மழைக்குப் பிறகு கார் ஸ்டார்ட் ஆகலையா? சரிசெய்ய சிம்பிள் வழி இருக்கு!
Car starting trouble after heavy rain: மழைக்குப் பின் கார்கள் ஸ்டார்ட் ஆகாமல் இருப்பதற்கு ஸ்பார்க் பிளக், பேட்டரி மற்றும் ஏர் ஃபில்டரில் ஈரப்பதம் காரணமாக இருக்கலாம். இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க செய்யவேண்டியது என்ன என்று பார்க்கலாம்.
Car starting trouble after a heavy rain
மழைக்கு பின் நான்கு சக்கர வாகனங்கள் புறப்படுவதில் சிரமம் ஏற்படுகிறது. மின் அமைப்பில் ஈரப்பதம் ஏற்படுவது இந்தப் பிரச்சினைக்குக் காரணமாக இருக்கலாம். தண்ணீர் உள்ளே சென்றிருந்தாலும் இந்தச் சிக்கல் ஏற்படலாம். இதற்கு என்ன தீர்வு என்று தெரிந்துகொள்ளலாம்.
Spark plug Car starting trouble
ஸ்பார்க் பிளக்கில் ஈரப்பதம்: பிளக் மற்றும் அதன் வயர்களில் ஈரப்பதம் இருக்கலாம். அதன் காரணமாக என்ஜின் ஸ்டார்ட் ஆகாது. இந்த சூழ்நிலையைத் தவிர்க்க, வாகனத்தை எப்போதும் ஒரு கூறையின் கீழ் நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால், மழை பெய்யும்போது வாகனத்தை வாட்டர் ப்ரூஃப் கவர் வைத்து மூட வேண்டும்.
Car starting trouble due to Battery issue
பேட்டரி பிரச்சனை: மழையில் கார் பேட்டரி பலவீனமாக இருக்கலாம் அல்லது ஈரப்பதம் காரணமாக இணைப்பு பலவீனமாக இருக்கலாம். சில நேரங்களில் மழையின்போது பேட்டரி சேதமடைய வாய்ப்பு உள்ளது. இதனால் காரை ஸ்டார்ட் செய்வது கடினமாகிவிடும். இதுபோன்ற நிலையை தவிர்க்க, மழைக்காலத்தில் வாகனங்களை நீண்ட நேரம் வெளியில் நிறுத்தி வைக்கக் கூடாது.
Air Filter
ஏர் ஃபில்டரில் தண்ணீர்: மழையால் ஏர் ஃபில்டர் ஈரமாகிவிடலாம். இதன் காரணமாக என்ஜினுக்கு சரியான காற்று கிடைக்காமல் ஸ்டார்ட் செய்வது சிரமமாக இருக்கும். இதுபோன்ற சூழலில் ஒரு மெக்கானிக்கை அணுகுவதுதான் வழி. அவர் ஏர் ஃபில்டரில் இருந்து தண்ணீரை வெளியேற்றிய பிறகுதான் காரை ஸ்டார்ட் செய்ய முடியும்.
Fix car spark plug
ஸ்பார்க் பிளக் பிரச்சினைக்குத் தீர்வு: ஸ்பார்க் பிளக் மற்றும் வயர்களை சரிபார்த்து, ஈரப்பதம் இருந்தால் அதை சுத்தம் செய்து உலர வைக்கவும். இதற்கு உலர்ந்த துணி மற்றும் ஊதுகுழலைப் பயன்படுத்தலாம்.
Fix the car battery problem
பேட்டரி சிக்கலைத் தீர்க்க: பேட்டரி டெர்மினல்களை சுத்தம் செய்து, அவற்றில் துரு இல்லை என்பதை உறுதிப்படுத்தவும். சரியான இணைப்பை உறுதிசெய்ய டெர்மினல்களை இறுக்கவும்.
Car Air Filter Issue Solution
ஏர் ஃபில்டரை சரிசெய்ய: ஈரமான ஏர் பில்டர் இருந்தால் தேவையான அளவு காற்று எஞ்சினுக்குள் செல்வது தடைபடும். எனவே ஏர் பில்டர் ஈரமாக இருந்தால் அதை சுத்தம் செய்ய வேண்டும் அல்லது மாற்றவும் வேண்டியிருக்கலாம். இதற்கு மெக்கானிக் உதவியை நாட வேண்டும்.