
மானியக்கடன்
நீங்கள் சேவைத் துறையில் தொழில் தொடங்க விரும்பினால் PMEGP திட்டத்தின் கீழ் வங்கிகள் ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கும். அதாவது தையல், முடிதிருத்தம், மருத்துவக் கடை, சூப்பர் மார்க்கெட் போன்ற மக்களுக்கு சேவைகள் வழங்கும் தொழிலைத் தொடங்க விரும்பினால் ரூ.10 லட்சம் கடன் பெறலாம். இந்த ரூ.10 லட்சம் கடனுக்கு 35% வரை மானியம் கிடைக்கும்.
தொழில் கடன்
நீங்கள் உற்பத்தித் துறையில் தொழில் தொடங்க விரும்பினால் ரூ.25 லட்சம் வரை கடன் வழங்கப்படும். அதாவது எந்த வகையான பொருட்களையும் தயாரிக்கும் தொழிலுக்கு இந்த கடன் வழங்கப்படும். இதிலும் 35 சதவீதம் வரை மானியம் பெற வாய்ப்புள்ளது.
தொழில் தொடங்குவதற்கான மானியக்கடன்
PMEGP திட்டம் புதிதாக தொழில் தொடங்குபவர்களுக்கு மட்டுமல்ல. ஏற்கனவே தொழில் தொடங்கி அதை விரிவுபடுத்த நினைப்பவர்களுக்கும் இந்த திட்டத்தின் கீழ் கடன் வழங்கப்படும். நீங்கள் இந்த கடனைப் பெற விரும்பினால் உங்கள் அருகிலுள்ள வங்கிகளுக்குச் சென்று PMEGP திட்டத்தைப் பற்றி மேலும் விவரங்களை அறிந்து விண்ணப்பிக்கவும்.
மேலும் படிக்க பிப்ரவரி 1 முதல் G Pay, Phone Peல் UPI பரிவர்த்தனைகள் செயல்படாது. ஏனென்றால்..