Yamaha R15 vs KTM RC 160.. எந்த ஸ்போர்ட்ஸ் பைக் மாஸ் தெரியுமா? முழு விபரம் இதோ
இந்தியாவின் ஸ்போர்ட்ஸ் பைக் சந்தையில் யமஹா R15-க்கு போட்டியாக கேடிஎம் RC 160 களமிறங்கியுள்ளது. செயல்திறன், அம்சங்கள், மைலேஜ் மற்றும் விலை ஆகியவற்றில் இந்த இரண்டு பைக்குகளுக்கும் இடையே உள்ள வித்தியாசங்களை இந்த ஒப்பீடு விளக்குகிறது.

Yamaha R15க்கு போட்டியாக வந்த KTM RC 160
இந்தியாவின் Entry-level Sports Bike சந்தையில் யமஹா ஆர்15 பல ஆண்டுகளாக தனி இடத்தை பிடித்துள்ளது. ஆனால் தற்போது கேடிஎம் ஆர்சி 160 வருகையால் போட்டி மேலும் சூடுபிடித்துள்ளது. இளைஞர்களை குறிவைத்து இந்த இரண்டு பைக்குகளும் ஸ்டைல், பவர் மற்றும் Performance-ல் வித்தியாசமான அனுபவத்தை வழங்குகின்றன.

செயல்திறன் ஒப்பீடு
கேடிஎம் ஆர்சி 160-ல் 164.2cc Liquid-Cooled Engine வழங்கப்பட்டுள்ளது. இது 18.74hp ஆற்றல் மற்றும் 15.5Nm முறுக்குவிசை உருவாக்குகிறது. மறுபுறம் யமஹா ஆர்15 V4-ல் 155cc இன்ஜின் இடம்பெற்றுள்ளது. இது 18.14hp பவர் மற்றும் 14.2Nm டார்க் வழங்குகிறது. இரு பைக்குகளிலும் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
Features-ல் யார் மாஸ்?
கேடிஎம் ஆர்சி 160-ல் TFT டிஸ்ப்ளே, LED லைட்டிங், டூயல் சேனல் ABS போன்ற பிரீமியம் அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. சில மாறுபாடுகளில் Quick Shifter மற்றும் ட்ரான்ஸாக்சன் கண்ட்ரோல் வசதிகளும் கிடைக்கின்றன. யமஹா ஆர்15 எளிமையான ஆனால் பயனுள்ள அம்சங்கள் மூலம் தினசரி பயன்பாட்டிற்கு ஏற்றதாக உள்ளது.
மைலேஜ் மற்றும் விலை வித்தியாசம்
யமஹா ஆர்15-ன் பெரிய பலம் அதன் மைலேஜ். இந்த பைக் சுமார் 55 முதல் 60 kmpl வரை மைலேஜ் தரும் என குறிப்பிடப்பட்டுள்ளது. கேடிஎம் ஆர்சி 160 சுமார் 36 kmpl மைலேஜ் வழங்குகிறது. விலையைப் பார்த்தால் ஆர்15 ரூ.1.56 லட்சம் முதல் தொடங்குகிறது. கேடிஎம் ஆர்சி 160 விலை சுமார் ரூ.1.85 லட்சம் ஆகும்.
எந்த பைக் யாருக்கு பொருத்தம்?
தினசரி ஆபிஸ், கல்லூரி மாணவர்கள் மற்றும் குறைந்த பராமரிப்பு விரும்புபவர்களுக்கு யமஹா ஆர்15 சிறந்த தேர்வாக பார்க்கப்படுகிறது. ஆனால் ஆக்ரஸிவ் ஸ்டைலிங், பவர்ஃபுல் பிக்கப் மற்றும் சூப்பர்ஸ்போர்ட் ஃபீல் விரும்பும் ரைடர்களுக்கு கேடிஎம் ஆர்சி 160 அதிக ஈர்ப்பை ஏற்படுத்துகிறது. இரண்டு பைக்குகளும் தனித்தன்மை கொண்டவை என்பதால், பயனாளியின் தேவையை பொறுத்தே சரியான தேர்வு அமையும்.

